"சைஸ்".. ரொம்ப பெருசா இருக்குங்க.. "அந்த" காரணத்திற்காக வேலையை இழந்த இளைஞர்.. அடக்கடவுளே!
லண்டன்: லண்டனை சேர்ந்த இளைஞர் ஒருவர் வித்தியாசமான காரணம் ஒன்றிற்காக வேலையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
உலகம் முழுக்க வேலையின்மை பிரச்சனை பெரிதாகிக்கொண்டே செல்கிறது. இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த, வளரும் நாடுகளில் கூட வேலையின்மை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
எப்படியாவது வேலை கிடைக்காதா என்று கொரோனாவிற்கு பின் மக்கள் அல்லாடும் நிலைமை ஏற்பட்டு உள்ளது.

வேலை
இந்த நிலையில்தான் இளைஞர் ஒருவர் வித்தியாசமான காரணத்திற்காக தனது வேலையை இழந்துள்ளார். லண்டனை சேர்ந்தவர் ஜோ. இவரை பற்றி சேனல் 4 செய்தி நிறுவனம் அந்த செய்தியை வெளியிட்டு உள்ளது. இவர் கடந்த காலமாக வேலையின்றி கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து வேலை தொடர்பாக இன்டர்வியூ ஒன்றிற்கு கடந்த சில தினங்களுக்கு முன் அவர் சென்றுள்ளார். கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பட்டு பட்டு என்று பதில் சொல்லி கேள்வி கேட்டவரை கவர்ந்து உள்ளார்.

இன்டர்வியூ
இந்த நிலையில்தான் இன்டர்வியூ முடிந்த பின் அவருக்கு வேலை உறுதியாகிவிட்டதாக கூறியுள்ளனர். இதற்கான கடிதத்தையும் அவர்கள் வழங்கி உள்ளனர். இந்த நிலையில் அவர் இன்டர்வியூ முடித்து எழுந்து செல்லும் போது, அவரின் பேண்ட் மிகவும் பெரிதாக இருந்ததை இன்டர்வியூ எடுத்தவர் கவனித்து உள்ளார். இதையடுத்து அவருக்கு வேலை கொடுக்க முடியாது என்று கூறி, அவரிடம் கொடுத்த அப்பாயின்மென்ட் ஆர்டரை அவரை திரும்ப பெற்றுள்ளார்.

என்ன காரணம்?
அவரின் ஆணுறுப்பு மிகவும் பெரிதாக இருந்தது இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அவரின் ஆணுறுப்பு 7 இன்ச்சிற்கு மேல் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள், ஆண்களுக்கு சங்கோஜமான நிலை ஏற்படும். நீங்கள் வேலை செய்தால் மற்றவர்களுக்கு அது கவனக்குறைவை ஏற்படுத்தும். அலுவலகத்தில் பாலியல் ரீதியான உரையாடல்களுக்கு அது வழிவகுக்கும்.

அவமானம்
அதனால் உங்களுக்கு வேலை கொடுக்க முடியாது என்று கூறி அவரை வேலையைவிட்டு தூக்கி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோ, தனக்கு கொடுக்கப்பட்ட வேலை உடனடியாக பறிக்கப்பட்டது குறித்து ஊடகங்களில் பேட்டி கொடுத்துள்ளார். அதில், என்னுடைய ஆணுறுப்பு நீளமாக இருப்பதால் என்னை வேலைக்கு எடுக்கவில்லை. எனக்கு கொடுத்த வேலையை பறித்துவிட்டனர். இதில் என்னுடைய தவறு எங்கே இருக்கிறது. நான் அலுவலகத்தில் இருந்தால் சங்கோஜமான நிலை ஏற்படும் என்று கூறி வேலையைவிட்டு என்னை நீக்கிவிட்டனர், என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications