பெங்களூர் ஆம்னி பஸ்சில்.. ஆடிப்போன கோவை பெண் ஐடி ஊழியர்.. யாரந்த தாம்பரம் இளைஞர்?
கிருஷ்ணகிரி: கோவையை சேர்ந்த 23 வயது இளம்பெண், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஐடி என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர், சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஆம்னி பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அந்த பஸ், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உத்தனப்பள்ளி மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பஸ்சில் பயணம் செய்த சென்னை தாம்பரத்தை சேர்ந்த பயணி ஒருவர் செய்த காரியம் பயணிகளை ஆடிப்போக வைத்துள்ளது.
பெங்களுர் மற்றும் சென்னைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான ஆம்னி பேருந்துகள் சென்று வருகின்றன. அதேபோல் மறுமார்க்கமாக பெங்களூரில் இருந்தும், சென்னையில் இருந்தும் ஏராளமான பேருந்துகள் பெங்களூருக்கு சென்று வருகின்றன.

பெங்களூர் மற்றும் பொறுத்தவரை ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஐடி துறையில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு வார இறுதியிலும் சொந்த ஊர் வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இதனால் வாரஇறுதிகளில் ஆம்னி பேருந்துகளில் அதிகப்படியானோர் சென்று வருகிறார்கள். பல பெண்கள் சொந்த ஊர் செல்ல ஆம்னி பேருந்துகளையே நாடுகிறார்கள். அப்படி வருவது அவர்களுக்கு பாதுகாப்பான பயணமாகவே பொதுவாக இருக்கும்.அதேநேரம் சில ஆண்களின் தவறான செயல், பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது.
கோவையை சேர்ந்த 23 வயது இளம்பெண், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர், சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஆம்னி பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.
அந்த பஸ், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உத்தனப்பள்ளி மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, பஸ்சில் பயணம் செய்த காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தை சேர்ந்த முகமது கவுஸ் (40) என்பவர் அந்த இளம்பெண்ணிடம் அத்துமீறினாராம். இதை தட்டி கேட்ட இளம்பெண்ணிடம் அவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, அந்த கோவை இளம்பெண் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி முகமது கவுசை கைது செய்தனர். கைதான முகமது கவுஸ் பெங்களூருவில் உள்ள உணவு வினியோக நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இது தொடர்பாக, சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications