Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உதயசூரியனா.. நேனு தெலுகுல செப்தானு..! மல்லி மல்லி திருகி திருகி.. தெலுங்கில் மாட்லாடியா நிர்மாலா..!

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் முதலமைச்சரின் குடும்பத்திற்கு உதயசூரியன் உதிக்கிறதோ இல்லையோ தமிழ்நாட்டில் உதிக்கவே கூடாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓசூரில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் மிகக் கடுமையாக விமர்சித்ததோடு, தெலுங்கிலும் பேசி வாக்காளர்களிடையே வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Lok Sabha Election 2024 Union Minister Nirmala Sitharaman spoke in Telugu to gather votes in Krishnagiri for bjp

குறிப்பாக தேசிய தலைவர்களின் கவனம் தமிழகத்தின் பக்கம் திரும்பி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் தமிழகத்தில் முகாமிட்டு தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

நிர்மலா சீதாராமன்: ஓசூர் ராம் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர்,'தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் திமுகவைச் சேர்ந்த எம்பிகளும் இதுவரையில் நாடாளுமன்றத்தில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் குறித்து எந்த கேள்விகளையும் எழுப்பவில்லை என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. ஆனால் மத்திய அரசின் சார்பில் எத்தனையோ எதிர்க்கட்சிகள் உள்ள மாநிலங்களில் கூட பலவிதமான திட்டங்களை பாஜக செய்திருக்கிறது.

ஏராளமான திட்டங்கள்: பிஎம் முத்ரா யோஜனா திட்டம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு எந்தவிதமான ஆவணங்கள் இன்றி பிரதமர் மோடியே கேரண்டி கொடுத்து மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 47 கோடி மக்களுக்கு 27 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 5000 கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்களை மத்திய அரசு செய்திருக்கிறது.

ஸ்டாலின் மீது விமர்சனம்: பிரதமர் நரேந்திர மோடியின் வருகை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சிக்கிறார். தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொருமுறை வரும்போதும் பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். ஆனால் பிரதமருக்கோ கருப்புக் கொடி காட்டி திரும்பி போ என சொல்கிற திமுகவினர், மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி என வரும்போது மட்டும் கலெக்ஷன் கேட்டு வருகிறார்கள்.

போதைப் பொருட்கள்: தமிழகத்தில் குடிப்பழக்கத்தால் எத்தனையோ குடும்பங்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இம்மாநில மக்களை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு தர வேண்டும் என்று நினைக்கிறோம். முதல்வர் குடும்பம் வாழ வேண்டும் என்பதற்காக போதை பொருட்களை இறக்குமதி செய்து அவர்களின் வாழ்க்கையை பாழாக்க நினைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தை மீண்டும் ஒருமுறை தேர்ந்தெடுக்க கூடாது. முதலமைச்சர் குடும்பத்துடன் போதை கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் நேரடி தொடர்பு வைத்திருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

தெலுங்கில் பேச்சு: தொடர்ந்து சில விஷயங்களை தான் தெலுங்கில் பேச வேண்டும் எனக் கூறிய நிர்மலா சீதாராமன்,"இந்த நாடு முன்னேற வேண்டும் என்றால், நான்கு வர்க்கங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது ஏழைகள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் ஆகிய இந்த நான்கு வர்க்கங்களுக்கு நல்ல பணி செய்தால், நாட்டில் சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் நல்லது நடக்கும். நாடு முன்னேற வேண்டும் என்றால் ஊழலற்ற தலைமை வேண்டும். அது பிரதமர் மோடியால் மட்டுமே கொடுக்க முடியும்" என பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+