புதினின் மரணம் எப்படி இருக்கும்? முடிவுக்கு வரும் ரஷ்யா-இந்தியா நட்பு! கணித்த ‛நியூ நோஸ்ராடாமஸ்’
லண்டன்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் மரணமடைவார். சீனாவால் ரஷ்யா உடனான நீண்டகால நட்பை இந்தியா முறித்து கொள்ளும் என இங்கிலாந்தை சேர்ந்த ‛நியூ நோஸ்ராடாமஸ்’ என அழைக்கப்படும் கிரேக் ஹாமில்டன் கணித்துள்ளதோடு அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் சவுத்தாம்படனை சேர்ந்தவர் கிரேக் ஹாமில்டன். இவர் ஒவ்வொரு ஆண்டும் பல முக்கிய கணிப்புகளை கணித்து கூறி வருகிறார். கொரோனா பரவல், டொனல்ட் ட்ரம்பின் அரசியல் நிலவரம், பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத்தின் மறைவு உள்ளிட்டவை அவர் கணித்தது போலவே நடந்தது.

16ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்சின் புகழ்பெற்ற ஜோதிடர் நோஸ்ராடாமஸின் பல கணிப்புகள் இன்று வரை நடந்து வருகிறது. அதேபோல் கிரேக் ஹாமில்டனின் கணிப்புகளும் பலித்து வருகிறது. இதனால் கிரேக் ஹாமில்டனை ‛நியூ நோஸ்ராடாமஸ்’ என பலரும் அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் இவரது கணிப்புகள் அதிக முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும். இந்த முறை அவர் 2024 நாடாளுமன்ற தேர்தல், 2024 நவம்பரில் அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தல்கள் குறித்து கணித்து கூறியுள்ளார். இதுதவிர வெள்ளம், நிலநடுக்கம், ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-காசா போர் உள்பட பல்வேறு விஷயங்களை பற்றி அவர் கணித்து தெரிவித்துள்ளார்.
மேலும் நீண்டகாலம் நட்பு பாராட்டி வரும் இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு பற்றியும் அவர் திடுக்கிட வைக்கும் தகவல்களை கூறியுள்ளார். இந்தியா-ரஷ்யாவின் உறவில் முறிவு ஏற்படும் எனவும், சீனாவும்-ரஷ்யாவும் நெருக்கமாக செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் மரணம் குறித்தும் அவர் திடுக்கிட வைக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
இந்தியா-ரஷ்யா உறவில் முறிவு: இந்தியாவில் எல்லை என்பது விரிவடையும். மேலும் உலகில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா மாறும். உலகில் ஆதிக்கம் பெற்ற நாடாக இந்தியா இருக்கும். இது எப்போது சாத்தியம் என்பதை கூற முடியாவிட்டாலும் கூட இது நடந்தே தீரும். மேலும் இந்தியா-ரஷ்யா இடையே நல்ல உறவு தற்போது உள்ளது. ஆனால் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையே நட்பு என்பது வளர்ந்து வருவது இந்தியாவின் நலன்களுக்கு எதிரானதாக அமையலாம்.
பலிக்கும் கணிப்பு: மேலும் பாகிஸ்தான் விவகாரத்தில் சீனா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு உரசல் போக்கு ஏற்படலாம். இதனால் ரஷ்யா உடனான உறவை இந்தியா முறித்து கொள்ளலாம். மேலும் 2015ல் இருந்தே ரஷ்யாவும், சீனாவும் சேர்ந்து செயல்படும் என நான் கூறி வருகிறேன். அதற்கான காலம் என்பது தொடங்கி உள்ளது. இதற்கு முன்பே நான் ரஷ்ய பொருளாதாரம் என்பது பிரச்சனையை சந்திக்கும். இதையடுத்து சீனாவுடன் ஆயுத ஒப்பந்த்தை ரஷ்யா தொடங்கும் என தெரிவித்து இருந்தேன். தற்போதைய உக்ரைன் போரில் அது தொடங்கி உள்ளது.
புதின் மரணம்: மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் மரணம் என்பது உடனடியாக நிகழக்கூடியதாக இருக்கும். இது நடக்க இன்னும் நீண்டகாலம் இல்லை. அவரது மரணம் என்பது பெரிய மாற்றத்துக்கான புள்ளியாக இருக்கலாம். மேலும் ரஷ்யா-உக்ரைன் போரை அதுதான் முடிவுக்கு வரும். இருப்பினும் அது உடனடியாக நடக்காது. ஆனால் விளாடிமிர் புதினின் மரணத்துக்கு பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது’’ என கணித்துள்ளார்.












Click it and Unblock the Notifications