இது தேவை தான்.. பாகிஸ்தான் மூக்கை உடைத்த ரிஷி சுனக்.. இந்தியா பக்கம் தான் நியாயம் இருக்கு என கருத்து
லண்டன்: பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்புகள் மீது இந்தியா நடத்திய தாக்குதல் நியாயமானது. பயங்கரவாதிகளுக்கு எந்த காரணம் கொண்டும் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

நம் நாட்டின் சார்பில் நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை 25 நிமிடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் பறந்தன. அதில் இருந்து ஏவுகணைகள் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை நோக்கி வீசப்பட்டது.
மொத்தம் 25 நிமிடங்கள் வரை இந்த தாக்குதல் நடந்தது. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நம் நாடு துல்லியமாக வான்வழி தாக்குதலை நடத்தியது. 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை. பயங்கரவாதிகளின் முகாம்கள் மட்டும் சிதைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் பாகிஸ்தான் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியதை பிரிட்டனின் முன்னாள் பிரதமரும், இந்தியாவின் மருமகனுமான ரிஷி சுனக் வரவேற்றுள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛எந்த ஒரு நாடும் இன்னொரு நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலத்தில் இருந்து தனக்கு எதிராக நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதலை ஏற்று கொள்ளாது. பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்புகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி இருப்பது நியாயமானது. பயங்கரவாதிகளுக்கு எந்த காரணம் கொண்டும் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கும் ரிஷி சுனக் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதுபற்றி அவர் "பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் புதுமணத் தம்பதிகள், குழந்தைகள் மற்றும் மகிழ்ச்சியை தேடிய குடும்பங்களின் வாழ்க்கையை திருடிவிட்டுவிட்டது. அவர்களுக்காக எங்கள் இதயங்கள் உடைகின்றன. பிரிட்டன் ஒவ்வொருவரின் துக்கத்திலும் பங்கெடுத்து கொள்கிறது. இந்தியாவுன் ஒற்றுமையாக நிற்கிறது பயங்கரவாதம் ஒருபோதும் வெல்லாது" என்று குறிப்பிட்டு இருந்தார்.
ரிஷி சுனக் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ஆவார். இவர் 2022 முதல் 2024 வரை பிரிட்டன் பிரதமராக இருந்தார். இவரது மனைவி பெயர் அக்சதா மூர்த்தி. இவர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் ஆவார். ரிஷி சுனக், நம் நாட்டுடன் நல்ல உறவில் உள்ளார். அதேபோல் இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவராக உள்ளார். பகவத்கீதை படிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications