லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இங்கிலாந்து போறீங்களா.. இதை கவனிச்சிக்கோங்க.. விண்ணை முட்டிய வீட்டு வாடகை.. இன்னும் அதிகரிக்குமாம்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வீட்டு வாடகை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வீட்டு வாடகை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வாடகைக்கு வீடு தேடுபவர்கள் எண்ணிக்கை மற்றும் அதற்கு ஈடாக கிடைக்கும் வாடகை வீடுகளின் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளே இந்த தொடர் உயர்வுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

வளர்ந்த நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் பணி நிமித்தமாகவும் கல்வி உள்ளிட்ட காரணங்களுக்காகவும் வெளிநாட்டவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

குறிப்பாக இந்தியர்களும் இங்கிலாந்தில் கணிசமான எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இப்படி வெளிநாடுகளில் இருந்து லண்டன் உள்ளிட்ட வசிப்பவர்களுக்கும் ஷாக் கொடுக்கும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

என்னடா இது ஈரோட்டுக்கு வந்த சோதனை.. வாடகைக்கு வீடே கிடைக்கலியாம்.. திடீர் டிமாண்ட்.. ஏன்னு பாருங்கஎன்னடா இது ஈரோட்டுக்கு வந்த சோதனை.. வாடகைக்கு வீடே கிடைக்கலியாம்.. திடீர் டிமாண்ட்.. ஏன்னு பாருங்க

வீட்டு வாடகை உயர்வு

வீட்டு வாடகை உயர்வு

லண்டனில் இதுவரை இலலாத அளவுக்கு வீட்டு வாடகையை வீட்டின் உரிமையாளர்கள் உயர்த்தியிருக்கிறார்களாம். நம்ம ஊரில் நகர்ப்புறங்களில் இந்த பிரச்சினை என்றால் கடல் கடந்து போனால் கூட வாடகையை உயர்த்தி ஹவுஸ் ஓனர்கள் வஞ்சிக்கிறார்களே.. என்று வாடகைக்கு செல்பவர்கள் புலம்பாத குறைதான். இங்கிலாந்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி லண்டனில் தற்போது இந்திய மதிப்பில் ரூ 3 லட்சம் வரை வாடகையை உயர்த்தியிருக்கிறார்களாம்.

காஸ்ட்லியான லண்டன் நகரம்

காஸ்ட்லியான லண்டன் நகரம்

இதனால், ஏற்கனவே மிகவும் காஸ்ட்லியான நகரமாக அறியப்படும் லண்டனில் செலவும் இன்னும் அதிகரிக்கவே செய்யும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தொகை இன்னும் கூட உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. மின்சார கட்டணம் உயர்வு உள்ளிட்டவற்றால் ஏற்கனவே வாழ்க்கை செலவை சமாளிக்க தடுமாறும் பலருக்கும் மேலும் அதிச்சி கொடுப்பதாக வாடகை கட்டணங்கள் உயர்ந்துள்ளன. கடந்த கடைசி காலாண்டில் லண்டனில் சராசரியாக வீட்டு வாடகை ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்தது.

ரூ.3 லட்சத்தை தாண்டியது

ரூ.3 லட்சத்தை தாண்டியது

இதுவே லண்டனின் உள்பகுதிகளில் ரூ. 3 லட்சத்தை தாண்டியது. இதனால்,லண்டனில் வீடுகளுக்கு ஏகத்திற்கும் கிராக்கியும் ஏற்பட்டுள்ளதாம். வாடகைக்கு வீடு தேடுபவர்கள் எண்ணிக்கை மற்றும் அதற்கு ஈடாக கிடைக்கும் வாடகை வீடுகளின் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளே இந்த தொடர் உயர்வுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. குடியிருக்க வீடு தேடி அலைபவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து இருந்தாலும் கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இரு மடங்காக உயர்ந்து உள்ளது.

பொருளாதார நெருக்கடி

பொருளாதார நெருக்கடி

கடந்த ஆண்டு லண்டனுக்கு வெளியே புதிதாக பட்டியலிடப்பட்ட சொத்துக்களின் சராசரி வாடகை 9.7% அதிகரித்து இருந்தது. 2021 ஆம் ஆண்டு அதிகப்படியாக 9.9 சதவீதம் அளவுக்கு சராசரி வாடகை தொகை உயர்ந்த பிறகு கடந்த ஆண்டு சற்று குறைந்து இருந்தது. இங்க்கிலாந்து முழுவதும் வாடகை கட்டணம் உயரும் என்றும் கூறப்படுகிறது. இங்கிலாந்து ஒருபக்கம் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பணவீக்கம் அதிகரிப்பால் மக்கள் செலவுகள் அதிகரித்துள்ளன. இத்தகைய சூழலில் லண்டனில் கிடு கிடுவென உயர்ந்து இருக்கும் வீட்டு வாடகை கட்டணங்கள் அங்கு வீடு தேடி அலைவோர் கையை பிசையும் நிலைக்குத்தான் தள்ளி விட்டு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

English summary
House rents in England's capital London have risen to an all-time high. The main reason for this continuous increase is the disparity between the number of people looking for rental housing and the number of rental housing available in return.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X