"மக்கள் செத்தால் சாகட்டும்.." அலட்சியம் காட்டிய ரிஷி சுனக்.. பரபர தகவல்! பிரதமர் பதவிக்கு ஆப்பு?
லண்டன்: பிரிட்டன் நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்பாக ரிஷி சுனக் கூறியதாகப் பரவும் தகவல் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கே சிக்கலை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.
கொரோனா வைரஸை பிரிட்டன் எப்படிக் கையாண்டது என்பது குறித்து இப்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து ரிஷி சுனக் கூறியதாகச் சொல்லப்பட்டுள்ள தகவல் தான் இப்போது மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அதாவது, கொரோனா காலத்தில் பிரிட்டனில் நாடு முழுக்க இரண்டாவது லாக்டவுனை அமல்படுத்த ஒப்புக் கொள்ளாத ரிஷி சுனக், "மக்கள் செத்தால் சாகட்டும்" என்று கூறியதாக இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ரிஷி சுனக்: பிரிட்டனில் கொரோனா காலத்தில் அரசின் தலைமை ஆலோசகராக இருந்த பேட்ரிக் வாலன்ஸ் என்பவர் கொரோனா உச்சத்தில் இருந்த போது, கடந்த 2020 அக். 25ஆம் தேதி என்ன நடந்தது என்பதைத் தனது டைரியில் பதிவு செய்துள்ளார். அப்போது போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்த நிலையில், ரிஷி சுனக் நிதியமைச்சராக இருந்தார். அப்போது கொரோனா தொடர்பாக மூன்று பேருக்கும் இடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டிடத்தில் அப்போது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மூத்த ஆலோசகராக இருந்த டொமினிக் கம்மிங்ஸ் என்பவரும் கலந்து கொண்டுள்ளார். அந்தக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து டொமினிக் கம்மிங்ஸ் கூறிய தகவலைத் தான் பேட்ரிக் வாலன்ஸ் தனது டைரியில் பதிவு செய்துள்ளார்.
செத்தால் சாகட்டும்: "அந்த மீட்டிங்கில் மீண்டும் நாடு முழுக்க ஊரடங்கை அமல்படுத்த முடியாது என்ற ரிஷி சுனக், மக்கள் செத்தால் சாகட்டும் என்பது போலச் சொல்கிறார். அவரிடம் தலைமைப் பண்பு சுத்தமாக இல்லை என்பதையே இது காட்டுகிறது" என்று டொனிமிக் கம்மிங்ஸ் கூறியதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரிஷி சுனக்கின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "அவர்கள் இஷ்டத்திற்கு ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு தகவலைக் கூறி வருகிறார்கள். முதலில் அவர்கள் ஆதாரத்தை முழுமையாக வழங்கட்டும். அதன் பிறகு பிரதமர் ரிஷி சுனக் தனது நிலைப்பாட்டை விளக்குவார்" என்று அவர் தெரிவித்தார்.
பரபரப்பு: கொரோனா வைரஸ் பிரிட்டனில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா காரணமாக அங்கே 2.20 லட்சம் பேர் உயிரிழந்தனர். மேலும், இதனால் அந்நாட்டின் பொருளாதாரமும் மிக மோசமாக முடங்கியது. இப்போது பிரிட்டன் சந்தித்து வரும் மோசமான பொருளாதார நெருக்கடிக்கும் கூட கொரோனா சமயத்தில் ஏற்பட்ட பாதிப்பே காரணமாகும். அந்தளவுக்குப் பிரிட்டனைப் புரட்டிப் போட்ட கொரோனா குறித்து ஆய்வு செய்ய அங்கே சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றை கையாள அரசு தயாராக இல்லை என்றும் அப்போது பிரிட்டன் அரசு எடுத்த நடவடிக்கை கொரோனாவை கையாள்வதைச் சிக்கலானதாகவே மாற்றியதாக அதில் கூறப்பட்டது.
பிரதமர் பதவிக்கே சிக்கல்: அந்த காலகட்டத்தில் பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் இருந்தார். அவர் கொரோனாவை மிக மோசமாகக் கையாண்டதாகக் கூறப்பட்டது. இதுவே அவர் பதவியை இழக்கும் ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு வரவும் காரணமாக இருக்கிறது. ஆனால், தற்போது வெளியாகும் ஆதாரங்கள் இரு தரப்பிற்கும் இடையே பெரியளவில் வேறுபாடு இல்லை என்பதையே காட்டுகிறது. இந்த விவகாரத்தில் ரிஷி சுனக்கிற்கு எதிராகக் கூடுதல் ஆதாரங்கள் வெளியானால் அது அவரது பிரதமர் பதவிக்கே சிக்கலை ஏற்படுத்தும்.
முன்னதாக ரிஷி சுனக்கை பிரிட்டன் ஆய்வாளர்கள் Dr. Death என்று அங்குள்ள ஆய்வாளர்கள் கூறியதாகச் சொல்லப்பட்டது. அதாவது கொரோனா காலகட்டத்தில் அப்போது ரிஷி சுனக் "Eat Out to Help out" என்ற திட்டத்தை அறிவித்தார். அதாவது தங்கள் பகுதியில் இருக்கும் சிறு ஹோட்டல் உரிமையாளர்களைக் காப்பாற்றப் பொதுமக்கள் அங்குச் சென்று சாப்பிட வேண்டும் என்பதே இந்தத் திட்டம். இருப்பினும், இது கொரோனா பாதிப்பை அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications