தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகள் கட்! பிரிட்டன் புதிய அரசு அதிரடி.. தொழிலாளர்களுக்கு ஆதரவாக சட்டம்
லண்டன்: பிரிட்டனில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்நாட்டின் கொள்கைகளில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி தனியாருக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதிலாக அரசுத்துறை நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட இருக்கிறது.
சமீபத்தில் பிரிட்டனில் நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. இப்படி இருக்கையில், தற்போது அந்நாட்டில் இனி அமல்படுத்தப்பட இருக்கும் புதிய கொள்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அந்நாட்டின் மன்னர் இது குறித்த அறிவிப்பை வாசித்தார். இந்த அறிவிப்புகளை அமைச்சர்கள் எழுதி கொடுத்திருக்கின்றனர்.

அதன்படி, உள்நாட்டின் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்காக புதிய வீடுகள் கட்டப்படும். அதேநேரம் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். குறிப்பாக பூஜ்ஜிய நேர ஒப்பந்தங்களை திணிக்கும் நிறுவனங்கள் தடை செய்யப்படும். இந்த ஒப்பந்தமுறை பிரிட்டனில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. தொழிலாளிக்கு ஆண்டில் குறைந்தபட்சமாக குறிப்பிட்ட மணி நேரம் வேலை வழங்கப்பட வேண்டும்.
ஆனால், பூஜ்ஜிய நேர ஒப்பந்தம் என்பது, தொழிலாளிக்கு வேலையை வழங்குவதிலிருந்து முதலாளியை விடுவிக்கிறது. இதனால் வேலையின்மை அதிகரிக்கும். இதை பிரிட்டனின் புதிய அரசு தடை செய்கிறது. அதே நேரம் சட்டவிரோதமாக தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குதல், மகப்பேறு விடுமுறையை அனைத்து நிறுவனங்களுக்கும் உறுதி செய்தல், நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குதல் என தொழிலாளர்கள் சட்டங்கள் வலுப்படுத்தப்படும்.
குழந்தை பேறுக்கு பின்னர் பெண்கள் வேலைக்கு வரும்போது அவர்களை சில நாட்களிலேயே பணியிலிருந்து நீக்கப்படுவது தடை செய்யப்படும். அகதிகளை பொறுத்தவரை, பிரிட்டனுக்குள் வருபவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் முந்தைய அரசாங்கத்தின் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. அதேநேரம், அகதிகளை பிரிட்டனுக்கு சட்டவிரோதமாக படகுகள் மூலம் கொண்டுவருபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வழிவகை செய்யும் புதிய சட்டத்தை நிறைவேற்ற அரசு விரும்புகிறது.
பிரிட்டனில் வீடுகளுக்கு அதிக அளவில் வாடகைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு உரிய சட்டங்கள் இயற்றப்படும். காலநிலை மாற்றத்தை பொறுத்த வரை, அரசு கார்பன் உமிழ்வு இல்லாத எனர்ஜியை பயன்படுத்த தனது முதலீட்டை அதிகரிக்கும்.
மிக முக்கியமாக பிரிட்டனில் ரயில்கள் தனியாருக்கு விடப்பட்டிருக்கின்றன. இதற்கான ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்த பின்னர், ரயில்கள் படிப்படியாக அரசாங்கம் வசம் கொண்டுவரப்படும்.
அதேபோல தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த வரிச்சலுகைகள் இனி நிறுத்தப்படும். இதன் மூலம் சேமிக்கப்படும் பணம், அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய அறிவிப்பால் பிரிட்டன் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications