லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆபத்தாம்! தப்பித்தவறி கூட மழை நீரை இனி குடிச்சிடாதீங்க! எச்சரிக்கும் "ரிப்போர்ட்".. பின்னணி!

Google Oneindia Tamil News

லண்டன்: மழை நீரை குடிக்க கூடாது.. அது ரொம்ப ஆபத்தானது என்று சர்வதேச ஆய்வு கட்டுரை ஒன்று சொல்கிறது. பல்வேறு நாடுகளில் விவாதப்பொருளாகி இருக்கும் இந்த ஆய்வுக்கட்டுரை நமது சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. ஜநாவும் கூட உலகம் முழுக்க காலநிலை அதிகரிப்பது பற்றி தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம். இது மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி என்று ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கை கூட எச்சரித்து இருந்தது.

உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

பீமா கொரோகான் வழக்கில் வரவர ராவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.. 4 ஆண்டுகள் கழித்து விடுதலை பீமா கொரோகான் வழக்கில் வரவர ராவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.. 4 ஆண்டுகள் கழித்து விடுதலை

அறிக்கை

அறிக்கை

இப்படி சுற்றுசூழல் குறித்த அச்சம் எழுந்துள்ள நிலையில்தான் மழை நீரை குடிக்கவே கூடாது என்று சர்வதேச ஆய்வு கட்டுரை ஒன்று தெரிவித்துள்ளது. ஸ்வீடனில் இருக்கும் University of Stockholm பல்கலையில்தான் இந்த ஆய்வு கட்டுரையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பூமியில் எந்த இடத்தில் பெய்யும் மழையும் பாதுகாப்பானது கிடையாது. இதில் கெமிக்கல் கலந்து உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு அளவை தாண்டி அதிக அளவு கெமிக்கல் இதில் கலந்து உள்ளதாக கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது,

ஆய்வு கட்டுரை

ஆய்வு கட்டுரை

Per- and poly-fluoroalkyl வகை கெமிக்கல்கள் இந்த மழை நீரில் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இவை மனிதர்கள் மூலம் செயற்கையாக உருவாக்கப்படும் கெமிக்கல் ஆகும் . இவை "நிரந்தர கெமிக்கல்" என்று அழைக்கப்படும். ஏனென்றால் இவர் காலம் செல்ல செல்ல உடையும் தன்மை கொண்டது கிடையாது. உருவாக்கப்பட்ட போது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கும். இவை உணவு பேக்கேஜிங், மின்னணு சாதனங்கள், அழகு சாதன பொருட்கள் ஆகியவற்றில் இந்த கெமிக்கல் அதிகம் காணப்படும்.

மழை நீர்

மழை நீர்

இந்த கெமிக்கல்கள் உலகம் முழுக்க பல இடங்களில் மழை நீரில் இருப்பதாக University of Stockholm ஆய்வு தெரிவிக்கிறது. முக்கியமாக அண்டார்டிகா போன்ற மனிதர்கள் குறைவாக இருக்கும் பகுதிகளில் கூட இந்த கெமிக்கல் மழை நீரில் உள்ளதாம். இதனால் மழை நீரை குடிக்க கூடாது. இதில் பாதுகாப்பு அளவை விட அதிக கெமிக்கல் உள்ளது. இதனால் மழை நீரை நேரடியாக குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அந்த ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

 20 வருடம்

20 வருடம்

கடந்த 20 வருடமாக மழை நீரில் தூய்மை அளவு குறைந்து கொண்டே வருவதாகவும், இதில் மாசு சேர்ந்து கொண்டே இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இயான் கசின்ஸ் என்பவர் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது. கேன்சரை உருவாக்கும் ஆசிட் என்று அழைக்கப்படும் PFOA ஆசிட் இதில் அதிகம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. PFOA ஆசிட் உள்ள குடிநீர் குடிக்க தகுதி அற்றது என்று இதில் கூறப்பட்டுள்ளது.

 என்ன நடக்கும்

என்ன நடக்கும்

பூமியில் தண்ணீரில் கெமிக்கல் கலந்து அது ஆவியாகி வானத்திற்கு சென்ற நிலையில் மற்ற ஆவிகளுடன் கலந்து இப்படி மழை நீர் எல்லாம் ஒருசேர மாசு பட்டு இருக்கலாம் என்று இந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நீரை குடித்தால் ஆண்மை குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதேபோல் கேன்சர் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல் குழந்தைகளுக்கு பிரச்சனை ஏற்படலாம். எனவே மழை நீராக இருந்தாலும் அதை சூடு காட்டி, சுத்தம் செய்தே குடிக்க வேண்டும். நேரடியாக வானத்தில் இருந்து வருகிறது என்பதால் சுத்தமாக இருக்கும் என்று நினைத்து குடிக்க கூடாது.

English summary
Rain water is not safe anymore to drink says University of Stockholm research. மழை நீரை குடிக்க கூடாது.. அது ரொம்ப ஆபத்தானது என்று சர்வதேச ஆய்வு கட்டுரை ஒன்று சொல்கிறது. பல்வேறு நாடுகளில் விவாதப்பொருளாகி இருக்கும் இந்த ஆய்வுக்கட்டுரை நமது சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை எழுப்பி உள்ளது.உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X