லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராணி எலிசபெத்தை விட அதிக சொத்து.. இங்கிலாந்தை திரும்பி பார்க்க வைத்த இந்திய பெண்.. யார் இவர்?

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத்தை விட அங்கு வசிக்கும் இந்திய பெண் ஒருவர் அதிக சொத்து மதிப்பு கொண்டவராக இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. யார் அந்த இந்திய பெண்.. அவர் எப்படி பல கோடிகளுக்கு அதிபதி ஆனார் என்று பார்க்கலாம்.

இங்கிலாந்து நாட்டின் வருங்கால பிரதமராகும் வாய்ப்பு கொண்டவராக பார்க்கப்படுபவர் ரிஷி சுனக். அந்நாட்டு நிதித்துறை அமைச்சரான இவருக்கு அங்கு பிரதமராகும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.

ஆனால் சமீபத்தில் அவரின் மனைவி அக்சதா மூர்த்திக்கு எதிராக வைக்கப்பட்ட வரி ஏமாற்று புகார் காரணமாக ரிஷிக்கு அரசியல் ரீதியாக சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீட்டிற்கு வரும் வருவாய்க்கு அக்சதா வரி கட்டவில்லை என்பதுதான் அவர் மீது வைக்கப்படும் புகார்.

 ரிஷி சுனக்

ரிஷி சுனக்

அரசின் விலக்கை பயன்படுத்தி அக்சதா வெளிநாட்டு வருவாய்க்கு வரி கட்டவில்லை. இதன் மூலம் 20 மில்லியன் யூரோ வரை அவர் வரி கட்டாமல் ஏமாற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் இதை சட்டப்படிதான் செய்துள்ளார். அரசு மூலம் இவருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ரிஷி தனது நிதித்துறை அதிகாரத்தை பயன்படுத்தி தனது மனைவிக்கு வரி விலக்கு பெற்றுக்கொடுத்ததாக புகார்கள் வைக்கப்பட்டுள்ளன.

அக்சதா

அக்சதா

இந்த விவகாரம் இங்கிலாந்தை உலுக்கி உள்ள நிலையில்தான் அக்சதா அந்நாட்டின் ராணி எலிசபெத்தை விட அதிக சொத்து கொண்டவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அக்சதா மூர்த்தி வேறு யாரும் கிடையாது.. இன்போசிஸ் இணை நிறுவனர் என் ஆர் நாராயண மூர்த்தியின் மக்கள்தான். 1981ல் இன்போசிஸ் நிறுவனத்தை நாராயண மூர்த்தி தனது மனைவி சுதாவிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி தொடங்கினார்.

அக்சதா யார்?

அக்சதா யார்?

இப்போது உலகில் டாப் ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இன்போசிஸ் உள்ளது. இந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 100 பில்லியன் டாலருக்கு அதிகம் ஆகும். இந்த நிறுவனம் வால் ஸ்ட்ரீட் பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்திய நிறுவனம் ஆகும். இவரின் மனைவி சுதா டாடா நிறுவனத்தில் பணியாற்றிய முதல் பெண் பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அக்சதா தனது கணவர் ரிஷியை காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்போசிஸ்

இன்போசிஸ்

பெற்றோர்கள் சம்மதத்தோடு பிரிட்டிஷ் சவுதாம்ப்டன் பகுதியில் வசித்து வந்த குடும்பம் மருத்துவரின் மகனான ரிஷியை அக்சதா மணந்தார். அந்த ரிஷிதான் இப்போது அந்நாட்டின் நிதித்துறை அமைச்சராக இருக்கிறார். இருவரும் அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலையில் ஒன்றாக படிக்கும் போது காதலில் விழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்போசிஸ் நிறுவனம் தங்களின் பங்கு மதிப்பு விவரங்களை இப்போது வெளியிட்டுள்ளது.

சொத்து என்ன?

சொத்து என்ன?

அதில் அக்சதா மொத்தம் 1 பில்லியன் டாலர் பங்கு மதிப்பை வைத்து இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் அக்சதா அந்நாட்டு ராணி எலிசபெத்தை விட அதிக சொத்து மதிப்பு கொண்டவராகி உள்ளார். எலிசபெத் ராணிக்கு 460 மில்லியன் டாலர் மட்டுமே சொத்து உள்ளது. இதன் மூலம் அந்த நாட்டின் பணக்கார பெண்ணாக அக்சதா உருவெடுத்துள்ளார். அவர் மீது வரி ஏய்ப்பு புகார் உள்ள நிலையில்தான் இந்த ரிப்போர்ட் வந்துள்ளார். ஆனால் அவர் இதுவரை செலுத்ததாக வரிகளை எல்லாம் செலுத்தினாலும் ராணியை விட அதிக சொத்து கொண்டு இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
England Minister Rishi Sunak Wife Akshata Murt has more wealth than Queen Elizabeth. இங்கிலாந்து ராணி எலிசபெத்தை விட அங்கு வசிக்கும் இந்திய பெண் ஒருவர் அதிக சொத்து மதிப்பு கொண்டவராக இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X