கிருஷ்ணகிரி ஷாலினியால் வில்லங்கம்.. 3வது கணவர், 2வது மனைவியின் மாஸ்டர் ப்ளான்! பலே புலியூர் காதலி
கிருஷ்ணகிரி: ஷாலினிக்கு 3வது கணவருடனும், தம்பிதுரைக்கு 2வது மனைவியுடனும் இருந்த காதல், ரணகளத்தில் முடிந்துள்ளது.. 2 கணவர்களையும் பிரிந்து, 3வதாக இன்னொருவருடன் வாழ்ந்து வந்த நர்ஸின் வாழ்க்கை துயரத்தில் முடிந்துள்ளது.. இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் மிகுந்த பரபரப்பை தந்து வருகிறது. கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ஷாலினி.. 24 வயதாகிறது.. நர்ஸ் வேலையில் உள்ளார்.. இவரது கணவர் பெயர் சபரி .. இவரும் அதே கிராமத்தை சேர்ந்தவர்..

சில வருடம் முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. ஆனால், அடுத்த 6 மாதத்திலேயே, அதே கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் ஷாலினிக்கு நட்பு ஏற்பட்டது. இதனால், தம்பதிக்குள் பிரச்சனை வெடித்தது.
கணவரை பிரிந்த ஷாலினி
ஒருகட்டத்தில், கணவரை விட்டுப்பிரிந்த ஷாலினி, பிரகாஷை 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.. 2 வருடம் 2வது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், இந்த தம்பதிக்குள் தகராறு வெடித்தது.. இதனால் 2வது கணவர் பிரகாஷையும் விட்டு பிரிந்தார் ஷாலினி..
ஹோம் நர்ஸ் வேலைக்காக கோயம்புத்தூர் சென்ற ஷாலினி, வீடு வாடகைக்கு எடுத்து குழந்தையுடன் தனிமையில் வசித்து வந்தார்.. அப்போது போச்சம்பள்ளியை சேர்ந்த தம்பிதுரை என்ற 37 வயது நபருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது..
2 திருமணம் செய்து தோல்வியடைந்த நிலையில், தம்பிதுரையுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார் ஷாலினி.. கோவையில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் தம்பிதுரைக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி நிர்மலா, குழந்தைகள் உள்ளனர்.
நிர்மலாவின் சந்தேகம்
தொடர்ந்து கோவையில் வேலை பார்த்து வந்தாலும், கோவையிலிருந்து சொந்த ஊர் திரும்பிய ஷாலினி, புலியூர் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 2 மாதங்களாக வசித்து வருகிறார்.. அதாவது, தன்னுடைய மனைவி நிர்மலா வீட்டுக்கும், ஷாலினி வீட்டுக்கும் இந்த 2 மாதங்களாகவே மாறி மாறி சென்று தங்கியிருக்கிறார் தம்பிதுரை. இதனால் நிர்மலாவுக்கு சந்தேகம் அதிகமானது.. எனவே, வீட்டில் தொடர்ந்து தங்காமல் வெளியே எங்கே செல்கிறார் என்று கண்காணிக்க ஆரம்பித்தார்..
அந்தவகையில், கடந்த 13ம் தேதி கணவர் தம்பிதுரை எங்கே செல்கிறார் என நோட்டமிடுவதற்காக தனது உறவினர்கள் 10 பேருடன் காரில் அவருக்கு தெரியாமல் நிர்மலா பின்தொடர்ந்து சென்றிருக்கிறார்.
புலியூர் காதலி
அப்போதுதான் புலியூரில் காதலி ஷாலினி வீட்டுக்கு தம்பிதுரை சென்றது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். ஷாலினி வீட்டுக்குள் நுழைந்த நிர்மலாவும், உறவினர்களும் கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். அப்போது ஷாலினிக்கும் தம்பிதுரைக்கும் இடையே இருந்த தகாத உறவு தெரியவந்துள்ளது. இதனால் ஷாலினி, தம்பிதுரை கள்ள ஜோடியை, நிர்மலாவும் உறவினர்களும் சரமாரியாக தாக்கினார்கள்..
இந்த சத்தம் கேட்டு, அந்த வீட்டின் உரிமையாளர் ஓடிவந்தார்.. இருவரும் தம்பதி என்றதால்தான் வீட்டை வாடகைக்கு விட்டதாக கூறி, உடனே வீட்டை காலி செய்யும்படி சத்தமிட்டார். இதனால், வீட்டிலிருந்த பொருட்களை காரில் ஏற்றிய நிர்மலா தரப்பினர், தம்பிதுரை, ஷாலினி , குழந்தையையும் காரில் ஏற்றி, இருவரையும் காருக்குள்ளேயே வைத்து தாக்கியிருக்கிறார்கள்.
வாயில் விஷத்தை ஊற்றி
பிறகு ஆனந்தூர் கிராமத்திற்கு சென்று, ஷாலினி வாயில் விஷத்தை திணித்து ஊற்றினாராம் நிர்மலா.. இதில் மயங்கி விழுந்த ஷாலினியை 108 ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தம்பிதுரையை மட்டும் தங்களுடன் அழைத்து சென்றுவிட்டார் நிர்மலா.
இதனிடையே, மருத்துவமனையில் ஷாலினிக்கு தீவிர சிகிச்சை நடந்து, உயிர் பிழைத்தார்.. பிறகு ஷாலினி போச்சம்பள்ளி போலீசாரிடம் இதுகுறித்து புகார் செய்தார்.. போலீசாரும் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த நிர்மலா, தம்பிதுரையை கைது செய்தனர்.. தம்பிதுரையின் அண்ணி மதினா, சித்தி சுதா மற்றும் அடையாளம் தெரியாத 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களையும் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications