”ஜெ. இருக்கும் போதே சசிகலாவை எதிர்த்தவன்.. தர்மயுத்தம் அவருக்கு எதிராகவே செய்தோம்” கேபி முனுசாமி!

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த போதே சசிகலாவை எதிர்த்தவன் நான் என்று அதிமுக எல்எம்ஏ கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பாக பல்வேறு மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி கலந்துக்கொண்டார்.

இந்த விழாவில் கே.பி.முனுசாமி பேசுகையில், சசிகலாவோடு இருக்கும் உறவுகளுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்த போது, ஜெயலலிதா இருக்கும்போதே சசிகலாவை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவன் நான். ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலாவை முதல்வராக்க முயற்சி செய்த போது, எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் அணியில் இணைந்தேன்.

ஜெ. இருந்தபோதே எதிர்த்தேன்

ஜெ. இருந்தபோதே எதிர்த்தேன்

சசிகலாவை கட்சியில் சேர்க்கூடாது என கூறியதற்கு ஆமாம் எனக்கும் உடன்பாடு என ஓபிஎஸ் கூறினார். அதனை ஒவ்வொரு மேடையிலும் சொல்ல வைத்தேன். குடும்ப ஆட்சி வந்துவிடக்கூடாது என ஒபிஎஸ் வாயால் சொல்ல வைத்தேன். தர்மயுத்தம் வந்ததே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இல்லை. அந்த போராட்டத்தை சசிகலாவுக்கு எதிராகவே தொடங்கினோம்.

வைத்திலிங்கம் முயற்சி

வைத்திலிங்கம் முயற்சி

சசிகலாவை முதல்வராக்கினால் நான் கட்சியிலிருந்து வெளியேறிவிடுகிறேன் என கூறினேன். இப்போது ஓபிஎஸ், வைத்திலிங்கம் சசிகலாவோடு சேர முயற்சிக்கின்றனர். வைத்திலிங்கத்திற்கு என் ஒரு பிரச்சனை என்னறால், தஞ்சாவூர் மாவட்டத்தில் அவரால் அரசியல் செய்ய முடியவில்லை. சசிகலாவையும், டிடிவி தினகரனையும் எதிர்த்து அரசியல் செய்ய முடியவில்லை. அதனால் அவர் சசிகலாவுடன் சேர முயற்சி செய்கிறார்.

சசிகலா அரசியலுக்கு வரக்கூடாது

சசிகலா அரசியலுக்கு வரக்கூடாது

நான் அரசியலுக்காக சசிகலா எதிர்க்கவில்லை. ஒட்டுமொத்த அரசியலுக்கும் சசிகலா வரக்கூடாது என்று எதிர்க்கிறேன். அப்போது இருந்து தற்போது வரை ஒரே கருத்தை தான் சொல்கிறேன். அதிமுகவில் சசிகலாவை இணைக்கக் கூடாது. தற்போது ஒபிஎஸ் வெளியேறி பல்வேறு கருத்துகளை சொல்லி வருகிறார்.

ஓபிஎஸ் மீது விமர்சனம்

ஓபிஎஸ் மீது விமர்சனம்

இரு நாட்களுக்கு மின் ஓபிஎஸ்-யிடம் அதிமுகவினர் மீது திமுக வழக்கு போடுகிறார்களே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அவர்கள் பொய் வழக்கு போடுகிறார்கள் நமது கட்சியை அழிக்க பார்க்கிறார்கள் எனத் தான் ஓபிஎஸ் பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர் மாறாக சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் என்று கண்டனம் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+