ஓசூரில் வாடகை வீட்டில் காதல் ஜோடி.. தம்பதி போல வாழ்க்கை.. ஒரே நாளில் ஆடிப்போன கிருஷ்ணகிரி, சென்னை
கிருஷ்ணகிரி: கணவன், மனைவி என்று 2 காதல் ஜோடிகள் பொய் சொல்லி உள்ளார்கள்.. சொந்த ஊரை விட்டு பிரிந்து சென்று, வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்துள்ளனர்.. அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.. ஒரே நாளில் 4 பேர் எடுத்த முடிவுகள், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் கையில் எடுத்துள்ளனர்.. என்ன நடந்தது?
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்தவர் தினேஷ்.. இவருக்கு 23 வயதாகிறது.. இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்..

இவர் பவானி என்ற 22 வயது பெண்ணை காதலித்து வந்தார்.. திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை சேர்ந்தவர் பவானி.. ஓசூரில் உள்ள இன்னொரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.. இவரும் தினேஷை காதலித்தார்.. அந்தவகையில், ஒரு வருட கால காதல் இது.
ஓசூரில் வாடகை வீடு
இருவருமே சொந்த ஊரை விட்டு, ஓசூரில் வேலை பார்ப்பதால், ஓசூர் முக்கண்டப்பள்ளி பகுதியிலேயே கணவன், மனைவி என்று சொல்லி, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். இந்நிலையில், சம்பவத்தன்று இவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு வலுத்துள்ளது.. இதனால், பவானி கோபித்துக்கொண்டு, வீட்டை விட்டு சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து, பவானிக்கு செல்போன் செய்த தினேஷ், நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டு, போனை துண்டித்து விட்டார்.. இதனால் அதிர்ச்சியடைந்த பவானி, உடனே தினேஷூக்கு போன் செய்துள்ளார்.. ஆனால், ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.. இதனால் பதறிப்போன பவானி, உடனடியாக வீட்டுக்கு ஓடிவந்தார்.. ஆனால், அதற்குள் தினேஷ் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்..
போனை துண்டித்த பவானி
இதனை கண்டு பவானி கதறி கதறி அழுதார்... அவரால் அந்த அதிர்ச்சியில் இருந்தும், தினேஷின் பிரிவிலிருந்தும் மீள முடியாமல், அழுது கொண்டேயிருந்தார்.. இறுதியில் தானும் தற்கொலை செய்வதென முடிவெடுத்தார் பவானி.. உடனே தன்னுடைய நண்பர்களுக்கு போன் செய்து, நடந்த விஷயங்களையெல்லாம் சொன்னார்.. பிறகு டக்கென போனை துண்டித்துவிட்டு, அவரும் அதே இடத்தில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அடுத்தடுத்த நடந்த தற்கொலைகளால் இரு குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.. இது தொடர்பான விசாரணையை ஓசூர் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
அபிநயா இலக்கியம் மாணவி
இதே போன்று விழுப்புரத்திலும் ஒரு தற்கொலை சம்பவம் நடந்துள்ளது.. திருவெண்ணெய்நல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற 19 வயது மாணவர், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் பிஎஸ்சி 2ம் வருடம் படித்து வந்தார். அதே கல்லூரியில் அபிநயா என்ற மாணவி, ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். இருவரும் காதலித்து வந்தனர்..
தற்காலிகமாக வேலை செய்ய செய்வதற்காக சென்னை செல்வதாக இருவருமே அவரவர் வீட்டில் பொய் சொல்லிவிட்டு விழுப்புரத்திலிருந்து கிளம்பினார்கள்.. புதிதாக திருமணமான ஜோடி என்று சொல்லி, பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
ஜன்னல் வழியாக பார்த்தபோது
நேற்று முழுவதுமே இவர்கள் வீட்டுக் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, ஆகாஷ் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். உடனே போலீசுக்கு தகவல் தந்து வரவழைத்து, வீட்டிற்குள் சென்றால், அவருக்கு பக்கத்திலேயே அபிநயாவும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்..
இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, அபிநயாவை கொன்று, ஆகாஷ் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.. இது தொடர்பான விசாரணையையும் முடுக்கிவிட்டுள்ளனர்.. ஒரே நாளில், காதல் ஜோடி என்ற பெயரில் வீடு எடுத்து தங்கி, தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவங்கள் அந்தந்த மாவட்டங்களில் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.












Click it and Unblock the Notifications