லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதிய கொரோனா அலை.. ஆபத்தை நோக்கி 53 நாடுகள்.. 5 லட்சம் மரணங்களுக்கு வாய்ப்பு.. ஹு எச்சரிக்கை!

Google Oneindia Tamil News

லண்டன்: உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், ஆசியா, ஐரோப்பாவில் உள்ள 53 நாடுகள் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும் உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் வாரங்களில் இந்த நாடுகளில் புதிய கொரோனா அலை தோன்ற வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் கேஸ்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் 70 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

முக்கியமாக ஐரோப்பா நாடுகளில் கேஸ்கள் அதிக அளவில் பதிவாகி வருகிறது. யுகேவில் தினசரி கேஸ்கள் 40 ஆயிரத்திற்கும் பதிவாகி உள்ளது. இந்த நிலையில்தான் புதிய கொரோனா அலை தோன்ற போவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

650 மில்லியன் டாலர் மதிப்பிலான 280 அதிநவீன விமான ஏவுகணைகள்... செளதி அரேபியாவுக்கு வழங்கும் யு.எஸ்.650 மில்லியன் டாலர் மதிப்பிலான 280 அதிநவீன விமான ஏவுகணைகள்... செளதி அரேபியாவுக்கு வழங்கும் யு.எஸ்.

பேட்டி

பேட்டி

ஐரோப்பாவிற்கான உலக சுகாதார மைய இயக்குனர் ஹான்ஸ் க்ளாஞ் அளித்துள்ள பேட்டியில், உலகம் முழுக்க கொரோனா கேஸ்கள் உயர்ந்து வருகிறது. முக்கியமாக மத்திய ஆசியா, ஐரோப்பாவில் கொரோனா கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் 53 நாடுகள் மிக முக்கியமான ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது. சில நாடுகளில் ஏற்கனவே இந்த ஆபத்து தொடங்கிவிட்டது.

53 நாடுகள்

53 நாடுகள்

இதில் பல நாடுகளில் டெல்டா வைரஸ் பரவி வருகிறது. ஐரோப்பாவும் மத்திய ஆசியாவும் இதனால் மீண்டும் கொரோனா எபிசென்டராக மாற வாய்ப்பு உள்ளது. ஐரோப்பாவில் மட்டும் 78 மில்லியன் கேஸ்கள் உள்ளன. கடந்த 4 வாரங்களாக இங்கு கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகின்றன. இதே நிலைமை நீடித்தால் ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் நிலைமை மோசமாகும்.

டெல்டா

டெல்டா

மத்திய ஆசிய, ஐரோப்பாவில் மட்டும் பலர் பலியாகும் வாய்ப்புகள் உள்ளன. மருத்துவமனைகள் பல நிரம்பும் வாய்ப்புகளும் உள்ளன. இன்னொரு புதிய அலை இந்த நாடுகளில் தோன்றும் அபாயம் உள்ளது. ஒரு வருடத்திற்கு முன் நாம் இருந்த நிலைக்கு மீண்டும் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் புதிய கேஸ்கள் உச்சத்தை தொட தொடங்கி உள்ளது.

Recommended Video

    திடீரென அதிகரிக்கும் Coronavirus பாதிப்புகள்.. உலக நாடுகளை அச்சுறுத்தும் AY.4.2 Variant
    கவலை

    கவலை

    பரவும் வேகமும் அதிகரித்து உள்ளது. இதுதான் மிகுந்த கவலையை அளிக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் ஐரோப்பாவில் மட்டும் கேஸ்கள் பரவும் வீதம் 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனா மரணங்கள் 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மத்திய ஆசியா, ஐரோப்பாவில் இருக்கும் பல நாடுகளில் வேக்சின் போடும் வீதம் வேறு வேறாக உள்ளது. சராசரியாக இந்த நாடுகளில் 47 சதவிகிதம் பேருக்கு இரண்டு டோஸ் போடப்பட்டுள்ளது.

     வேக்சின்

    வேக்சின்

    வெறும் 8 நாடுகளில் மட்டுமே 70 சதவிகிதம் பேருக்கும் அதிகமாக இரண்டு டோஸ் போட்டுள்ளனர். இதை உடனே அதிகரிக்க வேண்டும். இதே டிரெண்ட் தொடர்ந்தால் ஐரோப்பா, மத்திய ஆசியாவில் வரும் பிப்ரவரியில் 5 லட்சம் பேர் பலியாக வாய்ப்பு உள்ளது. இது அபாயகரமான சூழ்நிலை என்று ஐரோப்பாவிற்கான உலக சுகாதார மைய இயக்குனர் ஹான்ஸ் க்ளாஞ் தெரிவித்துள்ளார்.

    English summary
    As many as 53 countries in Europe and Central Asia face the “real threat” of a resurgence of the coronavirus pandemic in the coming weeks or are already battling a new wave of infections, exacerbated by the more transmissible Delta variant of the coronavirus, the World Health Organization (WHO) has said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X