கிருஷ்ணகிரியில் விழுந்த "அடி".. சரியான பதிலடி தந்த "வேங்கைவயல்".. ஒருத்தரும் ஓட்டுப்போட வரலயாமே
கிருஷ்ணகிரி: எத்தனையோ முறை சொல்லியும்கூட, தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி, பல்வேறு கிராம மக்கள் கோபமாக இருக்கிறார்கள்.. தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த, இந்த தேர்தலையும் புறக்கணித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டது வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி.. இங்கு கடவரஅள்ளி என்ற கிராமம் உள்ளது.. வழக்கம்போல் காலை 7 மணிக்கே இங்குள்ள வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

புறக்கணிப்பு: ஆனால் ஒருத்தர்கூட ஓட்டுப்போட வரவில்லை.. காலை 10 மணி வரைக்கும், இந்த கடவரஅள்ளி கிராமத்திலிருந்து யாருமே வாக்களிக்க வரவில்லை. இதற்கு காரணம், இந்த கடவரஅள்ளி கிராமமானது காட்டுப்பகுதியை ஒட்டியிருக்கிறது.. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்தவகையில், கிட்டத்தட்ட 450 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
ஆனால், இவர்கள் இந்த பகுதியில், வீட்டுமனை பட்டா வேண்டும் என்று பல வருடங்களாகவே கேட்டு வருகிறார்களாம்.. அதிகாரிகள் யாருமே நடவடிக்கை எடுக்காததால், தேர்தலை புறக்கணிப்பதாக சொல்கிறார்கள்.
இதுபோலவே, 1050 வாக்காளர்களை கொண்ட கருக்கனஅள்ளி கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இங்கே 4 வழிச்சாலை பணிகள் நடந்துவருகிறதாம். சாலையை கடப்பதற்கு மேம்பாலம் கேட்டார்களாம்.. அதையும் அதிகாரிகள் அமைத்து தரவில்லை என்பதால் வாக்களிக்கவில்லை என்கிறார்கள்.
வாக்குச்சாவடி: தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கச்சுவாடி கிராமத்திலும் 961 பேர் வாக்காளர்கள், யாரும் வாக்களிக்க செல்லவில்லை. இவர்களும் சாலை வசதி கோரி விண்ணப்பித்து கிடைக்கவில்லை.. 10 மணி வரை மேற்கண்ட வாக்குச்சாவடிக்கு யாருமே வரவில்லை.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் கிராம மக்களும், வாக்களிக்க செல்லவில்லை.. நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை நடத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம். அதனால், அரசியல் கட்சிகளை சேர்ந்த தேர்தல் முகவர்கள் முதல் கிராம மக்கள் வரை, இங்கிருக்கும் வாக்குச்சாவடிக்கு உள்ளே போகவில்லை..
ராசிபுரம்: கோபி ராசிபுரம், கூலே கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு அத்திக்கடவு-அவினாசி திட்டம் கொண்டு வரப்படாததை கண்டித்து தேர்தலை புறக்கணித்துள்ளனர்.. அத்துட்ன, கால்நடைகளிடம் மனு அளித்து தங்களது எதிர்ப்பையும் பதிவு செய்திருக்கிறார்கள்..
இந்த லிஸ்ட்டில் வேங்கைவயல் கிராமத்தையும் சேர்த்து கொள்ளலாம். தமிழகத்தையே உலுக்கிப்போட்டது இந்த வேங்கைவயல் கிராமம்.. குடிக்கிற தண்ணீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது... பல கட்ட விசாரணைகள் நடந்தாகிவிட்டது.. ஆனால், இன்னும் ஒருத்தர்கூட பிடிபடவில்லை.
வேங்கைவயல்: வேங்கைவயல் கிராம மக்கள் யாருமே வாக்களிக்க போகவில்லை.. இத்தனைக்கும் இந்த வாக்குச்சாவடியை பதற்றமான வாக்குச் சாவடியாக கணக்கில் கொண்டு, துணை ராணுவமே வந்து பாதுகாப்புக்காக இறங்கியிருக்கிறது.. 549 வாக்காளர்கள் இருந்தும்கூட, யாரும் வாக்களிக்கவில்லை... மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் எப்போதுதான் நடவடிக்கை எடுப்பீர்கள்? என்று ஆதங்கத்துடன் கேட்கிறார்கள் வேங்கைவயல் மக்கள்...!!












Click it and Unblock the Notifications