வங்கதேச இந்திய தூதரகத்தில் தூதரக அதிகாரி திடீர் மரணம்.. பாத்ரூம் அருகே கிடந்த உடல்.. என்ன நடந்தது?
டாக்கா: வங்கதேசத்தின் சிட்டங்காங் நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் பணியாற்றி வந்த அதிகாரி திடீரென்று பாத்ரூம் அருகே இறந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த அதிகாரி யார்? எப்படி இறந்தார்? என்பது பற்றிய சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் இந்தியாவின் துணை தூதரகம் அமைந்துள்ளது. இங்கு நரேன் தார் என்பவர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் 'புரோட்டோகால்' அதிகாரியாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் இன்று காலையில் அவர் துணை தூதரகத்தின் பாத்ரூம் அருகே இறந்து கிடந்தார்.

அதாவது துணை தூதரகத்தின் 2வது மாடியின் பாத்ரூம் உள்ளது. அதன் நுழைவு வாயில் அருகே நரேன் தார் இறந்து கிடந்தார். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நரேன் தாரின் மரணத்துக்கு என்ன காரணம்? என்பது இன்னும் தெரியவில்லை. இருப்பினும் அவர் மாரடைப்பால் பலியாகி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் தெரியும் என்று சிட்டகாங் நகர காவல்துறை உதவி ஆணையர் அமினூர் ரஷீத் கூறியுள்ளார்.
இதனால் தற்போது வரை வங்கதேச தலைநகர் டாக்காவில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகம் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. தற்போது இறந்துள்ள நரேன் தார் சண்டிகரை சேர்ந்தவர். இவரது மரணம் பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications