நான் அரசியல் கட்சித் தலைவர் இல்லை.. சாதாரண மனுஷன்ங்க.. பா ரஞ்சித் பேச்சு
கிருஷ்ணகிரி: நான் அரசியல் கட்சி தலைவர் இல்லை என இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். நான் பெற்றதை இந்த சமூகத்திற்கு திருப்பி கொடுக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பா ரஞ்சித் திரைப்படத் துறையில் கவனம் செலுத்தி வருவது அல்லாமல் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்தும் பேசி வருகிறார். நீட் தேர்வில் அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்ட போதும் இவர் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து மாட்டுக் கறிக்கு எதிரான பிரச்சாரம், பிரிவினைவாதம் உள்ளிட்டவைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளார். இவர் நீலம் பண்பாட்டு மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.

அரசியல் பிரச்சினை
இதன் மூலமாகவும் சமூகம் அரசியல் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். புத்தகக் கண்காட்சி, மேடை நாடகங்கள் உள்ளிட்டவையும் இந்த அமைப்பு மூலம் நடத்தி வருகிறார். இந்தி திணிப்பு பிரச்சினையின் போது குரல் கொடுத்துள்ளார். அது போல் இந்திதான் இணைப்பு மொழி என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருந்த கருத்துக்கும் எதிர்வினையாற்றினார்.

7 தமிழர்கள் விடுதலை
அது போல் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாகவும் ரஞ்சித் பேசியிருந்தார். பிரிவினைவாதம் தலைவிரித்தாடும் இந்த காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் கலைகளின் வாயிலாக அன்பையும் சமத்துவத்தையும் பரப்ப வேண்டும் என ஒரு நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித் கேட்டுக்கொண்டுள்ளார்.

சாதி ஆணவக் கொலைகள்
மேலும் சாதி ஆணவக் கொலைகள், தீண்டாமை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அது போல் ஒரு புத்தக மதிப்புரையில் பிரதமர் மோடியின் ஆட்சியை கண்டு அம்பேத்கர் பெருமைப்படுவார்'என்று இளையராஜா கூறியது பெரும் விவாத பொருளாக மாறியது.

பா ரஞ்சித்
இதுகுறித்து பா ரஞ்சித் கூறுகையில் இதுவரை இளையராஜா அரசியல் ரீதியான கருத்தை இளையராஜா முன்வைத்ததோ அல்லது வேறு சமூக கருத்துகளை தெரிவித்ததோ இல்லை. கடைசி வரை அனைத்து இடங்களிலும், அனைத்து மேடைகளிலும் இசையின் பெருமைகளை பற்றி மட்டுமே இளையராஜா பேசி வந்துள்ளார் என்று விமர்சித்திருந்தார்.
Recommended Video

நான் அரசியல்வாதி இல்லை
இந்த நிலையில் நான் ஒரு அரசியல்வாதி இல்லை என பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், பெரிய பூதக்கோட்டை பகுதியில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் இரவ பாடசாலை திட்டத்தை இயக்குநர் பா ரஞ்சித் தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில் நான் மிகவும் சாதாரண மனிதர். பலர் எதிர்பார்க்கும் வகையில் நான் அரசியல் கட்சித் தலைவர் இல்லை. நான் பெற்றதைதான் திருப்பி கொடுத்து வருகிறேன். நான் எனக்காக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என நினைத்து பார்த்ததில்லை என்றார் ரஞ்சித்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications