கவனிச்சீங்களா.. ஃபிளைட்டின் கேபின் கதவை டக்கென திறந்து.. இளம்பெண் செய்த காரியம்.. மிரண்ட பயணிகள்
ஃபிளைட்டில் குழந்தையை வைத்து கொண்டு பெண் செய்த காரியம் வைரலாகி வருகிறது
லண்டன்: பெண் ஒருவர் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு, ஃபிளைட்டில் செய்த காரியம் வீடியோவாக இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. பொதுவாக, பயணங்கள் என்றாலே ஜாலி என்று எடுத்து கொள்ள முடியாது.. எந்த பயணம் என்றாலும், அதை தீர்மானிப்பது நாம் எடுத்து செல்லும் பெட்டி - படுக்கைகள்தான்..
அந்த அளவுக்கு நம் பயணத்தில் உடமைகளின் பங்கு அதிகம் உள்ளது... அளவுக்கு அதிகமான பொருட்கள், நம் பயணத்தின் நோக்கத்தையும் சில சமயங்களில் குறைத்துவிடும்.

பொருட்கள்
எந்த அளவுக்கு குறைவான லக்கேஜ்கள் நம்முடன் இருக்கிறதோ, அந்த அளவுக்கு பயணமும் சிறப்பாக அமையும் என்று பொதுவான கருத்து உண்டு.. சிலர் அளவுக்கு அதிகமான பொருட்கள் அல்லது உடைமைகள் இருந்தால், அதை வேறு ஒரு வாகனங்களில் முன்கூட்டியே அனுப்பி வைத்துவிட்டு, வெறுங்கையுடன் பயணம் மேற்கொள்வதும் நடக்கிறது... இது முக்கியமாக விமான பயணிகளுக்கு பொருந்தும் உண்மை.

இளம்பெண்
இந்நிலையில், விமானத்தில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வீடியோவாக வைரலாகிறது.. அந்த வீடியோவில், இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் ஃபிளைட்டில் பயணிக்கிறார்.. பயணம் முடிந்து அனைத்து பயணிகளும் இறங்க தயாராகி கொண்டிருக்கிறார்கள்.. அப்போது இளம்பெண்ணும், சீட்டில் இருந்து எழுந்து இறங்க தயாராகிறார்.. ஒரு கையில் தனது கைக்குழந்தையை வைத்துள்ளார். மறு கையில் சீட்டுக்கு மேலிருக்கும் கேபினில் இருந்து தன்னுடைய சூட்கேஸை எடுக்கிறார்.. அப்போது யாருடைய உதவியையும் அந்த பெண் எதிர்பார்க்கவில்லை..

ஜிம்னாஸ்டிக்
அவராகவே மேலுள்ள அந்த கேபினின் கதவை திறந்து, தன் பெட்டியை எடுத்து கொண்டு, மீண்டும் அந்த கேபின் கதவை தன்னுடைய காலை நேர் மேலே தூக்கி அசால்ட்டாக மூடுகிறார்... இதை பார்ப்பதற்கு அவர் ஏதோ ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை போலவே இருக்கிறது.. இதை ஃபிளைட்டில் இருந்து பார்த்த சக பயணிகள் ஆச்சரியத்தில் மிரண்டு விட்டனர்.. அந்த பெண் நினைத்திருந்தால், அந்த கேபினை மூடாமல்கூட சென்றிருக்கலாம்.. அவர் நிலைமை அப்படித்தான் அங்கு இருந்தது.. ஆனாலும் கடமையை சரியாக செய்துள்ளார்..

தாய்மார்கள்
இதுதான் வீடியோவாக வெளியாகி உள்ளது.. நம்ம ஊரில் கைக்குழந்தையை எடுத்து கொண்டு, ஊர்களுக்கு செல்லும் தாய்மார்களின் நிலைமை பெரும்பாலும் பரிதாபத்தையே தரும்.. இரவெல்லாம் குழந்தைகளை கண்விழித்து கவனித்து கொள்வார்கள்.. ஆனால், இந்த பெண்ணோ, யார் உதவியையும் எதிர்பாராமல் தானாகவே கேபின் கதவை அசால்ட்டாக மூடிவிட்டார்.. இவரது துணிச்சலுக்கும் திறமைக்கும் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்...












Click it and Unblock the Notifications