கொடூர குற்றங்களுக்கும் இனி மரண தண்டனை கிடையாது.. மலேசியா நாடாளுமன்றம் முடிவு
கோலாலம்பூர்: மரண தண்டனையை விதிக்கும் சட்டத்தை திருத்தம் செய்ய மலேசிய நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் இரண்டு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மசோதா மலேசியா நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நிறைவேறியது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று மலேசியா. இந்த நாட்டில் சிறிய குற்றங்களுக்கு கூட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.
சவுக்கடிகள் உள்ளிட்ட தண்டனைளும் மலேசியாவில் விதிக்கப்படுவதுண்டு. சிறிய குற்றங்களுக்கு கூட கடுமையான தண்டனை விதிக்கப்படும் மலேசியாவில் கொலை, பயங்கரவாதம் உள்ளிட்ட 11 வகையான கொடூர குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

மரண தண்டனையை ரத்து செய்ய
மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற விவாதங்கள் மலேசியாவில் பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. மலேசியாவில் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற விவாதங்கள் அரசியல் ரீதியாக மிகவும் தீவிரமாக நடைபெற்று வந்தது.

கீழ் சபையில் நிறைவேறிய மசோதா
இந்த நிலையில், மரண தண்டனையை விதிக்கும் சட்டத்தை திருத்தம் செய்ய மலேசிய நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் இரண்டு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மலேசிய நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் சில குற்றங்களுக்கு கட்டாய மரண தண்டனையை விதிப்பதை ரத்து செய்வதற்கு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதனால், இந்த மசோதா கீழ் சபையில் நிறைவேறியது.

குற்ற செயல்களை தடுக்க முடியவில்லை
இந்த மசோதா இனி மேல் சபையில் நிறைவேற்றப்பட வேண்டும் அதன்பிறகே சட்ட வடிவம் பெறும். மேல் சபையில் எந்த சிக்கலும் இன்றி இந்த மசோதா நிறைவேறும் என்றே தெரிகிறது. மரண தண்டனையை ரத்து செய்யும் மசோதா கீழ் சபையில் நிறைவேறியது தொடர்பாக பேசிய மலேசிய துணை சட்ட அமைச்சர், மரண தண்டனையால் குற்ற செயல்களை தடுக்க முடியவில்லை" என்றார்.

நோக்கம் நிறைவேறவில்லை
மரண தண்டனையை ரத்து செய்யும் மசோதா கீழ் சபையில் நிறைவேறியது தொடர்பாக பேசிய மலேசிய துணை சட்ட அமைச்சர், மரண தண்டனையால் குற்ற செயல்களை தடுக்க முடியவில்லை. மரண தண்டனை எதற்காக கொண்டு வரப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேறவில்லை" என்றார்,

கொடூர குற்றங்கள் புரிந்தவர்கள்
மலேசியாவில் இந்த மரண தண்டனயை ரத்து செய்யும் சட்டம் நிறைவேறிய பிறகு, மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் கைதிகளுக்குள் தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரி முறையிட 90 நாட்கள் அனுமதி வழங்கப்படும். மலேசியாவில் தற்போது 1,341 மரண தண்டனை கைதிகள் உள்ளனர். இவர்களில் 60 சதவீத்திற்கும் மேற்பட்டவர்கள் கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஆவர். அதாவது கொடூர குற்றங்கள் புரிந்தவர்கள் என்று அம்னெஸ்டி இண்டர்னேஷனல் கூறுகிறது.












Click it and Unblock the Notifications