"நிர்வாண ஆட்டம்.." விமானத்தில் நடுவானில் விமான ஊழியர் செய்த காரியம்.. 37,000 அடி உயரத்தில் அதிர்ச்சி
லண்டன்: விமானம் சுமார் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமான ஊழியர் ஒருவர் தனது ஆடைகளை எல்லாம் களைந்து போட்டுவிட்டு நிர்வாணமாக ஆட்டம் போட்டு இருக்கிறார். உதவச் சென்ற இதர ஊழியர்களிடமும் அவர் பிரச்சினை செய்திருக்கிறார். இதனால் வேறு வழியில்லாமல் அந்த ஊழியரை சீட் ஒன்றில் கட்டிப் போட்டுள்ளனர்.
பொதுவாகவே விமானத்தில் எப்போதும் அதிகபட்ச பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும். இதன் காரணமாகவே விமான விபத்துகள் என்பது அரிதிலும் அரிதாகவே இருக்கிறது. அதேநேரம் விமானங்களிலும் கூட சில பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. அதில் ஊழியர்கள் ஒருவர் ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக ஆட்டம் போட்டு இருக்கிறார்.

நடுவானில் ஆட்டம்
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து லண்டனுக்குச் சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் தான் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. அங்கு பிஸ்னஸ் கிளாசில் திடீரென ஆடைகளைக் களைந்துவிட்டு நடனமாடியிருக்கிறார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த ஊழியர் போதைப் பொருள் எடுத்துக் கொண்டு இதுபோல ஆட்டம் போட்டுள்ளார்.
நிர்வாணம்
விமானம் கிளம்பி சிறிது நேரம் வரை எல்லாம் சரியாகவே போய்க் கொண்டு இருந்தது. சரியாக, உணவு பரிமாறும் நேரம் வந்தபோது ஊழியர் மாயமாகியுள்ளார். ஒரு ஊழியர் மட்டும் மாயமானதால், மற்றவர்கள் பதறிப் போய் தேட ஆரம்பித்துள்ளனர். அப்போது தான் அங்கு பிஸ்னஸ் கிளாஸ் கேபின் கழிவறையில் ஆடைகள் ஏதுவுமின்றி அந்த நபர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவருக்கு உதவச் சென்ற ஊழியர்களிடம் சண்டை பிடித்துள்ளார்.
இதையடுத்து வேறு வழியில்லாமல் அவரை அங்கு ஒரு சீட்டில் உட்கார வைத்துள்ளனர். போதையில் ஆட்டம் போட்டதால் சீட்டில் இருந்து மீண்டும் எழ முடியாதபடி கட்டிப் போட்டுள்ளனர். அடுத்த சுமார் 10.30 மணி நேரத்திற்கு அவரை இதுபோலவே கட்டிப் போட்டுள்ளனர். விமானம் தரையிறங்கியதும், அந்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
என்ன நடந்தது?
அந்த ஏர்பஸ் ஏ380 விமானத்தில் சுமார் 470 பயணிகள் இருந்தனர். ஒரு ஊழியர் திடீரென இதுபோல பிரச்சினை செய்ததால் மற்ற ஊழியர்கள் அவரை கட்டுப்படுத்தியுள்ளனர். அதேநேரம் இதனால் பணிகளுக்கு எந்தவொரு சிரமமோ அல்லது பாதிப்போ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை உறுதி செய்த பிரிட்டிஷ் ஏர்வேஸ், அந்த ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்காட்லாந்து யார்டு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர் தகவல்
இந்தச் சம்பவம் குறித்து ஊழியர் ஒருவர் கூறுகையில், "நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது அந்த நபர் போதை மாத்திரை சாப்பிட்டு மாத்திரைகளை உட்கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறோம். விமானம் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது இதைச் செய்துள்ளார். ஆனால், இதனால் எந்தவொரு பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை. அவர் ஆடைகளைக் களைந்து கழிவறையில் நடனமாடிக் கொண்டிருந்தார். அவரை மீட்கவே நீண்ட நேரம் ஆனது" என்றார்.
நல்வாய்ப்பாக அந்த ஊழியர் விமானத்தில் சென்ற பயணிகள் யாருக்கும் சொந்தரவு கொடுக்கவில்லை. ஆனாலும், நடுவானில் பொறுப்பாக இருக்க வேண்டிய ஊழியர் இதுபோல செய்தது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.












Click it and Unblock the Notifications