"ஐயோ முடியல.." லண்டனில் 10 வருட வாழ்க்கை.. வெறுத்து போய் வெளியேறிய இந்திய பெண்!
லண்டன்: கடந்த 10 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்த இந்தியப் பெண் ஒருவர் இப்போது வேறு வழியில்லாமல் அங்கிருந்து வெளியேறியுள்ளார். வரி மற்றும் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகளே இதற்குக் காரணம் என அவர் குறிப்பிடுகிறார். அதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியர்கள் பலரும் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காக வெளிநாட்டிற்குச் செல்கிறார்கள். வெளிநாட்டிற்குப் போனாலே வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் எனப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அதற்கு நேர்மாறாகவே இருக்கிறது. வெளிநாடுகளில் வரி, அதிகரிக்கும் செலவுகளால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தாயகத்திற்கும் மீண்டும் திரும்புகிறார்கள்.

லண்டன் பெண்
அப்படியொரு சம்பவம் தான் இப்போது மீண்டும் நடந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்தவர் பல்லவி சிப்பர்.. தொழில்முனைவோரான இவர், இப்போது குடும்பத்துடன் பிரிட்டனில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார். அதிக வரிகள் மற்றும் அதிகரித்து வரும் செலவுகள் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். தனது வருவாயில் கிட்டத்தட்ட 50% நேரடி மற்றும் மறைமுக வரிகளாகப் போவதால், பிரிட்டனில் இருந்து வெளியேறுவதாக அவர் கூறுகிறார்.
வரி அதிகம்
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் லண்டனில் வாழ்க்கை நடத்துவதே முடியாத ஒன்றாகிவிட்டதாகவும் அதிக வரி காரணமாகத் தினசரி செலவுகளே பெரிய சுமையாக மாறிவிட்டதாகவும் சிப்பர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஒரு காலத்தில் வளர்ச்சியின் நகரமாக இருந்த லண்டன், இப்போது வெறும் உயிர்வாழ்வதற்கான இடமாக மாறிவிட்டதாக அவர் தெரிவிக்கிறார். வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதாகவும், தனது குழந்தைகளின் எதிர்கால வாய்ப்புகளும் சுருங்கி வருவதாகவும் அவர் கூறுகிறார்.
இது தொடர்பாக அவர் மேலும், "சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நான் லண்டனில் இருந்து வெளியேறுகிறேன். முதலில், ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன் - லண்டனை நான் மிகவும் நேசிக்கிறேன். இந்த நகரத்தைப் போல ஒரு இடம் உலகில் வேறு எந்தவொரு இடமும் இல்லை. நான் ஒரு லண்டன் பெண், என் இதயத்தின் ஒரு பகுதி எப்போதும் இங்கே இருக்கும்.
யதார்த்தம் இதுதான்
ஆனால் அதே சமயம், யதார்த்தத்தை நாம் புறக்கணிக்க முடியாது.. வாழ்க்கைச் செலவு நெருக்கடி, சவால்கள் மற்றும் அதிகரித்து வரும் செலவுகள் என இங்குப் பல சிக்கல்கள் உள்ளன. பிரிட்டனில் இருந்து வெளியேற நான் முடிவெடுத்தது எளிதானது அல்ல.. இது கடினமான முடிவு தான். ஆனாலும், எங்களுக்கு வேறு வழியில்லை. அதிக வரி மற்றும் செலவுகளால் என்னைப் போல என் நண்பர்கள் பலரும் கஷ்டப்படுகிறார்கள்.
இப்போது நாங்கள் புதிய இடத்திற்குச் செல்கிறோம். ஆனால் எங்கள் 16 வயது மகனுக்குத் தான் இது ரொம்ப கடினமாக இருக்கும். ஏனெனில் அவர் இப்போது ஒரு புதிய பள்ளியில் சேர வேண்டும்.. ஆனாலும், எங்களுக்கு வேறு வழியில்லை" என்று பதிவிட்டு இருக்கிறார். அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டானது. அவரது இந்த முடிவைச் சிலர் ஆதரித்தபோது, மற்றவர்கள் வரிகள் மற்றும் வாழ்க்கைச் செலவு குறித்த அவரது நிலைப்பாட்டை விமர்சித்தனர்.
நெட்டிசன்கள் சொல்வது என்ன
நெட்டிசன் ஒருவர், "உங்களுக்கு வாழ்த்துக்கள். நாங்கள் இங்கிலாந்தில் வசிக்கவில்லை.. ஆனால், உலகெங்கும் விலைவாசிகள் உயர்ந்துள்ளன. நீங்கள் லண்டனில் இருந்து வெளியேறிய பிறகு அந்த உண்மையை உணர்வீர்கள். உங்கள் பயணத்தைத் தொடர்ந்து பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
அதேநேரம் மற்றொரு தரப்பினர் அவருக்கு ஆதரவான கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் "இதே காரணங்களுக்காக லண்டனில் 10 ஆண்டுகள் இருந்த பிறகு நான் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தேன்... . இப்போது 2 ஆண்டுகளாக மும்பையில் இருக்கிறேன்... இதுவே சிறந்த முடிவு என்று சொல்ல வேண்டும்! மும்பையிலும் விலைவாசி உயர்வு இருக்கிறது என்றாலும் இங்கு ஓரளவுக்கு நாம் சமாளிக்கலாம்.. எல்லா இடங்களிலும் வாய்ப்புகள் உள்ளன" என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications