வந்த 24 மணி நேரத்திலேயே அதிரடி.. "இடத்தை காலி பண்ணுங்க".. ரிஷி சுனக் போட்ட ஆர்டர்.. பரபரக்கும் யு.கே
லண்டன்: யுனைட்டட் கிங்டமின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வாகி இருக்கிறார். நேற்று பதவி ஏற்ற உடனுக்குடன் அதிரடியை செய்ய தொடங்கிவிட்டார்.
யுனைட்டட் கிங்டமின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பொருளாதார சரிவு காரணமாகவும், பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியவில்லை என்பதால் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். சொந்த கட்சி எம்பிக்கள் அவருக்கு எதிராக திரும்பி உள்ளதால் அவர் ராஜினாமா செய்தார்.
இவரை தொடர்ந்து லிஸ் ட்ரூஸ் மற்றும் ரிஷி சுனக் இடையே பிரதமர் பதவிக்கான உட்கட்சி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் லிஸ் வெற்றிபெற்றார்.

லிஸ் ட்ரூஸ்
இதையடுத்து பிரதமராக பதவி ஏற்ற அவரும் பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியவில்லை. அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்ய போதிய எம்பிக்கள் ஆதரவும் இல்லை. இந்த நிலையில்தான் லிஸ் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். 44 நாட்கள் மட்டுமே அவர் பதவியில் இருந்தார். இதையடுத்து மீண்டும் உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் போரிஸ் ஜான்சன் போட்டியிட முடியவில்லை. போட்டியிட விரும்பிய மற்ற வேட்பாளர்களுக்கு எம்பிக்கள் ஆதரவு இல்லை.

ரிஷி சுனக்
இதனால் ரிஷி சுனக் போட்டியின்றி வெற்றிபெற்றார். இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவி ஏற்று உள்ள அவர்.. முதல் நாளில் இருந்தே அதிரடிகளை தொடங்குவேன் என்று உறுதி அளித்து இருந்தார். முதல் நாளில் இருந்தே கட்சி ரீதியாக அதிரடியாக பணிகளை செய்வேன் என்று உறுதி அளித்து இருந்தார். அதன்படியே பதவி ஏற்ற 24 மணி நேரத்திலேயே ரிஷி சுனக் அதிரடியை மேற்கொள்ள தொடங்கி உள்ளார். அதன்படி லிஸ் அமைச்சரவையில் இருந்த பெரும்பாலான அமைச்சர்களை பதவி விலக உத்தரவிட்டு உள்ளார். இதுவரை 4 அமைச்சர்கள் இப்படி பதவி விலகி உள்ளனர்.

பதவி விலகல்
அதேபோல் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் துணை பிரதமராக இருந்த டொமினிக் ராப் தற்போது மீண்டும் துணை பிரதமர் ஆகி உள்ளார். மேலும் ஜெரேமி ஹண்ட் நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்று உள்ளார். இது போக நான்கு முக்கியமான அமைச்சர்களை ரிஷி சுனக் அதிரடியாக நீக்கி உள்ளார். இதில் ஜெரெமி நிதி அமைச்சராக அறிவிக்கப்பட்டது மிகப்பெரிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த ரேஸில் வேறு சிலர் இருந்த நிலையில் ரிஷி சுனக், தற்போது ஜெரெமியை இந்த பதவிக்கு தேர்வு செய்துள்ளார்.

சுயேல்லா
சுயேல்லா பேவர்மென் தற்போது உள்துறை செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் கடந்த வாரம்தான் இதே பதவியில் ராஜினாமா செய்தார். இவர் தனது சொந்த மெயில் ஐடி மூலம் உள்துறை கோப்புகளை மெயில் செய்த காரணத்தால் ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த போதே இவர் பிரதமர் லிஸ்ஸை கடுமையாக விமர்சனம் செய்தார். தற்போது அதே பதவிக்கு ரிஷி சுனக் ஆட்சியின் கீழ் மீண்டும் சுயேல்லா நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்தில் ரிஷி சுனக் அதிரடியாக அமைச்சரவையை மாற்றி உள்ளார். விரைவில் அங்கு பட்ஜெட்டும் முறையாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications