குப்பைத் தொட்டியில் "பெண்" சடலம்.. சம்பவ இடத்திற்கு போயும் பதறாத போலீஸ்!.. காரணம் என்ன?
கோலாலம்பூர்: மலேசியாவில் குப்பைத் தொட்டியில் பெண் சடலம் என்ற தகவலை கேட்டு சம்பவம் இடம் விரைந்த போலீஸாருக்கு ஏமாற்றம் காத்திருந்தது.
மலேசியாவின் ஷா ஆலம் பகுதியில் உள்ள பைக் கடையின் பின்புறம் ஒரு குப்பைத் தொட்டி ஒன்று உள்ளது. வழக்கமாக அங்கு குப்பை போட வந்த ஒருவர் அங்கு பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்டு ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இதுகுறித்து அருகில் உள்ள போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து குப்பைத் தொட்டியில் பெண் சடலம் என கேள்விப்பட்டதும் அப்பகுதியில் மக்கள் குவிந்துவிட்டார்கள்.

கைரேகை நிபுணர்கள்
இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்தனர். அங்கு கைரேகை நிபுணர்கள் உள்ளிட்டோரை அழைத்துக் கொண்டு சென்றனர். மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டன. அப்போது அங்கு சடலத்தின் மீது சுற்றப்பட்டிருந்த பாலித்தீன் பையை பிரித்தனர். ஒவ்வொரு கவராக பிரித்த போலீஸாருக்கு ஏமாற்றம் விஞ்சியது. காரணம் அது உடல் இல்லை.

செக்ஸ் பொம்மை
மெழுகால் செய்யப்பட்ட பெண் செக்ஸ் பொம்மை, பார்ப்பதற்கு அப்படியே பெண் போலவே இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில் குப்பைத் தொட்டி அருகே சடலம் கிடப்பதாக ஒருவர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் இங்கு வந்து பார்த்தோம். ஆனால் அது மெழுகால் செய்யப்பட்ட பொம்மை.

சிசிடிவி கேமராக்கள்
பட்ட பகலில் யார் இதை கொண்டு வந்து போட்டார்கள் என தெரியவில்லை. இதுகுறித்து அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம் என போலீஸார் தெரிவித்தனர். மலேசியாவில் நடந்ததை போல இங்கிலாந்திலும் செக்ஸ் டாயால் குழப்பம் ஏற்பட்டது. கடல் அலையில் அடித்துச் சென்ற செக்ஸ் பொம்மை பெண் என நினைத்து காப்பாற்றி கரைக்கு கொண்டு வர முயற்சித்த போதுதான் அது செக்ஸ் டாய் என தெரிந்தும் இளைஞர் ஒருவர் அப்படியே விட்டுவிட்டு சென்றார்.

நடைபாதை
மலேசியா, இங்கிலாந்தில் நடந்தது போல் ஜார்ஜியாவிலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. நடைபாதையில் ஒரு சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின்படி அங்கு போய் பார்த்தால் அது செக்ஸ் டாய். இது போல் பொம்மைகளை வெளியே கொண்டு வந்து போடும் போக்கு அதிகரித்து வருகிறது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications