இந்தியா டூ பிரிட்டன்.. விர்ருன்னு பறந்து போய்.. கொரோனா தடுப்பூசி போட்டுகிட்டு வரலாம்.. பரபர பேக்கேஜ்
லண்டன்: பிரிட்டனின் கொரோனா தடுப்பூசிகளை பெற விரும்பும் இந்தியர்களுக்காக ஒரு ட்ராவல் பேக்கேஜை, டிராவல் நிறுவனங்கள் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகின்றன.
Recommended Video

உலகமெங்கும் ஆட்கொண்டிருக்கும் கொரோனவைரஸுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க பல நாடுகள் முயன்று வருகின்றன.
ஏற்கனவே, 6 நாடுகள் தம் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி இலவசம் என்று அறிவித்துள்ளன. இந்தியாவில் இன்னும் தடுப்பூசி விலை நிர்ணயிக்கப்படவில்லை.

டிராவல் பேக்கேஜ்
இந்த நிலையில்தான், இந்தியாவில் உள்ள சில நிறுவனங்கள் தடுப்பூசிக்கான டிராவல் பேக்கேஜ்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. குறிப்பாக சில நிறுவனங்கள் பிரிட்டன் செல்ல ஆர்வம் உள்ள இந்தியர்களுக்கு மூன்று இரவுகள் கொண்ட சிறப்பு பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தலாம் என்று ஆலோசித்து வருகின்றன.

பலரும் ஆர்வம்
தற்போது லண்டன் செல்ல உகந்த காலம் இல்லை என்றபோதும் இது குறித்து அதிகம் பேர் தங்களது நிறுவனத்தை தொடர்பு கொண்டு வருவதாக டிராவல் ஏஜென்சிகள் பலவும் கூறுகின்றன.

தடுப்பூசி போடலாம்
லண்டனில் உள்ள சில மருத்துவமனைகள் உடன் ஒப்பந்தம் செய்துகொள்ள பேசி வருவதாகவும் டிராவல் ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன. அங்கேயே தங்கியிருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு நமது நாட்டுக்கு இவர்கள் திரும்பி விடலாம்.

பிரிட்டனில் தடுப்பூசி
ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பரவலான பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது பிரிட்டன் அரசு. அடுத்த வாரம் முதல் இந்த தடுப்பூசி மக்களுக்கு போடப்படும். இந்த நிலையில்தான், பிரிட்டன் டிராவலுக்கு மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications