வாழ வாய்ப்பில்லை என்று சொன்ன டாக்டர்கள்.. 61 நாட்கள் கொரோனா உடன் போராடி வீடு திரும்பும் கணவன்

கொரோனா தாக்கினாலே பயத்தில் பாதி பேர் செத்துப்போய் விடுகின்றனர். வருவது வரட்டும் என்று எதிர்த்து போராடுபவர்கள்தான் இந்த உலகத்தில் வாழ தகுதிபடைத்தவர்கள் ஆகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

லண்டன்: உங்கள் கணவர் வாழ்வதற்கு ஜீரோ சதவிகிதம்தான் இருக்கிறது என்று கொரோனா நோயாளியின் மனைவியிடம் டாக்டர்கள் சொன்னால் அதை கேட்கும் அந்த பெண்ணின் மனது என்ன பாடுபட்டிருக்கும். சிலருக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்திருக்கும் நம்ம கதாநாயகி சுயூ மார்ட்டின்,49 அப்படிப்பட்டவர் இல்லை. அவருக்கு நம்பிக்கை இருந்தது தனது கணவர் நோயிடம் இருந்து மீண்டு வருவார் தன்னுடனும் தனது இரண்டு குழந்தைகளுடனும் சந்தோஷமாக வாழ்வார் என்றும் நம்பினார். அந்த நம்பிக்கை பொய்த்துப்போகவில்லை. இதே 61 நாட்கள் கொரோனா வைரஸ் உடன் எதிர்த்து போராடி மரணத்தின் வாசல் வரை சென்று மீண்டு வரப்போகிறார் மால்,58.

உலகம் முழுவதும் கொரோனாவின் கோரப்பிடியில் மெல்ல மெல்ல சிக்கிக்கொண்டிருந்த மார்ச் மாதத்தில்தான் மால் தனது சுவாசத்தில் ஒரு மாற்றத்தை உணர்ந்தார். பரிசோதனையில் கொரோனா அரக்கன் தனக்குள்ளும் புகுந்து விட்டான் என்பதை அறிந்து கொள்ள முடிந்துள்ளது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மால், தனது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் குட்பை சொல்லி விட்டுத்தான் போயிருக்கிறார்.

சுயூவின் மனது நம்பிக்கையுடன் இருந்தது. இருந்தாலும் கணவனைப் பார்க்க தனது மகன்கன் ஹனா, வில்லியம்ஸ் உடன் ஏப்ரல் மாதம் சென்ற போது அங்கே இருந்த மருத்துவர்கள் சொன்ன வார்த்தைகள் அவரது நம்பிக்கையை சற்றே அசைத்துப்பார்க்கும் விதமாகவே இருந்தது.

குட்பை சொன்ன மனைவி

குட்பை சொன்ன மனைவி

அந்த மருத்துவமனையில் கணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட இடத்தில் அவரது உடம்பு முழுவதும் கவர் செய்து வைத்திருந்தார்கள். அதை காண சகிக்காமல் கண்ணீர் மல்க வேறு வழியின்றி அரை மனதோடு குட்பை சொல்லி விட்டு வந்தார். ஆனாலும் நம்பிக்கையோடு காத்திருந்தார்.

 சிகிச்சைக்கு ஒத்துழைப்பு

சிகிச்சைக்கு ஒத்துழைப்பு

வென்டிலேட்டர் சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்த மால் உடம்பில் சின்ன மாற்றம் ஏற்பட்டது. அவரது உடல் கொஞ்சம் கொஞ்சமாக மருந்துக்கு ஒத்துழைப்பு கொடுத்தது. அந்த முன்னேற்றத்தை பார்த்த மருத்துவர்கள் மனதிலும் நம்பிக்கை துளிர் விட்டது. மாலின் மனைவிக்கு தகவல் கொடுத்தனர். கணவரின் உடல் படிப்படியாக தேறி வருவதாக தகவல் கேள்விப்பட்டு அந்த சந்தோசத்தை மகன்களிடம் பகிர்ந்து கொண்டார்.

மரணத்தில் இருந்து மீண்ட மால்

மரணத்தில் இருந்து மீண்ட மால்

61 நாட்கள் வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த மால் தனது நம்பிக்கையால் கொரோனாவை எதிர்த்து போராடி தற்போது மீண்டிருக்கிறார். அவர் வாழ்வதற்கு ஜீரோ சதவிகிதம்தான் இருக்கிறது என்று டாக்டர்களே கை விரித்து விட்ட நிலையிலும் நம்பிக்கையை கைவிடாமல் போராடி மரணத்தின் வாசல்வரைக்கும் சென்று மீண்டிருக்கிறார். இதே மீண்டும் மனைவி குழந்தைகளுடன் வாழ தனது வீட்டிற்கு திரும்பப் போகிறார்.

குணமடைந்தது எப்படி

குணமடைந்தது எப்படி

சர்க்கரை வியாதி இருப்பவர்களை கொரோனா தாக்கினால் அவர் உயிர்பிழைக்க வாய்ப்பே இல்லை என்று சொல்வார்கள். ஆனால் மால் ஒரு நீரிழிவு நோயாளி என்றாலும் அவரது உடல் நோயை எதிர்த்து போராடக்கூடிய தெம்போடு இருந்தது. இதோ மரணத்தின் வாசலை தொட்டு விட்டு எமனுக்கு ஹாய் சொல்லி விட்டு வரப்போகும் கணவனை வரவேற்க தயாராக இருக்கிறார் இந்த தன்னம்பிக்கை மனைவி.

குணமடைந்தது மிராக்கிள்

குணமடைந்தது மிராக்கிள்

என் கணவர் குணமடைந்தது ஒரு அற்புதம் என்று கண்ணீர் மல்க கூறி வருகிறார் சுயூ மார்ட்டின். நம் ஊரிலும் கொரோனா என்னும் எமனுடன் எதிர்த்து போராடி குணமடைந்து வீடு திரும்பியவர்களின் கதைகளை கேட்டு தன்னம்பிக்கையை அதிகரித்துக்கொண்டால் போதும் கொரோனா அரக்கன் நம் வீட்டு வாசலைக்கூட எட்டிப்பார்க்க மாட்டான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+