“ரூட் கிளியர்”.. பிரிட்டனை ஆளப்போகும் இந்திய வம்சாவளி! பிரதமராகிறார் ரிஷி சுனக்
லண்டன்: பிரிட்டன் பிரதமர் தேர்தலில் போட்டியிட்ட நாடாளுமன்ற முன்னவர் பென்னி மார்டாண்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் அந்நாட்டு பிரதமராகிறார்.
பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலை மாதம் விலகியதை தொடர்ந்து பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார் லிஸ் டிரஸ்.
ஆனால், நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையை கையாள முடியவில்லை என்று கூறி பிரதமர் பதவியை கடந்த சில நாட்களுக்கு முன் லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார்.

ரிஷி சுனக்
இதனை தொடர்ந்து பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தன்னை முறைப்படி பிரிட்டன் பிரதமர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டார். "பிரிட்டன் சிறந்த நாடு. நாம் தீவிரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறோம். பிரிட்டனின் பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும். எனவே கன்சர்வேட்டிவ் கட்சியுடைய தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் நிற்கிறேன்." என்று ரிஷி சுனக் அறிவித்தார்.

போரிஸ் ஜான்சன்
இதற்கிடையே பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் களமிறங்குவதாக நேற்று செய்திகள் வெளியாகின. ஆனால், அவருக்கு ரிஷி சுனக்கை விட குறைவாக 59 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருந்தது. மற்றொரு போட்டியாளரான பென்னி மார்டாண்ட் 29 எம்பிக்கள் ஆதரவே இருந்தது.

100 எம்பிக்கள்
ரிஷி சுனக் அங்கம் வகிக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியில் 357 எம்பிக்கள் உள்ளனர். போரிஸ் ஜான்சன் மற்றும் பென்னி மோர்டாண்ட் 100 எம்பிக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதை காட்டாவிட்டால் ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்ற நிலை இருந்தது. இருவரும் 100 எம்பிக்கள் ஆதரவை பெற்றால் 1.7 உறுப்பினர்களிடம் ஆன்லைன் வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

போரிஸ் இல்லை
இந்த நிலையில் போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவிக்காக போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக ரிஷி சுனக் தெரிவித்து உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் சந்தித்து பேசிய குறிப்பிடத்தக்கது. போரிஸ் ஜான்சன் விலகலை தொடர்ந்து ரிஷி சுனக் பென்னி மார்டாண்ட் இடையே போட்டி ஏற்படும் நிலை இருந்தது.

விலகிய பென்னி
ஆனால் நாடாளுமன்ற முன்னவர் பொன்னி மார்டான்டுக்கு குறைவான எம்பிக்கள் ஆதரவே இருந்தது. 100 எம்பிக்கள் ஆதரவை அவர் பெறுவது கடினமானதாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் பிரதமர் பதபிக்காக போட்டியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் பென்னி மார்டாண்ட்.

பிரதமராகும் ரிஷி
மேலும் ரிஷி சுனக்கிற்கு ஆதரவளிப்பதாகவும் பொன்னி மார்டாண்ட் அறிவித்து இருக்கிறார். இதன் மூலம் ரிஷி சுனக் பிரிட்டன் நாட்டின் பிரதமராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது. பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் ரிஷி சுனக்கை பிரிட்டன் பிரதமராக நியமித்த பின் அவர் முறைப்படி பதவியேற்க உள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications