மவுசு கூடும் ஓசூர்.. நிலம் - வீடு வாங்க குவியும் மக்கள்! புதிய விமான நிலையத்தால் பெங்களூருக்கு ஆப்பு
கிருஷ்ணகிரி: தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் உள்ள ஓசூரில் புதிய விமான நிலையத்தை தமிழக அரசு அமைக்க உள்ளது. இதனால் ஓசூரில் நிலபத்தின் மதிப்பு கிடுகிடுவென உயர்ந்து பலமடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக பெங்களூரில் உள்ளவர்கள் நிலம், வில்லா, வீடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இது பெங்களூருவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய முழு விவரம் வருமாறு:
தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தின் ஓசூரை தாண்டினால் பெங்களூர் வந்துவிடும். இந்நிலையில் தான் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார்.

ஆண்டுக்கு 30 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) அதாவது 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
ஓசூர் விமான நிலையம்
அதன்படி பெரியகை (Berigai) மற்றும் பாகலூர் இடையே விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் தற்போதைய தனஜே ஏரோஸ்பேஸ் மற்றும் அவியேஷன் லிமிடெட்ட்டில் இருந்து 15.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி ஓசூரில் புதிதாக டைடல் பூங்கா மற்றும் வர்த்தக மையம் அமைக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதனால் ஓசூருக்கான மவுசு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஓசூர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டி பறக்க தொடங்கி உள்ளது. பலரும் நிலம், வீடு, வில்லாக்களை வாங்க குவிந்து வருகின்றனர். விமான நிலையம் வருவதால் ஓசூரில் முதலீடு செய்வது லாபமாகும் என்ற அடிப்படையில் அவர்கள் இந்த முடிவை எடுத்து வருகின்றனர்.
முதலீடு செய்ய அதிகரித்த ஆர்வம்
இதுதொடர்பாக ஆன்லைன் பிளாட்பார்ம் Housing.com சார்பில், ‛‛ 2024 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் இருந்து 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு வரை விற்பனை நிலைாக உள்ளது. பெங்களூரில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் (KIA) அறிவிக்கப்பட்ட பிறகு வட பெங்களூருவில் விற்பனை அதிகரித்தது. அதன் ஆரம்பாகாலத்தை பிரதிபலிக்கும் வகையில் முதலீட்டாளர்கள் ஓசூரில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பெங்களூரில் இருந்து அதிகமானவர்கள் இங்கு வருகின்றனர். தொழிலதிபர்கள், நிறுவனங்களில் பணியாற்றுவோர் அத்திப்பள்ளி - ஓசூர் நெடுஞ்சாலையில் வீட்டு மனை, வீடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் பெங்களூரை ஒப்பிடும்போது ஓசூரில் விலை குறைவாக இருப்பது தான். அதுமட்டுமின்றி ஓசூரில் விமான நிலையத்தோடு, டைடல் பார்க், வர்த்தக மையம் தொடர்பான அறிவிப்புகளும் புதிய முதலீடுகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
எந்தெந்த இடங்களுக்கு மவுசு
இதுதொடர்பாக இந்தியா லேண்ட் குழுமத் தலைவர் ஹரிஷ் ஃபேபியானி கூறுகையில், ‛‛ஓசூர் விமான நிலையத்தின் அருகேயும், மாலூர் ரோடு, ஓசூர் ரோடு, சர்ஜாபூர் - எலக்ட்ரானிக் சிட்டி, அத்திப்பள்ளி காரிடார் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தேவைகள் அதிகரித்துள்ளது. மலிவு விலை மற்றும் RERA அப்ரூவல் சொத்துகள், 2-3 BHK வீடு உள்ளிட்டவற்றை மக்கள் தேடுகின்றனர்.
இதில் தற்போது ஹாட்ஸ்பாட்டுகளாக அத்திப்பள்ளி, பாகலூர் மற்றும் பெங்களூர் ஐடி நிறுவனங்களின் அருகே உள்ள இடங்கள் உள்ளன. பிரீமியம் வில்லா, Gated Communities உள்ளிட்டவற்றை அடையாளம் கண்டு வாங்குவதில் முதலீட்டாளர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், தொழிலதிபர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்'' என்று கூறியுள்ளார்.
20- 30 கிமீ தொலைவுக்கு மதிப்பு உயர்வு
என்விடி குவாலிட்டி லைஃப் ஸ்டைல் இயக்குநர் விவேக் கார் கூறுகையில், ‛‛முன்பு இருந்தே ஓசூருக்கான டிமாண்ட் நிலையாக வளர்ந்து வருகிறது. இதற்கு முன்பு பெங்களூரை ஒப்பிடும்போது விலை குறைவு என்ற வகையில் வளர்ந்தது. இப்போது ஓசூர் விமான நிலைய அறிவிப்புக்கு பிறகு முதலீடுகள், முதலீடுகள் சார்ந்த விசாரணைகள்அதிகரித்துள்ளது.
குறிப்பாக சர்ஜாபுரா - அத்திப்பள்ளி காரிடாருக்கு மவுசு அதிகரித்துள்ளது. மேலும் விமான நிலையம் அமைய அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தில் இருந்து 20 முதல் 30 கிலோமீட்டர் வரையிலான இடங்களுக்கான மதிப்பு அதிகரித்துள்ளது'' என்றார்.
பிளஸ் பாயிண்ட்
அதேபோல், எஸ்பிஏ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பிரசாந்த் கஜாரியா கூறுகையில், ‛‛ "விமான நிலையத்தால் இயக்கப்படும் மைக்ரோ சந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. நான்கு ஆண்டுகளில் 70-120 சதவீத விலை உயர்வை அது பதிவு செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஐடி நிறுவனங்கள் நிறைந்த பெங்களூர் அருகே ஓசூர் இருப்பது தான். அதுமட்டுமின்றி சாலை மற்றும் உள்கட்டமைப்பு இணைப்பு வசதிகள் தொடர்ந்து முன்னேற்றமடைகிறது. ஓசூர் பெங்களூருக்கு மட்டுமல்ல, கோயம்புத்தூர், சூளகிரி, கிருஷ்ணகிரி மற்றும் சென்னைக்கும் தடையற்ற வர்த்தக இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் சாலை இந்த பயண நேரத்தை இன்னும் குறைக்க உள்ளது. அதுமட்டுமின்றி சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு என்பது சர்ஜாபூர், வைட்ஃபீல்ட் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கு பயண நேரத்தைக் குறைக்க உள்ளது. அதேபோல் ஓசூரை மாலூரின் தொழில்துறை பகுதியுடன் இணைக்கும். இது பிளஸ் பாயிண்ட்டாக பார்க்கப்படுகிறது.
மைனஸ் பாயிண்ட் இதுதான்
இவை எல்லாவற்றுக்கும் மேலாக பெங்களூரை விட ஓசூரில் விலை குறைவாக உள்ளது. அதேவேளையில் ஓசூர் வேகமாக வளர்ந்து வருகிறது. ஓசூரை எடுத்து கொண்டால் சதுரஅடி விலை சராசரியாக ரூ.10,083 ஆக உள்ளது. பெங்களூரை எடுத்து கொண்டால் சதுர அடிக்கான சராசரி விலை ரூ.16 ஆயிரமாக உள்ளது. இதனால் ஓசூரை நோக்கி பலரும் வருகின்றனர்.
அதேவேளையில் சிக்கப்பள்ளாப்புராவை எடுத்து கொண்டால் சதுரஅடிக்கான சராசரி விலை ரூ.7,593 ஆக உள்ளது. இது ஓசூருக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். அதேபோல் ஓசூர் இருமாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இதனால் சில முதலீட்டாளர்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தலாம்'' என்றார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications