அதிமுக எதிர்க்கட்சியாக களத்திலேயே இல்லை.. பாஜகவின் சலுகையால் இரட்டை இலை கிடைத்துள்ளது.. திருமாவளவன்!
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சியாக கூட களத்தில் இல்லை என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணகிரி: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சியாக கூட களத்தில் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதேபோல், பாஜக சலுகையில் தான் எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிகமாக இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுக்கோட்டையைச் சேர்ந்தவர் விசிக துணைச் செயலாளர் செல்வம். கடந்த சில நாட்களுக்கு முன் சாலை விபத்தில் இவரது இரு மகள்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன், செல்வத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் கூறுகையில், ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து விடுலை சிறுத்தை கட்சி தீவிரமாக வாக்கு சேகரித்து வருகி்றது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி உறுதியானது. அவர் குறைந்தது 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என நம்புகிறேன். அதிமுகவை பொறுத்தவரை இரட்டை சிலை சின்னம் என்கிற ஒரே ஒரு சாதகமான கூர் இருக்கிறது. மற்றபடி அக்கட்சி எதிர்க்கட்சியாக கூட களத்தில் இல்லை என்பது தான் உண்மை. இதனால் திமுக கூட்டணி வேட்பாளர் இளங்கோவன் கட்டாயம் வெற்றி பெறுவார்.

பாஜக அரசியல்
பாஜகவைச் சார்ந்தவர்கள் ஜாதி மற்றும் மதத்தை தூண்டுவதும், தேசிய தலைவர்களை அவமதிப்பதும், திருவள்ளுவர் போன்ற இலக்கிய ஆளுமைகளை மதம் எனும் பெயரில் அடையாளப்படுத்த முயற்சிப்பதும், திட்டமிட்ட அரசியலை செய்து வருகிறார்கள். வடமாநிலங்களில் இது போன்ற மதம், கடவுள் பெயர்களை வைத்து இந்துக்களுக்கு நாங்களே பாதுகாப்பு என்கிற மாயை உருவாக்கி அரசியல் செய்து வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை
அதே உத்தியை தமிழ்நாட்டிலும் கையாள்கிறார்கள். பாஜகவினர் வட இந்திய மாநிலங்களில் இந்து கோவில்களில் மீது வெடிகுண்டு வீசிவிட்டு இஸ்லாமியர்கள் வீசினார்கள் என பழி சுமத்தி இந்துகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் மோதல் உண்டுபண்ணிய சான்று ஏராளம் உண்டு.
அதே பாணியை தமிழ்நாட்டிலும் கடைபிடிக்க பார்க்கிறார்கள், அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொது மேடைகளில் நான்காம் கட்ட பேச்சாளர் மாதிரி கீழ்தரமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் அரசு வேடிக்கை பார்க்ககூடாது என்று தெரிவித்தார்.

ரெய்டு பற்றி கருத்து
தொடர்ந்து சிவசேனா வழக்கு மற்றும் ஐடி ரெய்டு பற்றிய கேள்விக்கு, தேர்தல் ஆணையம் பாஜக கட்டுபாடிற்கு சென்றுவிட்டது. உயர்நீதிமன்றம், உச்சமநீதிமன்ற போன்றவை கூட சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது. வருமானவரித்துறை, அமலாக்கதுறை, சிபிஐ போன்றவையும் பாஜக அரசின் ஏவலுக்கு வேலை செய்யும் துறைகளாக மாறி உள்ளது. அதனால் தான் குஜராத் கலவரத்திற்கும், கோத்ரா ரயில் சம்பவத்திற்கும் மோடி தான் காரணம் என ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அதிமுகவை உடைத்த பாஜக
புலனாய்பு துறை அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட்டால் தான், உண்மைகளை வெளியே கொண்டு வரமுடியும். தங்களுக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் பார்க்காமல் அச்சுறுத்தாமல் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் அதிமுகவை நான்காக உடைத்த பாஜக ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் தனது கட்டுபாட்டில் வைத்து ஆட்டிப்படைக்கிறது. இரட்டை இலை சின்னம் வழக்கில் தற்போதைய நிலையில் மோடி அரசு இபிஎஸ்க்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளது.

சிவசேனா விவகாரம்
மோடி அரசு சலுகையில் தான் எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிகமாக இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. இதே போல் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து ஷிண்டேவிற்கு வில் - அம்பு சின்னம் மற்றும் கட்சி உரிமையையும் தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. இது முழுக்க மோடி, சங்கபரிவார் அமைப்பின் தலையீடு என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல என்று தெரிவித்தார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்!












Click it and Unblock the Notifications