ஹய்யோ.. சூப்பர் மார்க்கெட்டில் தோண்ட தோண்ட "எலும்புக்கூடுகள்".. கொத்து கொத்தாக மனித உடல்கள்.. கொடுமை
சூப்பர் மார்க்கெட் கட்டிடத்தின் அடியில் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன
லண்டன்: ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரின் அஸ்திவாரத்தில் தோண்ட தோண்ட குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கிடைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இங்கிலாந்து நாட்டின் ஹாவர்போர்ட்வெஸ்டில் ஒரு பிரபலமான சூப்பர் மார்க்கெட் உள்ளது.. ஆனால், இது கடந்த 2013ம் ஆண்டு முதல் மூடப்பட்டு பயன்பாடற்று கிடக்கிறது.
இந்நிலையில், அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோரை மேம்படுத்துவதற்காக முடிவெடுத்துள்ளனர்.. அதனால், அந்த கட்டிடத்தை இடித்து தள்ளி, அப்புறப்படுத்தும் பணியும் துவங்கப்பட்டுள்ளது.

மனித எலும்புகள்
கட்டிடத்தின் அஸ்திவாரத்தை தோண்டும்போது, திடீரென மனித எலும்பு கூடுகளும் ஆங்காங்கே சிதறி கிடந்தன.. அதிர்ச்சியடைந்த கட்டுமான பணியாளர்கள், உடனடியாக உள்ளூர் நிர்வாகத்திற்கு தகவல் தந்தனர்.. விரைந்து வந்த அவர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புலனாய்வு அமைப்பினர் மேற்பார்வையில், அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோரின் அஸ்திவாரத்தை மேலும் பல அடிகள் தோண்டினர்.

அஸ்திவாரம்
அப்போது தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள் வந்து கொண்டேயிருந்தன.. அதில் பெரும்பாலும் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் என்கிறார்கள்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் எலும்பு கூடுகள் உட்பட மொத்தம் 240க்கும் மேற்பட்டவர்களின் எலும்பு கூடுகள் கிடந்தன... இதை பார்த்து அதிர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த எலும்புக்கூடுகளை சேகரித்து ஆய்வுக்கு கொண்டு சென்றனர்.. பின்னர், இதுகுறித்து தொல்பொருள் அறக்கட்டளையின் மேற்பார்வையாளர் ஆண்ட்ரூ ஷோப்ரூக் சொன்னதாவது:

எலும்பு கூடுகள்
"300 வருடங்களுக்கு முன்பு இந்த இடம், சுடுகாடாக இருந்திருக்கலாம்... கைப்பற்றப்பட்ட எலும்பு கூடுகளை ஆய்வு செய்தபோது, அந்த எலும்பு கூடுகளின் உடல்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. சிலவற்றின் தலையில் காயங்கள் உள்ளன.. இவை போர்க் காயங்களுடன் ஒத்துப்போகின்றன. இதுவரை 240 பேரின் எலும்பு கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன... இதே இடத்தில் தோண்டினால், ஏராளமான எலும்பு கூடுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அநேகமாக கடந்த 1405ம் ஆண்டில் நடந்த போரில் இவர்கள் தாக்கப்பட்டிருக்கலாம்.. ஓவைன் க்ளின்டோர் என்ற அரசன் இங்கு ஆண்டு கொண்டிருந்தான்.. அவனது தலைமையிலான பிரெஞ்சு மற்றும் வெல்ஷ் படைகளின் தாக்குதலால், இவர்கள் பலியாகி புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது..

240+ எலும்புகள்
ஆனால், இங்கிலாந்து வரலாற்றிலேயே, இதுவரை இவ்வளவு பெரிய புதைக்குழியை யாருமே பார்த்ததில்லை. கிட்டதட்ட 18ம் நூற்றாண்டு வரை இந்த இடம் சுடுகாடாக இருந்திருக்க வாய்ப்புள்ளது... வரும் ஜனவரி வரை இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும்.. அப்போது இதுகுறித்த மேலும் தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம்" என்றார்.. சூப்பர் மார்க்கெட்டின் அஸ்திவாரத்தில் 100 குழந்தைகள் உட்பட 240 பேரின் எலும்பு கூடுகள் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை இங்கிலாந்தில் ஏற்படுத்தி வருகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications