நொறுங்கும் நிறவெறி.. திரும்புகிறது வரலாறு.. ஐந்து கண்டங்களிலும் திரளும் மக்கள்.. இனவெறிக்கு எதிராக!
லண்டனில் எட்வர்ட் கோல்ஸ்ட்டன் சிலையை மக்கள் நொறுக்கினர்
லண்டன்: வரலாறு திரும்புகிறது... உலக மக்கள் விழிப்பின் உச்சத்துக்கு வந்துள்ளனர்.. அடிமைகளை வியாபாரம் செய்து பணம் ஈட்டிய ஆங்கிலேயர் எட்வர்ட்ஸ் கோஸ்ட்டனின் சிலை துவம்சம் செய்துள்ளனர் போராட்டக்காரர்கள்.. 125 ஆண்டு காலமாக இருந்த சிலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியதுடன், அதை ஆவேசமாக இழுத்து கொண்டு போய் கடலில் வீசியும் எறிந்தனர்!
அமெரிக்காவின் மின்னசொட்டாவில், ஜார்ஜ் என்ற கருப்பினரின் கொலை சம்பவமானது, உள்நாட்டு பிரச்சனையாகவும் விஸ்வரூபமெடுத்துள்ளது.
லட்சக்கணக்கான கறுப்பின மக்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்... இவர்களின் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

டென்ஷன்
போராட்டக்கார்களை பார்த்து அதிபர் டிரம்ப் ரொம்பவே டென்ஷன் ஆகி வருகிறார்.. மிரட்டல் விடுக்கிறார்.. ராணுவத்தை கொண்டு அடக்க போகிறேன் என்று எச்சரிக்கிறார்.. போராடுபவர்களை நாய்கள் என்று திட்டுகிறார்.. இருந்தாலும் சொந்த நாட்டில் ஒருத்தரைகூட இவரால் அடக்க முடியவில்லை. போதாக்குறைக்கு இவரது 2வது மனைவி, மகளும் நடந்து வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவும் இன்னும் சூடாகி உள்ளார்.

இனவெறி
ஜார்ஜ் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் இந்த போராட்டம் ஆரம்பமானது.. ஆனால் இப்போது நிறவெறி, இனவெறிக்கு எதிரான போராட்டமாக மாறி உள்ளது.. அதுவும் உலகளாவிய அளவில் உருமாறி உள்ளது. இங்கிலாந்திலும் நிறவெறிக்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது.. லண்டனில் முன்னாள் பிரதமரின் வின்ஸ்ட்டன்ட் சர்ச்சிலின் நினைவு சின்னம் தீது இனவெறி என்று போராட்டக்காரர்கள் எழுதி வைத்ததே இதற்கு சாட்சி. இதைதவிர, அங்கிருக்கும் மகாத்மா காந்தி சிலை, ஆபிரகாம் லிங்கன் சிலைகளிலும் இனவெறிக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது இன்னுமொரு சாட்சி.

எட்வர்ட் கோஸ்ட்டன்
இப்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.. இங்கிலாந்தில் எட்வர்ட் கோஸ்ட்டனின் சிலை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.. கோஸ்ட்டன் அங்கு முன்னாள் எம்பியாக இருந்தவர்.. அடிமைகளை விற்றே பணம் சம்பாதித்து கொழுத்த பெரும் கோடீஸ்வரர். இவரது சிலையைதான் ஆர்ப்பாட்டக்காரர்கள் துவம்சம் செய்தனர்.. அதோடு விடவில்லை, அந்த சிலையை தரதரவென இழுத்து கொண்டு போய் கடலில் வீசியெறிந்தனர். 125 ஆண்டு காலமாக இருந்த சிலை துவம்சம் செய்யப்பட்டது மிகப்பெரிய அதிர்வலையை உண்டாக்கி வருகிறது.

நொறுங்கிய சிலை
மேலும் போராட்டக்காரர்கள் எந்த அளவுக்கு உக்கிரத்தில் உள்ளனர் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.. இவர்களை எல்லாம் கட்டுப்படுத்த போலீசார் எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறார்கள்.. ஆனால் யாரையுமே கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களின் ஆவேசத்தை குறைக்க முடியவில்லை.. ஆஸ்திரேலியாவில் கொந்தளித்து உள்ளனர் மக்கள்.. ஐரோப்பியாவின் பெல்ஜியத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்கள் நகரவில்லை.. பிரேசிலில் நடந்த போராட்ட முழக்கங்கள் விண்ணை முட்டி வருகிறது..

5 கண்டங்கள்
அமெரிக்காவில் தடியடி, கண்ணீர் புகை வீசப்பட்டது, மிளகு பொடி கூட அவர்கள் மீது தூவப்பட்டது.. அசராமல் கொட்டும் மழையிலும் போராட்டம் வெடித்து சிதறி வருகிறது... அமெரிக்காவில்தான் போராட்டம் ஆரம்பமானது என்றாலும், இன்று ஐரோப்பா, ஆசியா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா என 5 கண்டங்களிலும் மக்கள் திரண்டுள்ளது சரித்திர நிகழ்வாக பார்க்கப்படுகிறது.. உலக வரலாற்றை திருப்பி போட மக்கள் ஒன்று திரண்டதன் அடையாளமாகவும் இது உருவெடுத்துள்ளது.!
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications