Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிறங்கடித்த கிருஷ்ணகிரி.. பாலியல் அக்கிரமம் நடந்த பள்ளி திறப்பு.. சிபிஐ-க்கு மாறுதா மாணவி கேஸ்? பரபர

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடத்தப்பட்ட போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த ஆகஸ்ட் 5 முதல் 9 வரை தேசிய மாணவர் படையின் (என்சிசி) பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கலையரங்கில் தங்கியிருக்கிறார்கள்.

Krishnagiri MHC

மாணவி: இந்நிலையில், ஆகஸ்ட் 9 அன்று கலையரங்கில் வழக்கம்போல் தூங்கிக்கொண்டிருந்த 13 வயது மாணவிக்கு, அதிகாலை 3 மணியளவில், தேசிய மாணவர் படையின் பயிற்றுநர் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் பாலியல் தொல்லை தந்துள்ளார்..

பிறகு இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், பர்கூர் மகளிர் போலீசார், பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனிஃபர், தாளாளர் சாந்தன், என்சிசி பயிற்றுநர்களான சக்திவேல், இந்து, சத்யா, சுப்பிரமணி மற்றும் சிவராமன் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர்.. இதில், சிவராமன், 13 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாகவும் கூறப்படுகிறது.. ஆனால், கைதாவதற்கு ஒரு நாளைக்கு முன்பு கைதுக்கு பயந்து, சிவராமன் எலி பேஸ்ட்டை தின்று, இறந்துவிட்டார்..

விசாரணை : அதேபோல, காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், அனுமதி இல்லாமல் போலியாக என்சிசி முகாம் நடத்தியது தெரியவந்ததையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்காக காவல்துறை புலனாய்வு ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்புக் குழுவும் உருவாக்கப்பட்டது.

இதற்கு நடுவில், சிவராமனின் அப்பாவும் சாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சிவராமனின் மரணம் திட்டமிட்டே குற்றவாளிகளை தப்பிக்க வைக்க நடைபெற்றதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.

உயர்நீதிமன்றம்: இந்தச் சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக ஹைகோர்ட் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனக்கோரி காங்கிரஸ் வழக்கறிஞரான ஏ.பி. சூர்யபிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வில் முறையீடு செய்தார். இதற்கு நீதிபதிகள், இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டால் விசாரிக்கப்படும், என்றனர்..

இதையடுத்து வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் இதுதொடர்பாக வழக்கு தொடரவுள்ளதாகவும், அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் நீதிபதிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இன்று வழக்கு: இப்படிப்பட்ட சூழலில், கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் அல்லது சிறப்புக் குழு விசாரணை செய்தால் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்புள்ளது.. எனவே, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கானது, இன்று ஆகஸ்ட் 27ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

இதனிடையே, இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்றைய தினம் மேலும் 2 இரண்டு பேரை சிறப்புப் புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர்.. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார், கிருஷ்ணகிரியை சேர்ந்த கமல் என இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியிருந்த நிலையில், இருவரையும் போலீசார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.. இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு மூடப்பட்ட தனியார் பள்ளி, இன்று மறுபடியும் திறக்கப்பட்டது. பள்ளியின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள் அடிப்படையில் பள்ளியை திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்ஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பள்ளி திறக்கப்பட்டது.

பள்ளியின் செயல்பாடுகளை கண்காணிக்க பல்நோக்கு குழுவின் வழிகாட்டுதல் அடிப்படையில் மேற்பார்வை குழு ஒன்றும் இதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது.. 2 மாவட்ட கல்வி அலுவலர், 2 வட்டார கல்வி அலுவலர், 2 வட்டார வள ஆசிரியர் பயிற்றுநர் மேற்பார்வையில் இன்று காலை பள்ளி திறக்கப்பட்டது..

இன்று பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி முன்னதாக, பள்ளியின் வகுப்பறைகள், அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் 38 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தன.. பல்நோக்கு குழு சார்பில், சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களுக்கு பல்வேறு கட்ட உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கப்பட்ட பின் இன்று பள்ளி திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+