Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஏஓ டூ தாசில்தார்.. 7 சென்ட் நிலத்துக்கு தனிப்பட்டா.. கிருஷ்ணகிரி சர்வேயர் பிடிவாதம்.. இப்ப பாருங்க

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: தன்னுடைய மகனுக்காக 7 சென்ட் நிலத்தை வாங்கி, அதை அளந்து, தனி பட்டா செய்து தரக்கோரி, ஆன்லைனிலும் பவு செய்துள்ளார் கிருஷ்ணகிரி நபர்.. ஆனால், இதற்கு தனிப்பட்டா கடைசிவரை கிடைக்கவேயில்லை.. என்ன காரணம் தெரியுமா?

தமிழக வருவாய்த்துறை, பதிவுத்துறைகளில் நாளுக்கு நாள் லஞ்ச புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன.. இந்த துறைகளின் சில அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை லஞ்சம் வாங்கி பொதுவெளியில் அசிங்கப்பட்டு வருகிறார்கள். அத்துடன் கையும் களவுமாக ஆதாரங்களுடன் சிக்கி, சுற்றி வளைக்கப்பட்டு கைதாகியும் வருகிறார்கள்.

surveyor vao

சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உட்பட பெண்களுக்கு வழங்கும் விதவைத்தொகை வரை அனைத்திலுமே லஞ்சம் கேட்கும் போக்கு நிலவி கொண்டிருக்கிறது. பாடுபட்டு உழைத்த தங்கள் சொத்துக்கு, எதற்காக லஞ்சம் தரவேண்டும்? என்ற மனப்பான்மை மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதனால் நேரடியாகவே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு போனை போட்டு , புகார்களை சொல்ல துவங்கிவிட்டார்கள்.

பெண் அதிகாரிகள்: அதனால்தான், லஞ்சம் வாங்கும் பெண் அதிகாரிகளும் கைதாகி கொண்டிருக்கிறார்கள்.. குறிப்பாக, விஏஓ-க்கள், சர்வேயர்கள், தாசில்தார்கள் தான் அதிக அளவில் சிக்குகிறார்கள்.. இவர்களுக்கெல்லாம் உதவும் புரோக்கர்களும், எழுத்தர்களும்கூட வசமாக மாட்டிக் கொள்கிறார்கள். 2 நாளைக்கு முன்பு பெண் விஏஓ பத்மாவதி, பட்டா மாறுதலுக்கு 4800 ரூபாய் லஞ்சம் கேட்டு கைதானார்..

இந்த லஞ்சம் வாங்கிய புகாரில், பெண் கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதியை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்திருந்தனர். நேற்றைய தினம், பிளான் அப்ரூவலுக்கு லஞ்சம் கேட்ட பரமக்குடி அதிகாரியும் கைதானார்.. இதோ இன்று கிருஷ்ணகிரி சர்வேயர் சிக்கியிருக்கிறார்.

தனிப்பட்டா: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த திம்மாபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் நாகராஜன்.. இவருக்கு 55 வயதாகிறது.. பர்கூர் அடுத்த வெங்கடாபுரத்தில், தன்னுடைய மகன் ஹரிகரன் பெயரில், 7 சென்ட் நிலம் வாங்கினார்.. இந்த நிலத்தை அளந்து, தனி பட்டா செய்து தரக்கோரி, ஆன்லைனிலும் பதிவு செய்தார்...

ஆனால், தனிப்பட்டா மாற்றத்திற்கு காலதாமதம் ஏற்பட்டு கொண்டேயிருந்தது.. அதனால், பர்கூர் தாலுகா அலுவலகத்துக்கு நேரடியாகவே சென்று விசாரிக்க முயன்றுள்ளார்.. அப்போது பணியிலிருந்த சர்வேயர் குமரன் என்பவரை சந்தித்து நிலத்தை அளந்து, தனிப்பட்டா செய்து தர கோரினார்..

சர்வேயர்: அதற்கு சர்வேயர் குமரனும், இடைத்தரகரான கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளி எம்ஜிஆர்நகரை சேர்ந்த சுஹேல் (30) என்பவரும், இடத்தை அளந்து தர வேண்டுமானால் 9,000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.. அவ்வளவு தொகையை தன்னால் தர முடியாது என்று சொல்லியும், சர்வேயர் 9000 ரூபாயில் கறாராக இருந்துள்ளனர்..ஆனால், அந்த பணத்தை கொடுக்க விரும்பாத நாகராஜன், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

பிறகு அதிகாரிகள் ஆலோசனைபடி, ரசாயனம் தடவிய, 9,000 ரூபாயை, பர்கூர் தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்த சுஹேலிடம், நாகராஜ் கொடுத்தார். அவர், அந்த தொகையை சர்வேயர் குமரனிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் பிரபு, எஸ்ஐ விஜயகுமார் மற்றும் போலீசார், இருவரையுமே அதிரடியாக கைது செய்தனர்.

ஜி-பே பணம்: கைதாகியிருக்கும் சர்வேயர் குமரனுக்கு 45 வயதாகிறது.. திருப்பத்தூரை சேர்ந்தவராம்.. நேரடியாக பணம் வாங்கினால் சிக்கலாகிவிடும் என்று புரோக்கர்கள் மூலம் பணம் பெறும் அதிகாரிகளும், சிக்கிவிடுகிறார்கள்.. நேற்றைய தினம் பரமக்குடி பிளான் அப்ரூவலுக்கு 20 ஆயிரம் ரூபாய் லஞ்சப்பணம் ஜி-பே மூலம்தான் பெறப்பட்டுள்ளது,. இந்த ஜி-பே ஆதாரத்தில்தான், பரமக்குடி அதிகாரி கைதானது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+