பேரரழகி இளவரசி டயானா நினைவு நாள்.. 25 ஆண்டுகளாகியும் விலகாத மர்மங்கள்.. விடை கிடைக்காத கேள்விகள்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: வேல்ஸ் இளவரசி டயானா இறந்து இன்றுடன் 25 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையிலும் அவரது மரணத்தில் மர்மங்கள் விலகாமல் இருக்கிறது.

பிரிட்டன பரம்பரையின் ஸ்பென்சர் குடும்பத்தைச் சேரந்தவர் டயானா. கடந்த 1981 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸை திருமணம் செய்து கொண்டர். இந்த நிலையில் கருதது வேறு காரணமாக கடநநத 1996 ம் ண்டு சார்லஸுடன் விவாகரத்து ஏற்பட்டது.

விவாகரத்துக்கு பிறகு டயானாவுக்கு தொழிலதிபரான முகமது அல ஃபயீத்தின் மகன் டோடி அல் ஃபயத்துக்கும் தொடர்பு இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் டயானா புதிய நண்பருடன் விருந்துக்கு செல்வதாக தகவல்கள் வெளியானது.

பாரிஸ்

பாரிஸ்

இதையடுத்து கடந்த 1997ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொள்வதை அறிந்த புகைப்படக்காரர்கள் அந்த ஆண் நண்பரை புகைப்படம் எடுக்க ஆவலுடன் குவிந்தனர். அவர்கள் இருப்பதை கண்ட டயானா புகைப்படம் எடுப்பதிலிருந்து தப்பிக்க காரை வேகமக ஓட்டும்படி டிரைவருக்கு டயானா உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது.

சுரங்கபாதை

சுரங்கபாதை

அப்போது சுரங்கபாதை வழியாக சென்ற கார் பக்கவாட்டுச் சுவரில் மோதியதால் டயானாவின் ஆண் நண்பர் டோடி ஃபயீத்தும் டிரைவரும் இறந்துவிட்டனர். டயானாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் பிட்டி- சலபெட்ரியர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அஙகு அவருக்கு 2 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி தனது 36ஆவது வயதில் டயானா இறந்துவிட்டார்.

எக்ஸ்ரே

எக்ஸ்ரே

இந்த சிகிச்சையின் போது அவரது வயிற்றை எக்ஸ் ரே எடுத்து பார்த்ததில் 6 வார கரு இருந்ததை கண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கணவரை பிரிந்து இருக்கும் டயானா கருவுற்றிருந்ததை முன் கூட்டியே அறிந்த அரசர் பரம்பரைதான் இந்த விபத்தை சதிதிட்டம் தீட்டி ஏற்படுத்தியது என முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் குற்றம்சாட்டினார்.

விபத்துதான் கொலை அல்ல

விபத்துதான் கொலை அல்ல

ஆனால் இதை உண்மையான விபத்து என சிலர் கூறுகிறார்கள். அது போல் டயானாவின் கார் ஓட்டுநர் மது போதையில இருந்ததால் விபத்து நேரிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் மதுபோதையில் கார் டிரைவர் எப்படி இருந்தார் என்பது மர்மமாக இருக்கிறது. ஆனால் விபத்து நடந்த போது எடுக்கப்பட்ட புகைபபடங்களை பார்த்த போது டயானாவுக்கு சிறு காயம் கூட ஏற்படவில்லை என கண்டுபிடிக்கப்பட்டது. அப்படியிருந்தும் அவர் இறந்தது எப்படி, காயமே ஏற்படாத டயானாவுக்கு தலையில் காயம் என சொல்லப்பட்டது ஏன், அவ்வாறு சொல்லச் சொல்லியது யார்? இந்த விபத்து நடந்த 10 நிமிடங்களில் போலீஸார் வந்தது எப்படி? போலீஸார் வந்த 5 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்தது எப்படி போன்ற கேள்விகளுக்கு இன்று வரை மர்மம் நீடிக்கிறது.

25 ஆண்டுகளாகியும் நீடிக்காத மர்மம்

25 ஆண்டுகளாகியும் நீடிக்காத மர்மம்

டயானா இறந்து இன்றுடன் 25 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவரது மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அகலவில்லை. ராஜ பரம்பரையில் வாக்குப்பட்டாலும் எய்ட்ஸ் பாதித்தவர்களை ஒதுக்கி வைத்த காலத்தில் அவர்களை தொட்டு அன்பாக பழகும் குணம் கொண்ட டயானா மறைந்தது உலக மக்களுகு பேரதிர்ச்சியாக இருந்தது. அதிலும் ராஜபரம்பரையில் உரிமை இருந்த போதிலும் அதை விட்டு தர தயார் என கூறி எய்ட்ஸ் நோயாளிகளுக்காகவே அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வந்த பேரழகி.. மகாராணியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+