Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீடியோவை எடிட் செய்து வெளியிட்ட பிரபல செய்தி சேனல்.. பதவியை ராஜினாமா செய்த தலைகள்! ஊடக உலகில் பரபர!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குறித்து வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக அந்நிறுவனம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், அந்த ஆவணப்படத்தில் டிரம்பின் பேச்சை திரித்து வெளியிட்டதாக அறிக்கை தாக்கலான நிலையில், பிபிசி நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டிம் டேவி மற்றும் செய்திப்பிரிவு தலைவர் டெபோரா டர்னஸ் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

2021 ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்காவில் நடந்த கேபிடல் ஹில் கலவரம் உலகையே அதிர்ச்சியடையச் செய்தது. அந்த நாளில் அப்போதைய அதிபராக இருந்து தோல்வியைச் சந்தித்த டொனால்டு டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார்.

donald trump BBC us

அவர் பேசி முடித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஒரு பெரும் கூட்டம் அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடமான கேபிடோல் ஹில்லுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டது. பல உயிரிழப்புகளும் சொத்துச் சேதங்களும் ஏற்பட்டன. இந்த சம்பவம் அமெரிக்க வரலாற்றில் ஒரு கருப்பு புள்ளி என கூறப்பட்டது.

கேபிடல் ஹில் கலவரம்

இந்நிலையில், கேபிடல் ஹில் கலவரத்திற்கு காரணம் டொனால்ட் டிரம்ப் தான் எனவும், அவரது உரை தான் கலவரத்தைத் தூண்டியதாக டிரம்ப் மீது கடுமையான குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு பிரபல செய்தி நிறுவனமான பிபிசி, டிரம்ப் உரை மற்றும் அதன் விளைவுகளைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை தயாரித்தது. இந்த ஆவணப்படத்தில், டிரம்ப் பேசிய இரண்டு தனித்தனி உரை வீடியோக்கள் ஒன்றாக எடிட் செய்யப்பட்டிருந்தன.

டிரம்ப் ஆவணப்படம்

இதனால், டிரம்ப் ஒரே தொடர்ச்சியான உரை மூலம் கலவரத்தைத் தூண்டியதாக தோற்றம் அளித்தது. ஆனால் உண்மையில், அவை வேறு வேறு நேரங்களில் பதிவு செய்யப்பட்ட இரண்டு நிகழ்வுகள் என பின்னர் தெரியவந்தது. இந்த திருத்தப்பட்ட (edited) வீடியோ, டிரம்ப் உரை குறித்து தவறான புரிதலை உருவாக்கியதாகவும், அவரை எதிர்மறையாக சித்தரித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, முன்னாள் ஆலோசகர் மைக்கேல் பிரெஸ்காட் தலைமையில் பிபிசியின் ஆசிரியர் வழிகாட்டுதல் குழு (Editorial Guidance Committee) விசாரணை நடத்தி 19 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

பிபிசி ராஜினாமா

அதில், "ஆவணப்படம் எடிட் செய்யப்பட்ட விதம், டிரம்ப் கலவரத்தை தூண்டியதாகக் காட்டும் பிம்பத்தை உருவாக்கியுள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது பிபிசிக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது.
இந்த அறிக்கை வெளியாக அந்நிறுவனம் மீது ட்ரம்பின் ஆதரவாளர்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்த நிலையில், பிபிசி நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டிம் டேவி மற்றும் செய்தித் துறை தலைவர் டெபோரா டர்னஸ் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.

டிம் டேவி

"இது எனது தனிப்பட்ட முடிவாகும். என் பதவிக்காலம் முழுவதும் என்னை ஆதரித்த அனைவருக்கும் நான் நன்றியுடன் இருப்பேன். பிபிசி நிறுவனம் மீண்டும் நம்பிக்கையை மீட்டெடுக்கும் என நம்புகிறேன்,"
என டிம் டேவி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், புதிய டைரக்டர் ஜெனரல் நியமிக்கப்படும் வரை டிம் டேவி இடைக்காலமாக தனது பதவியில் தொடரவுள்ளார் என பிபிசி தெரிவித்துள்ளது.

டொனால்டு டிரம்ப்

இதனிடையே டிம் டேவி மற்றும் செய்தித் துறை தலைவர் டெபோரா டர்னஸ் ஆகியோரது ராஜினாமா அறிவிப்பை டொனால்டு டிரம்ப் வரவேற்றுள்ளார். "இது உண்மையை ஒப்புக் கொண்டது போன்ற தீர்மானம். உண்மையை மறைக்கும் ஊடகங்கள் மக்களிடம் நம்பிக்கையை இழந்து விடுகின்றன," என அவர் தனது Truth Social பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சுமார் ஐந்து ஆண்டுகளாக நீடித்த இந்த சர்ச்சை, இறுதியில் பிபிசி நிறுவனத்தின் உயரதிகாரிகள் இருவரின் ராஜினாமாவுடன் முடிவடைந்துள்ளது. அதே நேரத்தில் உலகின் மிகப் பெரிய ஊடக நிறுவனமான பிபிசிக்கு இது ஒரு பெரும் சோதனையாகவும் பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+