கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

படிக்கின்ற நேரத்தில் மாணவர்களுக்கு போராட்டம் எதற்கு? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அட்வைஸ்

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் ஒரு சிலரின் தூண்டுதலுக்கு இணங்க நடைபெறுவதாகவும், படிக்கும் நேரத்தில் மாணவர்களுக்கு ஏன் போராட்டம் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    அண்ணாமலை பல்கலைகழக மருத்துவ மாணவர்கள் சிலரின் தூண்டுதலுக்கு அடிப்பணிய வேண்டாம் - மா.சுப்பிரமணியன்

    ஒசூர் மாநகராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் முதல்முறையாக மாமன்ற உறுப்பினர்களாக தேர்வானவர்களுக்கான பாராட்டு விழா, தமிழியக்கம் சார்பில் நடத்தப்பட்டது.

    Students dont involve in protests - Minister Ma.Subramaniyan request

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

    விழாவில் பேசிய மா.சுப்பிரமணியன், "உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாலைகள் மட்டும் விழாது. மோசமான விமர்சனங்களும் வரும். எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ள வேண்டும் இரண்டையும் சகித்துக்கொள்வதுதான் உள்ளாட்சி அமைப்புகளுடைய வேலை. அதில் வெற்றி பெற்றால் ஆட்சிக்கு நற்பெயர் கிடைக்கும்." என்றார்.

    அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக மருத்துவ மாணவர்களின் தொடரும் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இதுக்குறித்து சட்டமன்றத்திலேயே பதில் தரப்பட்டுள்ளது. கல்விக் கட்டணம் ரூ.119 கோடி வரை குறைக்கப்பட்டுள்ளது..

    மேடையில் பேசிக்கொண்டிருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.. சட்டென பவர் கட் - என்ன நடந்தது?மேடையில் பேசிக்கொண்டிருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.. சட்டென பவர் கட் - என்ன நடந்தது?

    இதுவரை வழங்கப்படாமல் இருந்த உதவித் தொகை ரூ.17 கோடியையும் வழங்கி இருக்கிறோம். மாணவர்களுக்கு அதிகபட்சமாகவே செய்திருக்கிறோம். ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மற்றவர்களின் தூண்டுதலுக்கு மாணவர்கள் அடிப்பணிய வேண்டாம். படிக்கின்ற நேரத்தில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறேன்." என்றார்.

    ஒசூர் மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக்கப்பட்ட பின்பு நோயாளிகள் கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவது ஏன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது, இந்த மாதம் முதல்வர் காணொலி காட்சி வாயிலாக புதிய கட்டிடத்தை தொடக்கி வைத்த பின்பு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்." என விளக்கினார்.

    English summary
    Students dont involve in protests - Minister Ma.Subramaniyan request
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X