"அசிங்கம்!" தூங்கிக் கொண்டு இருந்த பெண்! முகத்தில் "சம்பவம்" செய்த செல்ல நாய்..அடுத்து செம ட்விஸ்ட்
லண்டன்: பிரிட்டன் நாட்டில் செல்ல பிராணியாக நாயை வளர்த்த பெண் ஒருவர் மிகவும் வினோதமான ஒரு பிரச்சினையை எதிர்கொண்டு உள்ளார்.
உலகில் அதிகப்படியான மக்களால் விரும்பி வளர்க்கப்படும் செல்ல பிராணிகளில் ஒன்று நாய். அவை நம் மீது செலுத்தும் அன்பு பல சமயங்களில் மனிதர்களே வியக்கும் அளவுக்கு இருக்கும்.
இதன் காரணமாகவே உலகெங்கும் பல கோடி மக்கள் நாயை தங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒன்றாகவே கருதி வளர்க்கின்றனர். அதற்கு ஒன்று என்றால் துடித்துப் போய்விடுவார்கள்.

நாய்கள்
ஆனால், சில சமயங்களில் அந்த நாய்கள் விளையாட்டாக அல்லது தெரியாமல் செய்யும் சம்பவங்கள் நமக்குப் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். அப்படியொரு சம்பவம் தான் இந்த பிரிட்டன் குடும்பத்திற்கு நடந்துள்ளது. முன்பு சொன்னதை போல நாயைப் பலரும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகக் கருதுவதால் வீட்டின் அனைத்து ரூம்களிலும் நாய்கள் ஹாயாக உலா வரும்.

தூக்கம்
இங்கிலாந்து நாட்டின் பிரிஸ்டலைச் சேர்ந்தவர் அமண்டா கோம்மோ. 51 வயதான இவர், தனது வீட்டில் பெல்லே என்ற நாயை வளர்த்து வருகிறார். சிவாவா வகையைச் சேர்ந்த இந்த நாய் இனம், மனிதர்களுடன் அன்பாகப் பழகக் கூடியது. சில நாட்களுக்கு முன்பு தனது நாய் பெல்லே உடன் அமண்டா கோம்மோ மதியம் உறங்கி உள்ளார். அப்போது நாய் பெல்லேவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அசிங்கம் செய்த நாய்
இது தொடர்பாக அமண்டா கோம்மோ கூறுகையில், "நான் எப்போதும் போல பெல்லேவுடன் மதியம் தூங்கிக் கொண்டிருந்தேன்.. அப்போது திடீரென எனது வாயில் எதோ ஒன்றை உணர்ந்தேன். அது மிகவும் கேவலமாக இருந்தது. உடனடியாக எழுந்து வாந்தி எடுத்தேன். அதன் பின்னர் எவ்வளவோ முயன்றும் கூட அந்த டேஸ்ட் எனது வாயில் இருந்து போகவில்லை" என்றார். ஆம், நீங்கள் நினைப்பது போல அந்த நாய் உரிமையாளர் முகத்தில் அசிங்கம் செய்துவிட்டது.

ட்விஸ்ட்
இப்படியொரு சம்பவம் நடந்தால் ஓனருக்கு தானே உடல்நிலை பாதிப்பு ஏற்படும் என நினைப்பீர்கள். ஆனால், முதலில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது அந்த நாய்க்கு. அன்று மட்டும் அதற்கு நிற்காமல் வயிற்றுப்போக்கு இருந்து உள்ளது. இதையடுத்து நாயை அமண்டாவின் மகள் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதில் நாயின் வயிற்றில் மோசமான புழு இருப்பது கண்டறிய்பட்டது. இதையடுத்து அதற்குச் சிகிச்சையும் தரப்பட்டது. இதில் மற்றொரு ட்விஸ்ட் என்னவென்றால் நாய்க்கு இது ஏற்பட்ட சில மணி நேரத்திலேயே அமண்டாவுக்கும் இதே அறிகுறிகள் தென்படத் தொடங்கி உள்ளது.

ஓனருக்கும் பாதிப்பு
இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மருத்துவ பரிசோதனையில் அவரது வயிற்றிலும் மோசமான புழு இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு பெயின்கில்லர்கள் வழங்கப்பட்ட நிலையில், அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இருந்த போதிலும், உடல்நிலை மேம்படவில்லை. தொடர்ந்து மோசமாகி உள்ளது. வயிற்றில் மட்டும் இருந்த வலி உடல் முழுக்க பரவி உள்ளது.

தொற்று பாதிப்பு
அடுத்த இரு நாட்களுக்கு அவருக்கு கை, கால்களில் பொறுக்கவே முடியாத வலி ஏற்பட்டு உள்ளது. மேலும், வயிற்றுப்போக்கு காரணமாக அவருக்கு நீரிழப்பு ஏற்பட்டுள்ளது. அவரது சிறுநீரகங்களும் பாதி அளவுக்குச் சுருங்கிவிட்டதாம். இதையடுத்து அவர் மீண்டும் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். நாயின் கழிவு உள்ளே சென்றதால், அவரது இரைப்பையில் தொற்று ஏற்பட்டதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதன் காரணமாக அடுத்த மூன்று நாட்கள் அமண்டா மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

தீவிர சிகிச்சை
அவருக்கு எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் குளுக்கோஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற ஒரு சம்பவத்தைப் பார்த்தே இல்லை என்று மருத்துவர்கள் மிரண்டுவிட்டனராம்.. அமண்டா கூறுகையில், "எனது செல்லப் பிரானிக்கு உடம்பு சரியில்லை. இதனால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இல்லையென்றால் அது இப்படிச் செய்யாது. எப்போதும் பெல்லே மீதான எனது அன்பு குறையாது" என்று கூறி நாயை வாரி அணைத்துக்கொண்டார்.












Click it and Unblock the Notifications