• search
லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இதய நோய் வராமல் இருக்கனுமா.. கரெக்டா இந்த நேரத்தில் தூங்குங்க.. பிரமாண்ட ஆராய்ச்சியில் பளிச் முடிவு!

Google Oneindia Tamil News

லண்டன்: இளம் வயதில் இதய நோய் காரணமாக பலரும் பாதிக்கப்படுவதை சமீப காலங்களாக நாம் பார்த்து வருகிறோம். கன்னட சினிமா நட்சத்திரம் புனித் ராஜ்குமார் 46 வயதில் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கடந்த வாரம் மரணமடைந்த சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியது.

  மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது? எந்த வயதில் யாருக்கெல்லாம் ஏற்படும்? - மருத்துவர் ஜெயராஜா

  இந்த சம்பவத்திற்கு பிறகு இதய நோய் தொடர்பான பரிசோதனை செய்து கொள்வதற்காக மருத்துவமனைகளுக்கு செல்லக்கூடிய மக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

   கஷ்டமா இருக்கு.. ஆப்கனில் சிறுமிகள் விற்பனை, வன்முறை.. 6 மாதத்தில் 460 குழந்தைகள்.. யூனிசெப் பகீர் கஷ்டமா இருக்கு.. ஆப்கனில் சிறுமிகள் விற்பனை, வன்முறை.. 6 மாதத்தில் 460 குழந்தைகள்.. யூனிசெப் பகீர்

  அதே நேரம், வரும் முன் காப்பது தானே சிறந்தது. அதற்கான வழி என்ன என்பதைதான், நீண்ட காலமாக, வெளிநாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அறிவித்துள்ளார்கள்.

  பெரிய ஆய்வு

  பெரிய ஆய்வு

  பிரிட்டன் நாட்டை சேர்ந்த, பயோ பேங்க் ஒர்க், என்ற குழுவினர் சுமார் 88 ஆயிரம் தன்னார்வலர்களிடம் தொடர்ந்து ஆய்வு நடத்தி, இதய பாதிப்பை குறைப்பதற்கு என்ன செய்யலாம் என்பதை கண்டுபிடித்துள்ளனர். இதய பாதிப்பு மட்டுமல்லாது, உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படக்கூடிய, பக்கவாதம் போன்றவை ஏற்படாமல் இருப்பதையும் தடுப்பதற்கு ஒரே வழி என்ன என்பதை தங்கள் ஆய்வில் கண்டுபிடித்து இப்போது அதை உலகத்திற்கு அறிவித்துள்ளனர்.

  இதய நோய், பக்கவாதம் ஏற்படாது

  இதய நோய், பக்கவாதம் ஏற்படாது

  ஐரோப்பிய இதய ஜர்னல் இதழில் இந்த ஆய்வு கட்டுரை வெளியாகியிருக்கிறது. இதன்படி இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் தினமும் தூங்க கூடியதை வழக்கமாக வைத்து இருப்பவர்களுக்கு, இதய நோய் ஏற்படுவதற்கும், பக்கவாதம் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் குறைவு. இந்த ஆய்வில் பங்கேற்ற தன்னார்வலர்கள் கையில் ஸ்மார்ட்வாட்ச் கட்டப்பட்டிருந்தது. அதை வைத்து அவர்கள் எத்தனை மணிக்கு தூங்குகிறார்கள் எத்தனை மணிக்கு விழித்து விடுகிறார்கள் என்பது போன்ற டேட்டா சேகரிக்கப்பட்டது.

  வேறு காரணங்கள் பற்றி ஆய்வு

  வேறு காரணங்கள் பற்றி ஆய்வு

  சுமார் ஆறு வருடங்களாக தொடர்ந்து தன்னார்வலர்களின் உடல்நிலையை ஆய்வாளர்கள் கண்காணித்தபடி இருந்திருக்கிறார்கள். இதில் 3000 பேருக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் 10 மணி அல்லது 11 மணி என்ற நேரத்துக்குப்பிறகு தூங்க சென்றவர்கள் ஆகும். பங்கேற்பாளர்களின், வயது, எடை, கொழுப்பு அளவு போன்றவற்றையும் இதய நோய் தொடர்பான காரணத்தோடு தொடர்புபடுத்தி ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். ஆனால் அதை வைத்து ஒரே மாதிரியான நேர் கோர்ட்டுக்கு வர முடியவில்லை. ஆனால் தாமதமாக தூங்கியவர்களில் தான் பெரும்பாலானோருக்கு இதய நோய் ஏற்பட்டிருக்கிறது என்பது உறுதியாக தெரிய வந்துள்ளது.

  உடல் கடிகாரம்

  உடல் கடிகாரம்

  ஹெல்த்டெக் நிறுவனமான Humaல் பணி புரியும் ஆய்வு ஆசிரியர் டாக்டர் டேவிட் பிளான்ஸ் கூறுகையில், எங்கள் ஆய்வில் இருந்து இதய நோய்க்கான முழு காரணத்தை முடிவு செய்ய முடியாது என்றாலும், முன்கூட்டியே அல்லது தாமதமாக தூங்கும் நேரம் உடல் கடிகாரத்தை சீர்குலைக்கும், இருதய ஆரோக்கியத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சொல்ல முடியும். மிக ஆபத்தான நேரம் நள்ளிரவுக்குப் பிறகு தூங்குவோருக்கு இருந்தது. உடலுக்கு என்று ஒரு கடிகாரம் உள்ளது. அதை மீறக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  இதய ஆரோக்கியம்

  இதய ஆரோக்கியம்

  பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனின் மூத்த இருதய செவிலியர் ரெஜினா கிப்லின் கூறுகையில், "இரவு 10 முதல் 11 மணி வரை தூங்குவது பெரும்பாலான மக்கள் தங்கள் இதயத்தை நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வைத்திருக்க இனிமையான வாய்ப்பாக இருக்கும் என்று இந்த பெரிய ஆய்வு தெரிவிக்கிறது. இருப்பினும், இந்த ஆய்வு இதய பிரச்சினைக்கான ஒரு விஷயத்தை மட்டுமே காட்ட முடியும், வேறு காரணிகளும் இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  English summary
  People who regularly sleep between 10 and 11 o'clock at night are less likely to develop heart disease and stroke, say researchers who have studied 88,000 volunteers.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X