"ரூம் முழுக்க போட்டோக்கள்" அத்தனையும் ஆபாசம்! பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்! காதலர் தினத்தில் கொடூரம்
லண்டன்: பிரிட்டனில் 16 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விளையாட்டு ஆசிரியை ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இனி வாழ்நாளில் ஆசிரியர் பணி செய்யவும் தடை விதித்திருக்கிறது.
பிரிட்டனில் பள்ளிகளில் மாணவர்கள், மாணவிகளை ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமை செய்யும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேற்றியுள்ளது. அதாவது கிழக்கு லண்டனில் இயங்கி வரும் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக 29 வயது மதிக்கத்தக்க பெண்மணி பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு சிறந்த ஆசிரியருக்கான விருதை பெற்றிருக்கிறார்.

இந்நிலையில், 16 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உள்ளாகியுள்ளார். முதலில் இந்த விவகாரம் குறித்து பள்ளி முழுவதும் அரசல் புரசலாக பேச்சு அடிப்பட்டது. இதனையடுத்து பள்ளி நிர்வாகம், விளையாட்டு ஆசிரியை கூப்பிட்டு கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்து அனுப்பியது. ஆனால், அன்று இரவே பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், சிறுமியினுடைய மொபைல் போனை செக் செய்திருக்கின்றனர்.
அதில் சிறுமிக்கு, ஆசிரியை ஆபாசமாக மெசேஜ்களை அனுப்பியிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து பெற்றோர் போலீசில் புகார் கொடுத்திருக்கின்றனர். புகாரை விசாரித்த போலீசுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.
காதலர் தினத்தன்று பாதிக்கப்பட்ட மாணவியை பள்ளி கழிவறையில் வைத்து, தன்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசிரியை வற்புறுத்தியுள்ளார். பல நேரங்களில் மாணவியின் அனுமதியின்றி முத்தம் கொடுத்திருக்கிறார். இவை அனைத்தும் மாணவியின் கல்வியில் கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. மாணவி மனஉளைச்சலுக்கு ஆளாகி, பள்ளியிலிருந்து பாதியில் நின்றுவிட வேண்டும் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார். இவை அனைத்தும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
மட்டுமல்லாது ஆசிரியையின் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில், ஆசிரியையும், மாணவியும் சேர்ந்து இருப்பதை போன்ற 400 போட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இதில், சில போட்டோகளில் இருவரும் நிர்வாணமாக இருந்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். இதனையடுத்து ஆதாரங்களை திரட்டி, ஆசிரியரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, தன் சுயநலம் மற்றும் முட்டாள்தனத்தால் இந்த ஆசிரியை நம்பிக்கைக்குரிய தொழிலை கலங்கப்படுத்திவிட்டார் என்று ஆசிரியைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இரண்டு மூன்று சிறுமிகள் ஆசிரியை மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதால் மீண்டும் அவரை ஆசிரியர் தொழில் ஈடுபடுவதற்கு நீதிபதி வாழ்நாள் தடை விதித்திருக்கிறார். அதேபோல 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது.
பள்ளி மாணவிகளை கட்டாயப்படுத்தி, ஆசியை ஒருவர் தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியுள்ள சம்பவம் பிரிட்டன் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று அடிக்கடி நடப்பதால், ஆசியர்கள் நியமனத்திலும், அவர்களை கண்காணிப்பதிலும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு பெற்றோர்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications