இங்கிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமர் லிஸ் டிரஸ்.. இன்னொரு மார்கரெட் தாட்சர்? எகிறும் எதிர்பார்ப்பு
லண்டன்: இங்கிலாந்து நாட்டின் பிரதமர் பதவிக்கான தேர்தலில் வெளியுறவுத்துறை அமைச்சரான லிஸ் டிரஸ் என்ற மேரி எலிசபெத் டிரஸ் (வயது 47) வெற்றி பெற்றுள்ளார். போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கை வீழ்த்தி லிஸ் டிரஸ் பிரதமராகி உள்ளார்.
பிரிட்டன் (இங்கிலாந்து) பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து புதிய பிரதமர் யார் என்பதற்கான தேர்தல் நடைபெற்றது. போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் ரிஷி சுனக்; லிஸ் டிரஸ் ஆகியோர் புதிய பிரதமருக்கான போட்டியில் இருந்தனர். தற்போது ரிஷி சுனக் வீழ்த்தப்பட்டு லிஸ் டிரஸ் என்ற மேரி எலிசபெத் டிரஸ் வெற்றி பெற்றுள்ளார்.

பெற்றோரும் கல்வியும்
லிஸ் டிரஸ் என்ற லிஸ் ட்ரஸ் 1975-ம் ஆண்டு கணிதப் பேராசிரியர் மற்றும் செவிலியரான தாய் ஆகியோருக்கு மகளாக பிறந்தார் லிஸ் டிரஸ். அவரது பெற்றோர் இடதுசாரிகளாக அறியப்பட்டனர். லிஸ் டிரஸ், லண்டன், நார்ஃபோக் நகரங்களில் வசித்தார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ரௌண்ட் ஹே பள்ளியில் படித்தார்.

அரசியலும் தேர்தலும்
இங்கிலாந்து அரசியலில் தொடக்கத்தில் லிபரல் டெமாக்ரட்டுகளை ஆதரித்தார்; பின்னர் ஆக்ஸ்போர்டு படிப்பு காலத்தில் கன்சர்வேடிவ் கட்சிக்கு ஆதரவாக மாறினார் டிரஸ். கடந்த 2000-ம் ஆண்டு ஹக் ஓ லியரி என்பவரை மணந்தார் லிஸ். 2010-ம் ஆண்டு இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பி.யானார். 2012 இங்கிலாந்து கல்வி அமைச்சராக, 2014-ல் சுற்றுச்சூழல் செயலாளராக பணிபுரிந்தார். இங்கிலாந்து பிரதமராக தெரசா மே பதவி வகித்த காலத்தில் நிதித் துறை முதன்மைச் செயலராக, நீதித்துறை செயலாளராக பணியாற்றினார் லிஸ். இங்கிலாந்து வரலாற்றில் இத்தகைய உயரிய பதவிகளைப் பெற்ற பெண் என புகழாரம் சூட்டப்பட்டார் லிஸ் டிரஸ்.

வெளியுறவுத்துறை அமைச்சர் டூ பிரதமர்
போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் சர்வதேச வர்த்தகச் செயலாளராகவும் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் யார் அடுத்த பிரதமர் என்ற போட்டியில் இயல்பாகவே லிஸ் டிரஸும் களமிறங்கினார். இப்போது இந்திய வம்சாவளியின் ரிஷி சுனக்கை வீழ்த்தி இங்கிலாந்தின் புதிய பிரதமராகி உள்ளார் லிஸ் டிரஸ். மார்கரெட் தாட்சர், தெரசா மே ஆகியோரைத் தொடர்ந்து இங்கிலாந்தின் 3-வது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் லிஸ் டிரஸ்.

இன்னொரு தாட்சர்?
இங்கிலாந்தின் இரும்பு பெண்மணி என வரலாற்றில் நிலை பெற்றுவிட்ட மார்கரெட் தாட்சர் போல இளம் பிராயத்தில் வேடமணிந்தவர் லிஸ் டிரஸ். இன்றும் தாட்சரைப் போல தோற்றம் கொண்டவராக காட்சி தருகிறார் லிஸ் டிரஸ். சரித்திரத்தின் பக்கங்களில் இன்னொரு மார்கரெட் தாட்சராக லிஸ் டிரஸ் உருவெடுப்பாரா? என்ற பதிலுக்கு காலமும் உலகமும் காத்திருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications