கிருஷ்ணகிரி ஆசிரியருக்கு வந்த சபலம்.. சென்னை தொழிலதிபரும் விடலயே.. அரசு வேலையில் இருந்துமா இப்படி?
கிருஷ்ணகிரி: சென்னை தொழிலதிபர் காணாமல் போய்விட்டதால், தனிப்படை வைத்து போலீசார் தேடி வந்தனர். இறுதியில் 3 பேரை கைது செய்துள்ளனர்.
சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வரும் தம்பதி வெங்கடேசன்.. இவரது மனைவி பெயர் லட்சுமி.. 48 வயதாகிறது.. இவர்களுக்கு சந்தோஷ் (20), சந்திரகுமார் (16) என்ற மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சந்தோஷ் பிடெக் படித்து வருகிறார். சந்திரகுமார் பிளஸ் 2 இப்போதுதான் எழுதி முடித்திருக்கிறார்.

திடீர் பணக்காரர்: வாகனம் தயாரிப்பு கம்பெனி வேலையை உதறித்தள்ளிய வெங்கடேசன், திடீரென தேங்காய் வியாபாரத்திற்கு மாறினார்... இதற்கு பிறகு தன்னை "தொழிலதிபர்" என்று பலரிடமும் சொல்லி கொண்டார். பிறகு தனக்கு எல்லா அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் நெருக்கம் என்று தம்பட்டம் அடித்தார்.. இதையே சாக்காக வைத்து, அரசு வேலை வாங்கி தருவதாக சொல்லி, பலரிடம் பணம் வசூலிக்கவும் துவங்கினார்.
இப்படிப்பட்ட சூழலில், வெங்கடேசனின் 2வது மகன் சந்திரகுமார், கடந்த 5ம் தேதி நீட் தேர்வு எழுதியிருக்கிறார். இந்த தேர்வு எழுதுவதற்காக, சந்திரகுமாரை தேர்வு மையத்திலும், மூத்த மகன் சந்தோஷையும் கல்லூரியிலும், காரில் இறக்கிவிட்ட வெங்கடேசன், நிலம் கிரயம் தொடர்பாக சேலம் வரை சென்று வருவதாக சொல்லி, தன்னுடன் லட்சுமியையும் அழைத்துக் கொண்டு சென்றார்.
செல்போன்: அன்றைய தினம் மாலை தங்களை காரில் பிக்கப் செய்துகொள்ள சொன்ன அப்பா இன்னும் வராததால், மகன்கள் இருவரும் போன் செய்துள்ளனர். ஆனால், போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.. எப்போதுமே, வெங்கடேசன் எங்கு சென்றாலும், இரவு வீட்டுக்கு வந்துவிடுவது வழக்கமாம்.
வெளியில் ஒருநாளும் தங்கியதில்லை என்பதால், அதிர்ச்சியடைந்த மகன்கள், கடந்த 7ம் தேதி, குன்றத்தூர் போலீசில் புகார் தந்தார்கள்.. போலீசாரும் வெங்கடேசன் தம்பதியை தேட துவங்கினார்கள்.
அப்போதுதான், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சுன்னாலம்பட்டியைச் சேர்ந்த ஆசிரியர் கணேசன் என்பவருக்கும், வெங்கடேசனுக்கும் நிலப்பிரச்சனை இருந்தது வந்ததும், ஒருவேளை பணத்திற்காக கடத்தி சென்றிருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.. எனவே, ஊத்தங்கரையில் கணேசனின் தோட்டத்து வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். அங்கிருந்த ஆசிரியர் கணேசன், பொள்ளாச்சி நித்தியானந்தம், சேலத்தை சேர்ந்த விக்னேஷ் என 3 பேரையுமே கைது செய்தனர்.
நம்பி மோசம்: அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அரசு வேலை வாங்கி தருவதாக வெங்கடேசன் பேச்சை நம்பி, ஆசிரியர் கணேசனும் மோசம் போய்விட்டாராம்..
வேலைக்காக பலரிடம் பணம் வாங்கிய சுமார் ரூ12 கோடி வரை வெங்கடேசனிடம் கொடுத்திருக்கிறார.. பணத்தை பெற்றுக்கொண்ட வெங்கடேசன், பணி நியமன ஆணைகளை, கணேசனிடம் தந்துள்ளார்.. சம்பந்தப்பட்டவர்களும், வேலையில் சேர போனபோதுதான் தெரிந்தது, அந்த நியமன ஆணைகள் எல்லாமே போலியானதாம்.
சித்ரவதை: அப்போதுதான் வெங்கடேசனால் மோசமாக ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று கணேசன் உணர்ந்தார். எத்தனையோ முறை வெங்கடேசனை தொடர்பு கொண்டு, கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டும், வெங்கடேசன் பணத்தை தராமல் அலைக்கழித்து வந்திருக்கிறார்..
அதனால்தான்,வெங்கடேசன்- லட்சுமி தம்பதியை கடத்தி வந்து, தோட்டத்து வீட்டில் தனித்தனி ரூமில் அடைத்து வைத்து, நிலத்தை எழுதி தரும்படி கேட்டாராம். இதற்கு வெங்கடேசன் மறுக்கவும், கடுமையாக அடித்து அவரை சித்ரவதை செய்துள்ளார் கணேசன்.
லட்சுமி: மிக மோசமாக தாக்கியதில், கடந்த 6ம் தேதியே வெங்கடேசன் இறந்துவிட்டாராம்.. ஆனால், இது பக்கத்து ரூமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த லட்சுமிக்கு தெரியாது. மனைவிக்கு தெரியாமலேயே வெங்கடேசன் உடலை, தைல மரத்திற்கு அடியில், குழி தோண்டி புதைத்து விட்டார்களாம். பிறகு லட்சுமியிடம் நிலத்தை எழுதி கேட்டு, டார்ச்சர் செய்திருக்கிறார்கள்.
அடி தாங்க முடியாமல், நிலத்தை எழுதி கொடுக்க ஒப்புக்கொண்டாராம் லட்சுமி. ஆனால், 2 மகன்களும் அதில் கையெழுத்து போட்டால்தான், கிரயம் செய்ய முடியும் என்று லட்சுமி சொல்லிவிட்டாராம். எனவே, 2 மகன்களையும் கடத்துவது என்ற பகீர் முடிவுக்கு ஆசிரியர் கணேசன் வந்துள்ளார். ஆனால், அதற்குள் போலீசில் சிக்கியிருக்கிறார்.
பரிதாபம்: இவ்வளவும் போலீசார் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, வெங்கடேசனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. சடலத்தை நின்ற நிலையில் வைத்து புதைத்திருப்பதும் தெரிய வந்தது. சம்பவ இடத்திலேயே வெங்கடேசனுக்கு போஸ்ட் மார்ட்டம் செய்து குடும்பத்தாரிடம் ஒபபடைக்கப்பட்டது. வெங்கடேசனின் சடலத்தை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.. ஆனாலும் அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படலாமா???
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications