"நம்பிக்கையே இல்லை! நீங்கள் தோல்வி அடைந்துவிட்டீர்கள்.." ரிஷி சுனக் சரமாரி பாய்ச்சல்! ஒரே குழப்பம்
லண்டன்: முன்னாள் பிரிட்டன் உள்துறைச் செயலர் சுயல்லா பிரேவர்மேன் ரிஷி சுனக்கை மிகவும் காட்டமாக விமர்சிக்கும் வகையில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பிரிட்டன் நாட்டில் இப்போது கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், அங்கே ரிஷி சுனக் பிரதமராக இருக்கிறார். அங்கே கடந்தாண்டு இக்கட்டான ஒரு அரசியல் சூழல் ஏற்பட்டு சில வார இடைவெளியில் இரண்டு பிரதமர்கள் ராஜினாமா செய்த நிலையில், அப்போது ரிஷி சுனக் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

பிரிட்டனில் கடுமையான பொருளாதார சிக்கல்கள் நிலவி வந்த நிலையில், அதைத் தீர்க்க ரிஷி சுனக் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இருப்பினும், அங்குள்ள மக்கள் ரிஷி சுனக் மீது அதிருப்தியிலேயே உள்ளனர்.
சர்ச்சை கருத்து: இதற்கிடையே அங்கு ரிஷி சுனக் அமைச்சரவையில் உள்ள மற்றொரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உள் துறை அமைச்சராக இருந்த சுயல்லா பிரவர்மேன் சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்தார். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இங்கிலாந்தில் நடக்கும் கூட்டங்களை பாலஸ்தீனிய சார்பு கும்பல்கள் நடத்துவதாகவும் வெறுப்பு கருத்துகளைப் பரப்பும் அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் லண்டன் போலீசார் எடுப்பதில்லை என்றும் அவர் சாடினார். மேலும், பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டங்களை இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்றும் குறிப்பிட்டிருந்தார் .
இது பெரும் சர்ச்சையான நிலையில் சுயல்லா பிரேவர்மேன் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.இதற்கிடையே டிஸ்மிஸ் செய்யப்பட்ட முன்னாள் பிரிட்டன் உள்துறைச் செயலர் சுயல்லா பிரேவர்மேன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மூன்று பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பிரிட்டிஷ் மக்களுக்கு ரிஷி சுனக் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாகத் தெரிவித்த சுயல்லா பிரேவர்மேன், ரிஷி சுனக்கை பலவீனமான தலைவர் என்றும் விமர்சித்தார்.
கடிதம்: அவர் தனது கடிதத்தில், "முக்கியமான கொள்கைகளில் நீங்கள் எனக்கு அளித்த உறுதியான வாக்குறுதி காரணமாகவே நீங்கள் பிரதமராக நான் உங்களுக்கு ஆதரவு அளித்தேன். இது நமது இரு தரப்பிற்குமான ஒப்பந்தம். ஆனால், உங்கள் வாக்குறுதிகளின் அடிப்படையில் நீங்கள் செயல்படவில்லை. நீங்கள் எனக்கு அளித்த உத்தரவாதத்தை மட்டும் நிராகரிக்கவில்லை. நமது நாட்டிற்கு அளித்த வாக்குறுதியைப் புறக்கணித்துவிட்டீர்கள். என்ன செய்வதாவது உங்களை நிறுத்த வேண்டும் என்ற சூழலுக்குத் தள்ளிவிட்டீர்கள்.
நீங்கள் ஒரு பலவீனமான தலைவர் என்பது தெரிகிறது. நீங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் எண்ணம் உங்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. சட்டவிரோத இடம்பெயர்வைக் குறைப்பது, எல்ஜிபிடி விவகாரம், வடக்கு அயர்லாந்து விவகாரம் ஆகியவற்றில் அவர் தனது வாக்குறுதியை. நிறைவேற்றவில்லை.
தோல்வி: யாராவது ஒருவர் உண்மையைப் பேசியே தீர வேண்டும். பொய்யான உலகில் வாழ்வதால் எந்தவொரு பயனும் இல்லை. உங்கள் திட்டம் வேலை செய்யவில்லை என்பதே உண்மை. சமீபத்தில் நடந்த தேர்தல்களில் வரலாற்றில் இல்லாத மிகப் பெரிய தோல்விகளைச் சந்தித்து வருகிறோம். நமக்கு நேரம் இல்லை. நாம் எதாவது செய்தே ஆக வேண்டும். இந்த தேர்தல் தோல்விகள் நீங்கள் தோல்வி அடைந்துவிட்டதையே காட்டுகிறது" என்றார்.
மேலும், இத்தனை காலம் உள் துறை அமைச்சர் பதவியைச் சிறப்பாகக் கையாண்டதாகத் தெரிவித்த அவர், தனக்குக் கட்சியில் இருந்த ஆதரவு காரணமாகவே அமைச்சர் பதவி கிடைத்ததாகவும் யாருடைய தயவிலும் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications