இந்திய குளோபல் ஃபாரம் 2025: IGF லண்டன் 2025 ஆர்ச்சர் அமிஷ் விருதை பெற்ற எழுத்தாளர் ஷாலினி மல்லிக்
லண்டன்: எழுத்தாளருக்கான ஐ.ஜி.எஃப் ஆர்ச்சர் அமிஷ் முதல் விருது டாக்டர் ஷாலினி மல்லிக்கிற்கு வழங்கப்பட்டது. லண்டனில் உள்ள குயின் எலிசபெத் II மையத்தில் தி ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோதா பார்டனர்ஷிப் உடன் நடைபெற்ற ஐ.ஜி.எஃப் லண்டன் முதல் நாள் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.
டாக்டர் ஷாலினி மல்லிக்கின் "தி வே ஹோம்" என்ற புத்தகம் துக்கம், அடையாளம் மற்றும் ஹீலிங் ஆகியவற்றை பற்றிய கதையாக இருந்தது. தனிப்பட்ட சவால்களை எதிர்கொள்ளும் மூன்று மில்லினியல்களின் கதையை இந்நாவல் கூறுகிறது. அவர்கள் கோவாவில் அடைக்கலம் தேடி நட்பு மற்றும் செல்ஃப் டிஸ்கவரி மூலம் வலிமை பெறுகிறார்கள் என்பதே இந்த கதை

விருதின் முக்கியத்துவம்
இங்கிலாந்து கலாச்சார, ஊடக மற்றும் விளையாட்டுத் துறைக்கான செயலாளர் லிசா நாண்டி இந்த விருதை வழங்கினார். அப்போது பேசிய அவர், "மக்களுடனான தொடர்புகள் மிகவும் முக்கியம். உலக அரங்கில் நம்மைப் பிரிப்பதற்கான வழிகளே உள்ளன. உலகம் பிளவுபட்டு துருவங்களாக மாறி வருகிறது. இந்த தடைகளைத் தாண்டி அரசுகள் தலைமை தாங்க வேண்டிய தேவை இருக்கிறது. இதைத்தான் பிரதமர் மோடியும், பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மரும் செய்ய உறுதியளித்துள்ளனர்" என்று கூறினார்.
டாக்டர் மல்லிக்கிற்கு $25,000 பரிசு வழங்கப்பட்டது. இது உலகளவில் வழங்கப்படும் பெரிய இலக்கியப் பரிசுகளில் ஒன்றாகும்.
ஆர்ச்சர் அமிஷ் விருது
எழுத்தாளருக்கான ஐ.ஜி.எஃப் ஆர்ச்சர் அமிஷ் விருது, நவீன இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் ஆற்றலைப் பிரதிபலிக்கும் இந்தியப் புனைகதைகளைச் சிறப்பிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. ஜெஃப்ரி ஆர்ச்சர் மற்றும் அமிஷ் திரிபாதி ஆகியோருடன் இணைந்து இந்த விருது உருவாக்கப்பட்டது. கலாச்சாரம் என்பது சக்தி மட்டுமல்ல, அது அதையும் தாண்டி சக்தி வாய்ந்த ஒன்று என்பதை ஐ.ஜி.எஃப் நம்புகிறது. இது சர்வதேச உறவுகளை ஆழப்படுத்தவும், இங்கிலாந்து- இந்திய ஒத்துழைப்பு அடுத்த கட்டத்தை நோக்கி நகரவும் உதவியாக இருக்கும்.
இது தொடர்பாக ஜெஃப்ரி ஆர்ச்சர் கூறுகையில், "எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று, கதைசொல்லிகளுக்கு விருதுகள் கிடைப்பதில்லை என்பது தான். ஆனால் நோபல் பரிசு வென்றவர்களின் எண்ணிக்கையை எண்ணிப் பாருங்கள். கதைசொல்லிகளை மக்கள் படிக்கவே செய்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது" என்றார்.
அமிஷ் திரிபாதி
அமிஷ் திரிபாதி மேலும் கூறுகையில், "ஒரு கதைசொல்லியின் பிரதான வேலை மக்களின் கவனத்தை ஈர்த்து, அதை அப்படியே தக்கவைப்பது தான். கதைசொல்லியாக இருப்பது தான் மிக பவர்புல்லான வேலை என ஸ்டீவ் ஜாப்ஸ் கூட கூறியிருக்கிறார். எழுத்தாளர்கள் மட்டுமல்ல, வாசகர்களும் கூட சிறந்த கதைசொல்லிகள் தான்" என்றார்.
நாடுகளை வடிவமைக்கும் சக்தி
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐ.ஜி.எஃப் நிறுவனர் மற்றும் தலைவர் மனோஜ் லத்வா கூறுகையில், "ஐ.ஜி.எஃப்-ல் புதுமை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு மூலம் உலகை இணைக்க முடியும் என நாங்கள் கருதுகிறோம். ஒவ்வொரு சிறந்த யோசனைக்கும் ஒரு கதை இருக்கும். சொல்லப்படாத இந்தியக் கதைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்கான வழி தான் ஐ.ஜி.எஃப் ஆர்ச்சர் அமிஷ் விருது. இதன் மூலம் இலக்கியமும் நாடுகளை வடிவமைக்கும் ஒரு சக்தி என்பதை உலகுக்கு நினைவூட்டுகிறோம்" என்றார்.
தி ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோதாவின் நிறுவனர் அபிநந்தன் லோதா இது குறித்துக் கூறுகையில், "இந்தியாவின் முன்னணி லேண்ட் டெவலப்பரான நாங்கள், ஒரு நிலத்தை அதன் பொருளாதார மதிப்புக்காக மட்டுமின்றி.. அதன் கலாச்சாரத்திற்காகவும் தேர்வு செய்கிறோம். இந்தியாவின் உண்மையான செல்வம் என்பது அதன் கலாச்சாரத்தில் தான் இருக்கிறது. கதைகளின் பாரம்பரியத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்றார்.
2025 ஆம் ஆண்டின் இறுதிப் போட்டியாளர்கள்:
- நித்யா நீலகண்டன் - The Quest for the Nine Magical Poisons
- யோகேஷ் பாண்டே, The Kill Switch
- டாக்டர். ஷாலினி மல்லிக், The Way Home (Winner)
இந்த அறிவிப்பு ஐ.ஜி.எஃப் நிகழ்ச்சியின் முதல் நாள் நிகழ்வின் சிறப்பம்சமாக இருந்தது. லண்டனில் 100+ பேச்சாளர்கள், 1000க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொழில்நுட்பம், வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் வணிகம் என பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன.
ஐஜிஎஃப் லண்டன்
பிரதமர் நரேந்திர மோடியின் 2015ஆம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தின் 10ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது. மேலும், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தமும் சமீபத்தில் தான் இறுதி செய்யப்பட்டது. இந்த வரலாற்று நிகழ்வைக் கொண்டாடும் முதல் சர்வதேச நிகழ்வாக இந்த ஐஜிஎஃப் லண்டன் அமைந்துள்ளது.
இந்தியா குளோபல் ஃபாரம் (India Global Forum) சமகால இந்தியாவின் கதையை உலகிற்கு எடுத்துரைக்கிறது. இந்தியா தனக்கென நிர்ணயித்துள்ள மாற்றங்கள் மற்றும் வளர்ச்சியின் வேகம், உலகிற்கே ஒரு வாய்ப்பாகும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் நிறுவனங்களுக்கும் நாடுகளுக்கும் இந்த மன்றம் ஒரு நுழைவாயிலாக விளங்குகிறது.












Click it and Unblock the Notifications