10 அடி ஆழ தொட்டியில் மிதந்த.. 2 வயது குழந்தையின் சடலம்.. கிருஷ்ணகிரி அருகே சோகம்!
கழிவுநீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலியானது
கிருஷ்ணகிரி: 2 வயது குழந்தை 10 அடி ஆழ கழிவு நீர் தொட்டியில் சடலமாக மிதந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள கிராமம் சிவனாபுரம். இங்கு வசித்து வருபவர் சாமுண்டி. இவரது மகன் மெகினன்.. 2 வயது குழந்தை இவன்!

இவர்கள் வீட்டு பக்கத்தில் கழிப்பறையின் கழிவு நீர் செல்வதற்காக 10 அடி ஆழத்தில் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த கழிப்பறை பயன்பாட்டில் இல்லை. மேலும் அந்த தொட்டியில் அருகிலேயே ஏரியின் தண்ணீர் தேங்கி நின்றுள்ளது.
இந்த நிலையில் குழந்தை மெகினன் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் அவனை காணவில்லை.. இதனால் பெற்றோர் அவனை பல இடங்களில் தேடி அலைந்தனர். அப்போதுதான், மூடப்படாத நிலையில் இருந்த அந்த கழிவுநீர் தொட்டியினுள் எட்டி பார்த்தனர்.
குழந்தை தண்ணீரில் மூழ்கியபடியே கிடந்தான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவனை மீட்டு உடனடியாக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இதைக்கேட்டு பெற்றோர் குழந்தையை கட்டிபிடித்து கதறி அழுதனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் காவேரிப்பட்டணம் போலீசார் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர். 10 அடி ஆழ தொட்டியில் குழந்தை சடலமாக கிடந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications