Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகின் பெரிய ஆலை.. தட்டி தூக்கிய "தங்கம்".. பெங்களூரை பீட் செய்து அசத்திய கிருஷ்ணகிரி.. குட் நியூஸ்!

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைக்க முடிவெடுத்துள்ளது. பல வருடங்களாக இந்த ஒப்பந்தம் குறித்த சந்தேகம் நிலவி வந்த நிலையில், தற்போது இந்த ஆலை அமைப்பது உறுதியாகி உள்ளது.

கொரோனா காரணமாக தமிழ்நாடு பொருளாதாரம் உட்பட மொத்த இந்திய பொருளாதாரமும் மிக மோசமான நிலையில் இருக்கிறது. பல்வேறு மாநிலங்கள் கடனில் தத்தளிக்கின்றன. இரண்டாம் அலை காரணமாக முதலீடுகளும் குறைந்துவிட்டன.

இந்தியாவை விட்டு பல்வேறு முதலீடுகள் வெளியேறும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த டாப் நிறுவனங்கள் பல இழப்புகளை சந்தித்து இருப்பதால் புதிய தொழில் வாய்ப்புகள் குறைந்துள்ளது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

முக்கியமாக கொரோனா மற்றும் லாக்டவுன் காரணமாக தமிழ்நாட்டின் கடன் சுமை ஒரு பக்கம் அதிகரித்துள்ளது. புதிதாக பதவி ஏற்று இருக்கும் தமிழ்நாடு அரசு, கடன் சுமையை குறைப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. முக்கியமான பொருளாதார வல்லுநர்களை களமிறக்கி தமிழ்நாடு என்றால் முதலீடு என்ற நிலைமையை உருவாக்க முயன்று வருகின்றன.

முதலீடு

முதலீடு

தமிழ்நாட்டிற்கான முதலீடுகள் கடந்த 10 வருடங்களில் பெரிய அளவில் குறைந்துவிட்டன. ஆட்டோமொபைல் துறையில் ஹைதராபாத்தின் வளர்ச்சியும், ஐடி துறையில் பெங்களூரின் வளர்ச்சியும் சென்னையை பெரிய அளவில் பாதித்தது. இந்த நிலையில்தான் பொருளாதார முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் ஆலோசனை வழங்குவதற்காக முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டாப்லோ, ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் ஜீன் டிரேசல், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ் நாராயண் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

முன்னேற்றம்

முன்னேற்றம்

இவர்கள் தமிழ்நாடு அரசுக்கு பொருளாதார ரீதியான ஆலோசனைகளை வழங்குவார்கள். இவர்களின் நியமனம் ஆலோசனை என்பதை தாண்டி.. பாருங்கள் எங்களிடம் நல்ல நிபுணர்கள் உள்ளனர். எங்கள் மாநிலத்தில் முதலீடு செய்யுங்கள் என்று டாப் உலக நிறுவனங்கள் விடுக்கப்படும் அழைப்பாகவும் பார்க்கப்பட்டது. உலக நிறுவனங்களுக்கு தமிழ்நாடு விடுக்கும் அழைப்பாக இந்த முடிவு பார்க்கப்பட்டது.

வருகை

வருகை

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு நினைத்தது போலவே தற்போது முக்கிய நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. அந்த வகையில் தற்போது பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்திய மல்டி நேஷனல் கம்பெனியான ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் முதலீடு செய்ய முன் வந்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையத்தை ஓலா நிறுவனம் இங்கு அமைக்க உள்ளது.

500 ஏக்கர்

500 ஏக்கர்

500 ஏக்கர் பரப்பளவில் இந்த இருசக்கர உற்பத்தி மையத்தை அந்த நிறுவனம் அமைக்க உள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். உலகிலேயே இதுதான் பெரிய நிறுவனம். இதனால் தமிழர்கள் 10000க்கும் அதிகமானோருக்கு வேலை கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஓலா நிறுவனம் இங்கு பைக் உற்பத்தியை மேற்கொள்ள இருக்கிறது.

பைக்

பைக்

பல வருடங்களாக இந்த ஒப்பந்தம் குறித்த சந்தேகம் நிலவி வந்த நிலையில், தற்போது இந்த ஆலை அமைப்பது உறுதியாகி உள்ளது. அதிமுக ஆட்சியில் இதற்கான திட்டங்கள் போடப்பட்டு இருந்தது. அதன்பின் கொரோனா காலத்தில் இந்த அலை கிருஷ்ணகிரி வருமா என்ற இழுபறி நிலவியது. இந்த நிலையில் முறையான சலுகைகள் மூலம் இந்த நிறுவனத்தை தமிழ்நாட்டிற்கு அரசு இழுத்து வந்துள்ளது. ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் பைக் உற்பத்தியில் இறங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதற்கான மாடல் பைக்குகளை அந்த நிறுவனம் சோதனை செய்துள்ளது. இதற்கான உற்பத்திதான் கிருஷ்ணகிரியில் தொடங்கும் என்கிறார்கள். பெங்களூரில் உற்பத்தி மையம் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரிக்கு மையம் கொண்டு வரப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+