பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்.. எகிறும் தொற்று.. திடீர் முடிவால் திணறும் இங்கிலாந்து அரசு
இங்கிலாந்தில் கொரோனாவைரஸ் பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது
லண்டன்: கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் அதிகமாகி உள்ளன.. இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு அமைச்சர் பதவி விலகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
2 வருடங்களாகவே கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை கிலியில் வைத்திருக்கிறது.. இதை கட்டுப்படுத்த அனைவரும் போராடி வரும் நிலையில், ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவி கொண்டு வருகிறது.
இது இங்கிலாந்துக்கும் பரவி உள்ளது.. லண்டனில் இந்த தொற்று சுமார் 40% நோய்த்தொற்றுகளுக்கு காரணமாக இருந்து வருவது அதிர்ச்சியை தந்து வருகிறது..

ஒமிக்ரான்
2 தடுப்பூசிகளை போடப்பட்டவர்கள் கூட இன்னும் பாதிக்கப்பட்டு கொண்டிருப்பதால், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 82,886 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது அம்மக்ளை மேலும் கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.. நாளுக்கு நாள் இந்த தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.

அதிகரிப்பு
உலக அளவில் தொற்று பாதிப்பில் இங்கிலாந்து இப்போது 4-வது இடத்திலேயே நீடித்து வருகிறது... கடந்த 15-ம் தேதி கணக்குப்படி 78,610 பேருக்கும், 16-ம் தேதி 88,376 பேருக்கும், 17-ம் தேதி 93,045 பேருக்கும், 18-ம் தேதி 90,418 பேருக்கும் கொரோனாவைரஸ் தொற்று உறுதியானது... இது இன்றைய நிலவரப்படி தொடர்ந்து அதிகரித்துதான் காணப்படுகிறது.. நேற்றுகூட இங்கிலாந்தில் 82,886 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது... இதனால், தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 13 லட்சத்தை தாண்டிவிட்டது.

உயிரிழப்பு
45 பேர் உயிரிழந்துள்ளனர்.. இங்கிலாந்தில் கொரோனாவால் இறந்தவர்கள் இதுவரை 1,47,218 ஆக உயர்ந்துவிட்டது. 97.83 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றாலும், 14.30 லட்சத்துக்கும் அதிகமானோர் இன்னமும் சிகிச்சையில் உள்ளனர். ஒருபக்கம் கொரோனா, இன்னொரு பக்கம் ஒமிக்ரான் என அந்த நாடு சிக்கி கொண்டுள்ளது.. இதனால் அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கி கடந்த வாரமே உத்தரவு பிறப்பித்திருந்தார்..

நெகட்டிவ் சர்ட்டிபிகேட்
அதன்படி, நைட் கிளப்புகள், ஹோட்டல்கள், நெரிசலான இடங்களுக்கு செல்லும் மக்கள் தடுப்பூசி சர்ட்டிபிகேட் அல்லது கொரோனா நெகடிவ் சர்ட்டிபிகேட் வைத்திருப்பது கட்டாயமாக்கபட்டுள்ளது. இதனிடையே, போரிஸ் ஜான்சனின் இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு அவரது சொந்த கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளிருந்து திடீரென எதிர்ப்பு கிளம்பியுள்ளது.. ஆனால் அதை போரிஸ் ஜான்சான் கண்டுகொள்ளவே இல்லை.. தொற்றை குறைப்பது குறித்தும், ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்..
Recommended Video

கொந்தளிப்பு
இதனால் மேலும் கொந்தளிப்புக்குள்ளாகிவிட்டது அவரது அமைச்சரவை.. போரிஸ் ஜான்சன் விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முக்கிய பொறுப்பு வகித்து வந்த பிரெக்ஸிட் அமைச்சர் டேவிட் புரோஸ்ட் தன்னுடைய பதவியையே ராஜினாமா செய்துள்ளார்.. இவர், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்ஸிட் நடவடிக்கையின் முன்னேற்றத்துக்கு பெரும் பங்கு வகித்தவர்.. ஆனால், இவரே இப்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளது அந்நாட்டு அரசியலில் குழப்பத்தை விளைவித்து வருகிறது..












Click it and Unblock the Notifications