வானத்தில் தோன்றிய நெருப்பு பந்து! இருளில் இருந்த மொத்த யுகேவும் வெளிச்சமாக..குலை நடுங்கும் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: நேற்று இங்கிலாந்தில் நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆக்ஸ்போர்ட் பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

நேற்று Yarnton, எனப்படும் ஆக்ஸ்போர்ட் நகரின் பகுதியில் திடீரென பெரிய குண்டு வெடித்தது போல வெளிச்சம் ஏற்பட்டது. இருளான வானில் திடீரென சிவப்பு நிறம் தோன்றியது. அதன்பின் மிகப்பெரிய அளவில் வெள்ளை நிறத்தில் வானம் வெளிச்சமாக மாறி உள்ளது.

Huge blast send shock waves in UK Oxford: What was the reason behind the bright light?

ஒரு இடத்தில் வெடிப்பு ஏற்பட்டால்.. சுற்றி எப்படி வெளிச்சம் ஏற்படுமோ அப்படித்தான் நேற்று இந்த பகுதியில் வெளிச்சம் ஏற்பட்டு உள்ளது. இதை பார்த்ததும் சில ஆண்டுகளுக்கு முன் பெய் ரூட்டில் எப்படி தொழிற்சாலை ஒன்று வெடித்தது அப்படித்தான் இப்போது ஆக்ஸ்போர்டில் தொழிற்சாலை வெடித்து உள்ளதோ என்ற சந்தேகம் எழுந்தது.

பலருக்கும் இங்கே குண்டு வெடிப்பு நிகழ்ந்துவிட்டது என்ற அச்சமும் எழுந்தது. இன்னும் சிலர் இங்கே தீவிரவாத தாக்குதல், ராக்கெட் தாக்குதல் ஏதாவது ஏற்பட்டு உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வெடிப்பிற்கு பின், வெளிச்சத்திற்கு பின் என்ன காரணம் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

என்ன காரணம்?: இங்கிலாந்தின் உணவு கழிவு மறுசுழற்சி ஆலையில் மின்னல் தாக்கியதுதான் இந்த வெடிப்பிற்கு காரணம் என்கிறார்கள். Severn Trent Green Power என்ற ஆலையில் இந்த வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. அங்கே வெளிச்சம் ஏற்பட காரணம்.. இதில் மின்னல் தாக்கி உள்ளது. உடனே அந்த ஆலை வெடித்துள்ளது.

அங்கே இருக்கும் பயோ கேஸ் டேங்கில் நேரடியாக மின்னல் தாக்கி உள்ளது. அந்த மின்னல் தாக்கியதும் டேங்கில் தீ பிடித்து வெடித்துள்ளது. இந்த வெடிப்பு காரணமாக அருகில் இருந்த டேங்கும் வெடித்து உள்ளது. இதனால் அது தொடர் வெடிப்பு போல மாறி அடுத்தடுத்த இடங்களில் வெடித்து பெரிய வெளிச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுதான் அந்த பயங்கர வெடிப்பிற்கும், வெளிச்சத்திற்கும் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இரவு நேரம் என்பதால் இந்த சம்பவம் காரணமாக யாரும் மரணிக்கவில்லை, யாரும் காயம் அடையவில்லை.

பெய்ரூட் சம்பவம்: கடந்த 2020ல் தான் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு காரணமாக அங்கு மோசமான பேரழிவு ஏற்பட்டது. 137 பேர் இந்த பயங்கர வெடிப்பில் பலியாகினர். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருக்கும் கிடங்கில் 2750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்தது.

மொத்தமாக பெய்ரூட் பகுதியில் 200 கட்டிடங்கள் இதனால் தரைமட்டமானது. மொத்தமாக பெய்ரூட் நகரத்தை இந்த வெடிப்பு சிதைத்து சின்னாபின்னமாக்கியது. அதிலும் கடல் எல்லையில் இருந்த பெய்ரூட் துறைமுகம் மொத்தமாக நொறுங்கியாது. சன்னி - ஷியா மோதல் காரணமாக பெரும் போருக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து நின்ற பெய்ரூட் தற்போது மீண்டும் போர் பூமியாக மாறும் நிலைக்கு சென்றது.இந்த நிலையில்தான் அதே போன்ற சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+