மறந்துபோன தேதி.. மை கசிந்த போனா.. ‛‛கடவுளே’’ என புலம்பி கையெழுத்திட்டு பிரிட்டன் மன்னரான சார்லஸ்!
லண்டன்: பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத் மறைந்த நிலையில் புதிய மன்னராக அவரது மூத்த மகன் சார்லஸ் அரியனையில் ஏறுகிறார். இந்நிலையில் தான் மன்னராக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் விழாவில் தேதியை மறந்த அவர் கையெழுத்திட்ட பேனாவில் மை கசிந்ததால் அதிருப்தி அடைந்து ‛கடவுளே நான் இதை வெறுக்கிறேன்' என புலம்பிய வீடியோ வெளியாகி உள்ளது.
பிரிட்டன் மகாராணியாக இருந்தவர் 2ம் எலிசபெத். இவர் 1952ம் ஆண்டில் தனது 21வயது வயதில் அரியனை ஏறிய நிலையில் 70 ஆண்டு காலமாக பிரிட்டன் மகாராணியாக செயல்பட்டு வந்தார்.
வயது முதிர்வு காரணமாக அவர் சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அரசு விழா, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காத அவர் சமீபத்தில் பிரிட்டன் பிரதமராக தேர்வான லிஸ் ட்ரஸை மட்டும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

மறைந்த பிரிட்டன் மகாராணி
இதுதான் அவர் மக்கள் மத்தியில் தோன்றிய கடைசி தருணமாகும். ஏனென்றால் அடுத்த சில நாட்களில் அதாவது கடந்த 8ம் தேதி இரவில் உடல்நலக்குறைவால் மகாராணி 2ம் எலிசபெத் காலமானார். இவரது செப்டம்பர் 19ம் தேதி இறுதி சடங்குகள் நடத்தப்பட உள்ளது. இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சார்லஸ் மன்னராக அறிவிப்பு
இதற்கிடையே தான் மகாராணி 2ம் எலிசபெத் மறைவால் பிரிட்டனின் புதிய மன்னராக அவரது மூத்த மகன் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் மன்னராக ஏற்கனவே 2 பேர் சார்லஸ் என்ற பெயரில் இருந்ததால் இவர் 3ம் சார்லஸ் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறார். இந்நிலையில் தான் சார்லஸ் பிரிட்டன் மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

தேதியை மறந்த சார்லஸ்
அதாவது வடக்கு அயர்லாந்தில் நடந்த அரச விழாவில் 3ம் சார்லஸ் மன்னராக கையெழுத்திட்டார். இதற்காக அவர் ஆவணம் ஒன்றில் சார்லஸ் கையெழுத்திடும் முன்பு இன்று ‛இன்று செப்டம்பர் மாதம் 12ம் தேதியா' என கேட்கிறார். அதற்கு அருகே நின்ற உதவியாளர் 13ம் தேதி என கூறுகிறார். இதையடுத்து ‛‛அடக்கடவுளே கீழே நான் தவறான தேதியை குறித்துவிட்டேன்'' எனக்கூறி அதனை சரிசெய்து கையெழுத்திடுகிறார். இந்த வேளையில் அவரது மனைவியும், மகாராணியுமான கமிலா, ‛‛நீங்கள் இதற்கு முன்பு 12ம் தேதி என குறிப்பிட்டு உள்ளீர்கள்'' என நினைவுப்படுத்தினார்.

மை கசிந்த பேனா
மேலும் சார்லஸ் கையெழுத்திட பயன்படுத்திய பேனாவில் இருந்து மை கசியத்தொடங்கியது. இதனால் அவரது கையில் பேனா மை பரவியது. இதனால் விரக்தி அடைந்த அவர், ‛‛கடவுளே நான் இதை வெறுக்கிறேன். இந்த பேனாவை வெறுக்கிறேன்'' என அவரது மனைவி கமிலாவிடம் கூறிவிட்டு அவர் கையெழுத்திட வசதியாக போனாவை கொடுக்கிறார். இதையடுத்து இன்னொரு பேனாவை பயன்படுத்தி அவரது மனைவி கமிலா இருக்கையில் அமர்ந்து ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

கோபமடைந்த சார்லஸ்
அப்போது சார்லஸ், ‛‛இத்தகைய ரத்தகளரியை (ப்ளடி திங்) பொறுத்து கொள்ள முடியாது'' என கோபமாக கூறினார். முன்னதாக ஆவணங்கள் இருந்த மேஜை மிகவும் சிறியதாக இருந்ததால் அவர் கையெழுத்திடுவதில் சிரமத்தை சந்தித்தார் எனவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போ இணையதளத்தில் பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications