188 குழந்தைகள்.. அத்தனையும் கற்பனை.. அரசை ஏமாற்றி ரூ. 18 கோடி சுருட்டிய பலே ஆசாமி!

188 கற்பனைக் குழந்தைகளின் பெயரில் ஊக்கத்தொகை பெற்று அரசை ஏமாற்றிய நபரை இங்கிலாந்து போலீசார் கைது செய்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

லண்டன்: அரசு வழங்கும் ஊக்கத்தொகையைப் பெறுவதற்காக ஒருவர் தனக்கு 188 குழந்தைகள் இருப்பதாக நாடகமாடி, நூதனமாக ரூ. 18 கோடியை ஏமாற்றிய சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.

ஒவ்வொரு நாடும் தனது நாட்டு குடிமக்களின் நலனுக்காக பல்வேறு சலுகைகளை, ஊக்கத்தொகைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் இங்கிலாந்து அரசு தன் நாட்டு மக்கள் தங்களது குழந்தைகளை வளர்ப்பதற்காக பெற்றோருக்கு ஊக்கத்தொகைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

பெற்றோர் தங்களுக்கு குழந்தை பிறந்ததும், அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால், அக்குழந்தையை வளர்ப்பதற்கான செலவுகளுக்கான தொகையை இங்கிலாந்து அரசு வழங்கும். அந்நாட்டு அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர்.

ஆனால் இந்தத் திட்டத்தை தவறாகப் பயன்படுத்தி, தனக்கு 188 குழந்தைகள் இருப்பதாக நாடகமாடி, ரூ. 18 கோடியை ஏமாற்றிய நபர் தற்போது போலீசில் வசமாகச் சிக்கியுள்ளார்.

 188 கற்பனைக் குழந்தைகள்

188 கற்பனைக் குழந்தைகள்

இங்கிலாந்தைச் சேர்ந்தவ இந்த 40 வயது நபர், ஏற்கனவே போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 16 ஆண்டுகள் தண்டனை பெற்றவர். இவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக சுமார் 70 வெவ்வேறான பெயர்களில் போலியான ஆவணங்களைத் தயாரித்து, இங்கிலாந்து அரசை ஏமாற்றி வந்துள்ளார். அதாவது 188 போலியான பெயர்களில் குழந்தைகள் இருப்பதாக அவர் அரசை ஏமாற்றி ஊக்கத்தொகை பெற்று வந்துள்ளார்.

கூட்டாளிகளும் கைது

கூட்டாளிகளும் கைது

தனிநபராக இல்லாமல் ஐந்து கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டு இந்த மோசடி வேலையைச் செய்து வந்துள்ளார். தனக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் என பலரது ஆவணங்களை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து, தனது கற்பனைக் குழந்தைகளின் பெற்றோர்களாக பயன்படுத்தியுள்ளார் அந்நபர். அதோடு ஒவ்வொரு குழந்தைக்கும் எனத் தனியே கணக்குப் புத்தகங்களையும் தயார் செய்து, முறையாக கணக்கு வழக்குகளையும் பார்த்து வந்துள்ளார். ஊக்கத்தொகை மட்டுமல்லாது அந்தக் குழந்தைகளின் பெயரைக் காட்டி, வரி ஏய்ப்பு மோசடியும் அந்நபர் செய்துள்ளார்.

போனால் சிக்கிய குற்றவாளி

போனால் சிக்கிய குற்றவாளி

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதுபோல், ஒன்பது ஆண்டு காலமாக அரசை ஏமாற்றி வந்த இந்நபர், ஒரே தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தியதால் போலீசில் இன்று சிக்கியுள்ளார். அதாவது ஆவணங்களைச் சோதனை செய்யும் அதிகாரி ஒருவர், ஒரே தொலைபேசி எண்ணுக்கு அதிக முறை ஊக்கத்தொகை சென்றுள்ளதைக் கண்டுபிடித்தார்.

 கைது

கைது

ஆனால் அவை அனைத்தும் வெவ்வேறு குழந்தைகளின் பெயர்களில் இருந்ததால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் மேற்கொண்ட விசாரணையில், மேற்கூரிய நபர் 188 குழந்தைகளின் பெயர்களில் ஊக்கத்தொகை பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. விரைந்து செயல்பட்ட காவல் துறையினர் அந்நபரையும், அவரது கூட்டாளிகளையும் கைது செய்துள்ளனர்.

சிறை தண்டனை

சிறை தண்டனை

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் பெற்ற 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன், கூடுதலாக மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டுள்ளது. ஊக்கத்தொகைக்காக 188 குழந்தைகளை கற்பனையில் உருவாக்கி, அரசை ஏமாற்றிய சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+