இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கருணை கொலை மசோதாவை வெற்றி பெற வைத்த எம்பிக்கள்.. வரலாற்று சம்பவம்
லண்டன்: இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள நோய்வாய்ப்பட்ட முதியவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள அனுமதிக்கும் மசோதாவின் மீது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) வாக்கெடுப்பு நடந்தது. இதில் பெரும்பான்மையான எம்பிக்கள் ஆதரித்ததன் காரணமாக கருணை கொலைக்கு இங்கிலாந்தில் சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.
குணப்படுத்தவே முடியாத தீராத நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுதும் கஷ்டப்படும் வயது முதிர்ந்த நோயாளிகள் கண்ணியமாக இறப்பதற்கான உரிமை வேண்டும் என்ற குரல் உலகம் முழுவதும் வலுத்து வருகிறது. அதற்கு அமெரிக்காவின் சில மாகாணங்கள், பெல்ஜியம் , கனடா , கொலம்பியா , லக்சம்பர்க் , நெதர்லாந்து , அயர்லாந்து சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் சில மாநிலங்கள் அனுமதிக்கின்றன. இந்தியாவிலும் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் நீதிமன்ற அனுமதிக்கு பிறகு அனுமதிக்கின்றன.

கருணைக் கொலை என்பது இருவகையாக பிரிக்கப்படுகிறது. அவை ஆக்டிவ் யுதான்சியா மற்றும் பேசிவ் யுதான்சியா என்பதாகும். ஆக்டிவ் யுதான்சியா என்பது, ஒருவரை, விஷ ஊசி போட்டோ அல்லது வேறு முறைகளிலோ, டாக்டர்கள் முன்னிலையில் உடனடியாக சாக அனுமதிப்பதாக உள்ளது.
அதேபோல் பேசிவ் யுதான்சியா கருணை கொலை என்பது, மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் ஒருவரை உயிர் வாழச் செய்வதை தவிர்த்து, அவரது உயிரை, சிறிது நேரத்தில் அகற்றுவதாகும். அதாவது, நோயாளி மரணமடைய வேண்டும் என்பதற்காகவே, அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையை நிறுத்துவதாகும். எடுத்துக்காட்டாக நோயாளிகளின் செயற்கை சுவாசக் கருவி இணைப்பை துண்டிப்பது ஆகும்.
இந்தியாவை பொறுத்தவரை கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகு கருணை கொலைக்குஅனுமதி இருக்கிறது.
உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டில் அருணா ஷண்பாக் என்பவரின் கருணை கொலை வழக்கில் தான் முக்கியமான தீர்ப்பினை அளித்தது. இதன்படி,குணப்படுத்தவே முடியாத தீராத நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுதும் கஷ்டப்படும் வயது முதிர்ந்த நோயாளிகள் கண்ணியமாக இறப்பதற்கான உரிமை என்று கூறிய உச்ச நீதிமன்றம், நோயாளியைக் கருணைக் கொலை செய்ய விரும்பும் உறவினர்கள் அல்லது நண்பர்கள் உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று கூறியது.
உயர் நீதிமன்றம் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழுவை வைத்து, அந்த நோயாளியைப் பரிசோதித்து அறிக்கை அளிக்க வேண்டும். அதனை வைத்து உயர் நீதிமன்றம் முடிவை எடுக்கலாம். ஆனால், இதுபோன்ற வழக்குகளை முடிந்த அளவு விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் இந்திய அரசு கருணைக் கொலை தொடர்பாக சட்டம் இயற்றும்வரை மேலே சொன்ன நடைமுறைகள் அமலில் இருக்கும் எனத் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.
இந்நிலையில் இங்கிலாந்து வேல்ஸில் உள்ள நோய்வாய்ப்பட்ட முதியவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள அனுமதிக்கும் மசோதாவின் மீது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) வாக்கெடுப்பு நடந்தது. இதில் பெரும்பான்மையான எம்பிக்கள் ஆதரித்ததன் காரணமாக கருணை கொலைக்கு இங்கிலாந்தில் சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.
முன்னதாக இந்த மசோதாவிற்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 314-291 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் கருணை கொலை மசோதா நிறைவேறி உள்ளது. 1967 ஆம் ஆண்டு கருக்கலைப்பு ஓரளவு சட்டப்பூர்வமாக்கப்பட்ட பின்னர் , சமூகக் கொள்கையில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றமாக இந்த கருணை கொலை சட்டம் பார்க்கப்படுகிறது.
அதேநேரம் இதனை எதிர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் பணத்தை மிச்சப்படுத்தவோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் சுமையைக் குறைக்கவோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள கட்டாயப்படுத்தப்படலாம் என்று கவலை தெரிவித்தனர். சில எம்பிக்கள், சிறந்த மற்றும் தார்மீக ரீதியாகன, நோய்த்தடுப்பு சிகிச்சையில் முன்னேற்றங்கள் தேவை என்றும் அவர்கள் வாழும் காலத்தில் துன்பத்தைக் குறைக்கும் அளவிற்கு மருத்துவ சிகிச்சைகள் தேவை என்றும் கோரிக்கை வைத்தனர்.
இங்கிலாந்து எம்பி டயான் அபோட் கூறும் போது, "குரலற்றவர்களுக்காக மீண்டும் ஒரு முறை குரல் கொடுங்கள். ஏனெனில் இந்த சட்ட மசோதா தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றப்பட்டால், தேவையில்லாத மக்கள் தங்கள் உயிர்களை இழப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் நமது சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களாகவும் இருப்பார்கள்" என்று கவலை தெரிவித்தார். இங்கிலாந்தில் அடுத்தாக மேல்சபைக்கு இந்த மனு அனுப்பப்பட உள்ளது. அதனை அவர்கள் திருத்தலாம் அல்லது தாமதம் செய்யலாம். ஆனால் கண்டிப்பாக நிறைவேறுவது உறுதி தான்.












Click it and Unblock the Notifications