‛2024ல் மீண்டும் பிரதமராகும் மோடி’.. கணித்த ‛நியூ நோஸ்ராடாமஸ்’! ஆஹா இவர் சொன்னா அப்படியே பலிக்குமே!
லண்டன்: அடுத்த ஆண்டு நம் நாட்டில் நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? என்பது பற்றி இங்கிலாந்தை சேர்ந்த ‛நியூ நோஸ்ராடாமஸ்’ என பெயர் பெற்ற கிரேக் ஹாமில்டன் கணித்து கூறியுள்ளார். இவரது முந்தைய பல கணிப்புகள் அப்படியே நடந்துள்ள நிலையில் அவரது 2024ம் ஆண்டுக்கான தேர்தல் தொடர்பான கணிப்பு அதிக கவனம் பெற்றுள்ளது.
2023ம் ஆண்டின் இறுதி மாதத்தில் நாம் உள்ளோம். இன்னும் 6 நாளில் 2023ம் ஆண்டு முடிந்து 2024ம் ஆண்டுக்கான புத்தாண்டு பிறக்க உள்ளது. இந்நிலையில் தான் அடுத்த ஆண்டுக்கான கணிப்புகளை ஜோதிடர்கள், ஆய்வாளர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தான் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரை சேர்ந்த கிரேக் ஹாமில்டன் முக்கிய கணிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தல்களில் வெற்றி பெறுவது யார்? என்பது பற்றி அவர் முக்கிய விஷயங்களை கணித்து கூறியுள்ளார்.
கிரேக் ஹாமில்டனின் முந்தைய பல கணிப்புகள் அப்படியே நடந்துள்ளன. இதற்கு முன்பு கொரோனா பரவல், டொனல்ட் ட்ரம்பின் அதிபர் பதவி, பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத்தின் மறைவு உள்ளிட்டவை அவர் கணித்தது போலவே நடந்தது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் இவரது கணிப்புகள் அதிக முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும்.
அதாவது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோதிடர் நோஸ்ராடாமஸ் என்பவர் 16ஆம் நூற்றாண்டிலேயே வாழ்ந்து மறைந்தாலும் கூட அவர் ஏராளமான கணிப்புகளை விட்டுச் சென்றிருந்தார். அந்த கணிப்புகளில் பல அப்படியே நடந்து வருகின்றன. இதனால் கிரேக் ஹாமில்டனை ‛நியூ நோஸ்ராடாமஸ்’ என பலரும் அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் தற்போது கிரேக் ஹாமில்டன் பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் தனது கணிப்புகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதில் அவர் அடுத்த ஆண்டு நம் நாட்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற தேர்தல் குறித்த அவர் கூறியதாவது:
‛‛இந்தியாவின் பிரதமராக உள்ள நரேந்திர மோடி மீண்டும் நாட்டை வழிநடத்துவதில் உறுதியாக இருக்கிறார். அவர் இப்போதும் ஆட்சியில் இருக்கிறர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மூலம் மீண்டும் அவரே பிரதமராக தேர்வு செய்யப்படுவார். பிரதமர் மோடி இந்தியாவை நவீனமயமாக்கி வருவதையும், ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதை முன்னெடுத்து வருவதை நான் கண்டு வருகிறேன்’’ என கூறியுள்ளார்.
மேலும் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛அமெரிக்க அதிபர் தேர்தலை தாமதப்படுத்துவதற்கான செயல்கள் நடக்கும். ஆனால் அதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடையும். மேலும் இந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தான் வெற்றி பெறுவார். அவரது வெற்றிக்கு கறுப்பின பெண் ஒருவர் உதவி செய்வார்’’ என தெரிவித்துள்ளார்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications